• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-10-09 15:46:02    
சீனாவின் முதலாவது பார்முலா-1 வீரர்

cri

உலகில் பல விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. கால்பந்து, கிரிக்கெட், டென்னிஸ், ரக்பி, மேசைப் பந்து, கூடைப்பந்து, கைப்பந்து, பூப்பந்து என இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். இவற்றுடன் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு காரோட்டும் போட்டி ஒன்று பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகின்றது. அது தான் FORMULA ONE CAR RACE புகழ்பெற்ற நிறுவனங்களின் ஆதரவுடன் வீரர்கள் இதில் கலந்து கொள்கின்றனர். ஜெர்மனியின் மைக்கேல் ஷுமேக்கர், இன்று இந்தப் போட்டியின் தலைசிறந்த நாயகனாக ஈடு இணையற்ற வீரராக விளங்குகின்றார். மேசைப்பந்து, பூப்பந்து ஆகியவற்றில் கொடி கட்டிப் பறக்கும் சீனாவின் பார்வை, இப்போது இந்தப் போட்டியின் பக்கம் திரும்பியுள்ளது. காரணம் 2004 செப்டம்பர் 26இல், ஷாங்காயில் சீன கிராண்ட் பிரி கார் பந்தயம் துவங்கவுள்ளது. இதற்கு அச்சாரம் வழங்கியிருக்கும் சீன வீரர் துங் ஹோ பின் ஆவார். சீனாவின் முதலாவது FORMULA ஒன்று வீரராக மாறத் துடிக்கும் இந்த இளைஞர், நெதர்லாந்தில் பிறந்து வளர்ந்தவர். வயது 21. டிசம்பர் 11 வியாழனன்று ஸ்பெயினில் F1 போட்டியின் தேர்வில் துங் கலந்து கொண்டார். இவ்வாண்டின் BME ஆசிய தொடரில் வெற்றி பெற்றதன் விளைவாக இந்த வாய்ப்பு இவருக்கு வழங்கப்பட்டது. 4.428 கிலோமீட்டர் தூரம், மொத்தம் 42 சுற்று, 33வது சுற்றில் 1 நிமிடம் 22.082 விநாடி எனும் சிறந்த ஓட்ட நேரத்தில் தூரத்தைக் கடந்தார். தலைசிறந்த வீரர்களில் ஒருவரான மோன்டோயாவை விட 4 விநாடிகள் மட்டுமே கூடுதல் என்பது குறிப்பிடத்தக்கது. "F 2என்பது என்னைப் பொறுத்தவரையில் கனவு அல்ல. இலட்சியம்" என்றார் துங். இது அவர் குரல் அல்ல.

ஆயிரக்கணக்கான சீன விளையாட்டு ரசிகர்களின் ஒருமித்த குரல், இந்த தெரிவு ஓட்டத்துக்குப் பின் செய்தி ஊடகங்கள் இவரைப் பெருமைப்படுத்தி, செய்தி வெளியிடலாயின. மனிதரை ஏற்றிச் சென்று வெற்றி கண்ட சீனாவின் ஷென்ஷெள-5 போல "தொழில் நுட்பத் திருப்பு முனை"இவர் என்று செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். "என் நிழற்படம், பல பத்திரிகைகளில் இடம் பெற்றுள்ளது. இதைப் பார்க்க பெருமையாக இருக்கிறது, ஆனால் இது என்னை மாற்றி விடவில்லை"என்று தடக்கத்துடன் பேசுகிறார் துங் ஹோ பின். சரி, F1 கார் ஓட்டும் போட்டியில் கலந்து கொள்வது பற்றி என்ன கருதுகிறார் ? "இது வாழ்நாளில் நான் கண்ட கனவு. F1 காரில் உட்கார்ந்திருப்பதை ஒரே வார்த்தையில் வர்ணிக்க வேண்டுமானால் FANTASTIC"என்கிறார் துங். வில்லியம்ஸ் அணிக்காக அதில் இடம் பெறுவதற்காக மோண்டோயா, ரால்ப் ஷுமேக்கர் ஆகிய 2 ஜாம்பவான்களுடன் துங் போட்டி போட வேண்டியுள்ளது. "இவ்விருவரும் எனக்கு எடுத்துக்காட்டாக முன்மாதிரி வீரர்களாக விளங்குபவர்கள். எனக்குப் பேருதவி புரிந்ததிருக்கின்றனர்"என்கிறார் துங். இனி, பயணம் செய்ய வேண்டிய பாதை நீண்டது என்பதை இவர் நன்கு உணர்ந்திருக்கிறார். "42 சுற்று என்பது மழைத்துளி மாதிர், கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம்" என்கிரார் துங். அடுத்த ஆண்டு போட்டியின் எந்தப் பிரிவில் துங் கலந்து கொள்வார் என்று இப்போது தீர்மானிக்கவில்லை. துங், கார் ஓட்டுவதை முதன்முதலாகப் பார்த்த போது "சிறப்புத்" தன்மை இடம்பெற்றதை உணர்ந்தேன்.

கை, கால்களுடன் மூளையையும் பயன்படுத்தி அவர் கார் ஓட்டுகிறார் என்று பெருமிதத்துடன் கூறுகிறார் துங்சின் மேலாளரான விங்க்லெர். தவிர, துங் நேர்மையானவர். தவறிழைத்தால் அதை ஒப்புக் கொள்கிறார். திருத்திக் கொள்ள முனைகிறார். ஆண்டுதோறும் உலகில் FORMULA ஒன்று போட்டியில் கலந்து கொள்ள 20 பேருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கிறது. கடுமையான போட்டி நிலவும் கார் பந்தயப் போட்டியில் சீன வீரர் துங் இடம் பெறுவாரா? இடம் பெற்றாலும் தாக்கு பிடிப்பாரா?காலம்தான் பதில் சொல்ல வேண்டும். "கடுமையாகத் தொடர்ந்து உழைப்பேன்" என்று தீர்மானமாகக் கூறுகிறார் துங் ஹோ பின். துங்கின் பிறந்த நாள் 4 டிசம்பர் 1982 உயரம் 1.75 மீட்டர்; எடை 60 கிலோ. இன்னும் திருமணம் ஆகவில்லை. புகுமுக வகுப்பு படித்த இவர் சீனம், டச் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், கிரேக்கம் இலத்தீன் ஆகிய மொழிகளைக் கற்றவர். பல்கலைக்கழகத்தில் பொருளியலும் சட்டமும் பயின்ற துங், FORMULA ஒன்று போட்டியில் "பளிச்"என மின்னுவாரா?