• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-10-08 11:59:12    
புதிய ரக மருத்துவக் காப்பீட்டு அமைப்பு முறை

cri

130 கோடி சீன மக்கள் தொகையில் 70 விழுக்காட்டினர் விவசாயிகளாவர். முன்பு மருத்துவக் காப்பீட்டு இல்லாத நிலையில் விவசாயிகள் சுயமாக மருத்துவக்கட்டணம் கட்ட வேண்டும். நோய்வாய்ப்பட்டால் வறுமைக்குள்ளாக்கப்படுவர். வறுமையின் முக்கிய காரணங்களில் நோய் ஒன்றாகும். புள்ளிவிபரத்தின் படி கிராமப்புறத்தில் இதன் காரணமாக வறுமையாக்கு ஆளானோர் எண்ணிக்கை சீனாவின் வறிய மக்கள் தொகையில் 50 விழுக்காடாகும். இந்த நிலைமையை மாற்றும் வகையில் சில பகுதி கிராமங்களில் புதிய ரக மருத்துவக் காப்பீட்டு அமைப்பு முறையான ஒத்துழைப்பு மூல மருத்துவக்அமைப்புமுறை மேற்கொள்ளப்படுகின்றது. செச்சியான் மாநிலத்தின் சோசின் மாவட்டம் சோதனை இடங்களில் ஒன்றாகும்.

சோசின் மாவட்டமானது மாதிரி வேளாண் பிரதேசமாகும். மாவட்டத்தின் சுமார் 7 லட்சம் மக்கள் தொகையில் 80 விழுக்காட்டுக்கு மேலானோர் விவசாயிகளாவர். ஒத்துழைப்பு மூல மருத்துவக்அமைப்பு முறையைப் பிரச்சாரம் செய்யும் போக்கில் நடுவண் அரசு, உள்ளூர் அரசாங்கம், விவசாயி ஆகிய முத்தரப்பும் கூட்டாக நிதி ஒதுக்கீடு செய்யும் ஒத்துழைப்பு மருத்துவக்நிதியை நிறுவுவது முக்கியமான நடவடிக்கையாகும். உள்ளூர் விவசாயிகள் ஆண்டுக்கு 25 யுவானை கட்டி ஒத்துழைப்பு மருத்துவக் காப்பீட்டுமுறை அனுபவிக்கலாம். நோய்வாய்ப்பட்டால் விகிதாசாரத்தின் படி மருத்துவக்கக் கட்டணத்துக்காகப் பணம் திரும்பப் பெறலாம். இதன் மூலம் தனிநபரின் பொருளாதார சுமை குறையும். ஒத்துழைப்பு மருத்துவக்அமைப்பு முறை பற்றி சோசின் மாவட்ட நலவாழ்வு துறையின் துணைத் தலைவர் சன் கோ சியான் அறிமுகப்படுத்துகின்றார்.

மிக குறைவான வாழ்க்கை காப்பீட்டுக் கோட்டின் கீழ் வாழ்ந்துவரும் விவசாயி மருத்துவக்மனையில் தங்கி சிகிச்சை பெற்ற செலவில் 50 விழுக்காட்டுக் கட்டணத்தைத் திருப்பி வாங்கலாம். எவ்வளவோ செலவிட்டாலும் அவர்களுக்கு இந்த விகிதாசாரத்தில் பணம் கிடைக்கும். ஏனென்றால் அவர்களுக்கு உதவித் தொகை வழங்குவது மிகவும் தேவையானது. இரண்டாவது, இன்னலுக்கு ஆளான குடும்பங்களில் விவசாயி ஒருவர் மருத்துவக்மனையில் சிகிச்சை பெறுவதற்காகச் செலவிட்ட தொகை 10 ஆயிரம் யுவானைத் தாண்டினால் குறிப்பட்ட அளவு அவருக்கு உதவித் தொகை வழங்கப்படும். மூன்றாவது ஆண்டுக்குள் சிகிச்சைக் கட்டணம் மொத்தமாக 15 ஆயிரம் யுவானைத் தாண்டிய விவசாயிக்கும் குறிப்பட்ட அளவு உதவித் தொகை வழங்கப்படும். இந்தக் கொள்கை சில விவசாயிகள் நோய்வாய்ப்பட்டு வறியவரான பிரச்சினையைத் தீர்ப்பதற்கு துணை புரிகின்றது என்று துணைத் தலைவர் சன் கூறுகின்றார். இதுவரை சோசின் மாவட்டத்தின் விவசாயிகளில் 90 விழுக்காட்டுக்கு மேலானோர் இந்த மருத்துவக்அமைப்பு முறையில் கலந்து கொண்டுள்ளனர். நலன் பெற்ற விவசாயிகள் சிகிச்சை பெற விவசாயிகளுக்கு உதவும் அமைப்பு முறை என இதைப் பாராட்டுகின்றனர். கிராமப்புற ஒத்துழைப்பு மூல மருத்துவக்அமைப்பு முறையில் கலந்து கொள்வதன் மூலம் சோசின் மாவட்டத்தின் விவசாயிகள் சிகிச்சைக்காகச் செலவிட்ட தொகையில் 60 விழுக்காடு குறைக்கப்பட்டது.

