• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-10-08 09:33:50    
நேயர்களின் கருத்துக்கள் 22

cri
அடுத்து, இசை நிகழ்ச்சி பற்றிய கருத்துக்களைக் கேட்டு மகிழுங்கள்.

A:--இசை நிகழ்ச்சி அருமையாக இருந்தது. இருந்தாலும் ஒரு தமிழ்ப்பாட்டு போட்டு இருந்து இருந்தால், மேலும் அருமையாக இருக்கும் என்று, கண்டமங்கலம் A.முஜீபுர் ரஹ்மான் கருத்து தெரிவித்தார்.

B: --குழந்தைகள் நாள் முன்னிட்டு, குழந்தைகளின் கனவு வண்ணமயமானது என்று தமிழில் கூறி வழங்கிய பாடல் மிக அருமை எனக்கு சீன மொழி புரியாவிட்டாலும் பாடல் வரிகள் மிக அருமையாக தமிழில் கூறப்பட்டது மிக நன்றி என்கிறார் 30 பள்ளிப்பட்டி, S.வெங்கடேஸ்.

A: --தொடர்ந்து சீன நாட்டுப்புற பாடலான இரண்டு பாடல் ஒலிக்கப்பட்டது. இசை நிகழ்ச்சி குழந்தைக்கு முக்கியம் என அன்பு குழந்தைக்களுக்காக தாய் பாடும் பாடல் கேட்பதற்கு மிக இனிமையானது. இந்த நிகழ்ச்சி மிக அருமையாக இருந்தது என்று நீலகிரி, கே.அடைக்கலம்.

B:--இந்த நிகழ்ச்சியை ஆர்வமுடன் கேட்டு மகிழ்ந்தேன். ஜுன் 5ம் நாள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை போட்டி அதற்கேற்ற பாடல்கள் நிகழ்ச்சியில் இடம்பெற்று ஒலித்தன. இதயத்தில் ஒரே ஒரு கிராமம், பாதுகாக்கப்பட வேண்டிய நிலம், ஆகிய இரண்டு இனிய பாடல்கள் பாடல்களுக்கான விளக்கங்களோடு ஒலி வலம் வந்தன என்கிறார் எஸ்.நாட்டாமங்கலம், A.மாதுராஜ்.

A: இனி, செய்திகள் மற்றும் செய்தித்தொகுப்பு பற்றிக் காண்போம்.

B:--செய்திகளில், சீன திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் 1280 கோயில்கள் இருப்பது பற்றியும், தற்போது கோயில்களை பழுது பார்க்கவும் புது கோயில்களை கட்டியமைக்கவும், சீன மத்திய அரசு 40 கோடி ரென்மின்பியவானை ஒதுக்கியுள்ளது என்பதைக் கேட்டறிந்தேன். கம்யூனிஸ்ட் நாடான சீனாவில் மத உரிமைகள் சீராக உள்ளது என்பதற்கு இது என்று போதும். மத வழிபாட்டுத் தளங்களில் வசதிகள் செய்து கொடுத்து வரும் சீன அரசு பாராட்டுக்குரியது என்கிறார் சத்திரப்பட்டி, E.S.M.பாண்டியராஜா.

A:--செய்தியில், இந்தியாவும் சீனாவும் இணைந்து உருவாக்கிய உலகிற்கு வழிகாட்டியாக விளங்கும் பஞ்ச சீல கொள்கையின் 50ம் ஆண்டு நிறைவு விழா பற்றிய குறிப்பைக் கேட்டேன். நம் இரு நாடுகளும் இதை நன்கு பிரச்சரப்படுத்தி சமாதானமான சமத்துவமான உலகை உருவாக்க பாடுபடும் என நம்புகின்றோம் என்கிறார் மணமேடு, M.தேவராஜா.

B:--குழந்தைகளுக்கு கல்வி எனும் செய்தித்தொகுப்பைக் கேட்டறிந்தேன். பெய்ஜிங் மாநகரில் தற்பொழுது 2 லட்சம் குழந்தைகள் பள்ளக்கு செல்கிறார்கள். கிராம்ங்களிலிருந்து நகரங்களுக்கு வேலைக்காக வருகின்றனர்களுடன் தங்கள் குழந்தைகளும் நகரிலுள்ள பள்ளிகளில் சேருகிறார்கள். இதனால் வருகின்ற ஆண்டுகளில் சீன நகர்ப்புறங்களில் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக கூடும் என்கிறார், சேந்தமங்கலம், கே.சுந்தரம்.

A:--சீனாவின் தெற்குப் பகுதியில் இருந்து வடக்குப் பகுதிக்கு நீரை எடுத்துச் செல்லும் பணித் திட்டம் பற்றிக் கேட்டேன். இந்தத் திட்டத்தின் மூலம், சீனாவின் வடக்குப் பகுதி வேளாண்துறையிலும், மற்ற துறைகளிலும் மாபெரும் வளர்ச்சி அடையும் என்பதை அறிந்துகொண்டேன் என்கிறார், S.K.பாப்பம்பாளையம், P.T.சுரேஷ்குமார்.