இந்த அமைப்பு முறை கிராமப்புறத்தில் நடைமுறைக்கு வந்த பின் அங்குள்ள அடி நலவாழ்வுச் சூழ்நிலை பெரிதும் மேம்பட்டுள்ளது. முன்பு, சோசின் மாவடத்தின் கிராமங்களிலுள்ள மருத்துவக்நலவாழ்வு வசதி நகரங்களில் இருந்ததுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் பெரும் இடைவெளி நிலவியது. வட்டம் மற்றும் பட்டினங்களிலுள்ள நலவாழ்வு நிலையங்களில் எளிய வசதி விவசாயிகளின் மருத்துவக் கோரிக்கையை அது நிறைவேற்ற முடியாது. கடந்த 2 ஆண்டுகளில் கிராமப்புறத்தில் ஒத்துழைப்பு மருத்துவக்நடவடிக்கை மேற்கொள்வதன் மூலம் அரசு மற்றும் சமூகத்தின் நிதியை குவித்து மாவட்ட நிர்வாகத்தின் கீழுள்ள 15 வட்ட மருத்துவக்மனைகள் புனரமைக்கப்பட்டு விரிவாக்கப்பட்டுள்ளன. புஃசியன் சுன் மருத்துவக்மனை இவற்றில் ஒன்றாகும். முந்திய வசதியுடன் ஒப்பிட்டுகையில் மிகவும் தெளிவான மாற்றம் காணப்பட்டுள்ளது என்று மருத்துவ மனைத் தலைவர் மா கோசியான் அறிமுகப்படுத்துகின்றார்.

1972ல் கிராமப்புற மருத்துவக்பணியில் ஈடுபட்டேன். அப்போது மருத்துவ வசதி குறைவு. மருந்துப் பெட்டி, நெஞ்சுத்துதடிப்பு மானி, ரத்த அழுத்தக் கருவி, அக்குபஞ்சர் ஊசி ஆகியவை மட்டும் பொருத்தப்பட்டன. தற்போது எங்கள் புதிய மருத்துவக்மனை கட்டியமைக்கப்பட்டுள்ளது. சிகிச்சை சாதனங்கள் அதிகரித்துள்ளன. மருத்துவக்ஊழியர்களின் கல்வியறிவு உயர்ந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் சிகிச்சை பெற மருத்துவ மனைக்கு வந்தோரின் எண்ணிக்கை 30 விழுக்காடு அதிகரித்துள்ளது என்றார் அவர். வட்ட மருத்துவக்மனையைப் புனரமைப்பது தவிர, சோசின் மாவட்டம் 135 கிராமங்களிலும் மருத்துவக்நிலையங்களை நிறுவியுள்ளது.

தலைமுறை தலைமுறையாக ஹோவான் கிராமத்தில் வாழ்கின்ற சோ யு சியென் எனும் முதியவர் அங்குள்ள மருத்துவக்நிலையத்தின் பணி மீது மன நிறைவு கொள்கின்றார். 

கிராமவாசிகள் மருத்துவ நிலையம் குறித்து மன நிறைவு கொள்கின்றனர். இது சிறப்பானது. முன்பு மருத்துவக்நிலையம் இல்லை. நோய்வாய்பப்பட்டால் வட்டார மருத்துவ மனைக்குத் தான் போக வேண்டும். இப்போது நல்ல வசதி. வயதான நான் அங்குப் போவது சிரமம். கிராமத்தில் மருத்துவ நிலையம் நிறுவப்பட்ட பின் மருத்துவரைப் பார்ப்பது எளிதாக இருக்கிகின்றது. தடிமன் இருமல் ஏற்பட்டால் கிராம மருத்துவக்நிலையத்தில் சிகிச்சை பெற முடிகின்றது என்றார் முதியவர் சோ.

மருத்துவக்சிகிச்சைக் கட்டணச் சுமை குறைந்து மருத்துவச் சூழ்நிலை மேம்பட்டிருப்பதுடன் சோசின் மாவட்ட விவசாயிகள் முன்பு மருத்துவ மனையில் சிகிச்சை பெற விரும்பாத நிலை மாறிவிட்டது. இவ்வாண்டின் முற்பாதியில் சராசரியாக ஒவ்வொரு விவசாயியும் 4 முறை மருத்துவக்மனையில் சிகிச்சை பெற்றனர்.

2006ம் ஆண்டில் செ சியான் மாநிலத்தில் புதிய ரக ஒத்துழைப்பு மருத்துவக்அமைப்பு முறை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. செச்சியான மாநிலம் போல சீனாவின் மற்ற மாநிலங்களின் கிராமப்புறத்தில் இத்தகைய மருத்துவக்அமைப்பு முறை சோதனைமுறையில் மேற்கொள்ளப்பட்டு சாதனை காணப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டில் கிராமப்புற ஒத்துழைப்பு மூல மருத்துவக்அமைப்புமுறை அடிப்படையில் சீனாவின் கிராமப்புறம் முழுவதிலும் பரவக் கூடும். அப்போது சீன விவசாயிகள் கட்டணம் செலுத்த முடியாத நிலையில் நோய்னால் அல்லல்படும் பிரச்சினையும் இன்னலுடன் சிகிச்சை பெறும் பிரச்சினையக்கும் விடிவு காலம் பிறந்துவிடும்.