• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-10-10 14:17:39    
சீனாவின் 55 ஆண்டுகள் பற்றிய பொது அறிவு போட்டி

cri
நேயர்களே, நவ சீனாவின் 55 ஆண்டு எனும் பொது அறிவு போட்டி ஆகஸ்ட் திங்களில் அதிகாரப்பூர்வமாக துவங்கியது அது முதற்கொண்டு அது தொடர்பான 8 வினாக்கள் இடம் பெறும் வினாத்தாட்கள் மொத்தம் 55 ஆயிரத்தை அஞ்சல் மூலம் தங்களுக்கு அனுப்பியுள்ளோம். மன்றத்தின் விருப்பத்தின் படி இந்த முறை கூடுதலாக விடைத் தாள்களை அச்சிட துணை புரியும் வகையில் தங்களுக்குத் தேவையான அளவு முன்பை விட அவ்வளவு அவசரமாக இல்லை. இது சீரான சூழ்நிலையாகும். மேலும் கூகடுதலான வினா தாள்கள் தேவைப்பட்டால் அஞ்சல் அல்லது ஈமேல் மூலம் எங்களுக்கு கோரிக்கை முன்வைக்கலாம்.

பொது அறிவு போட்டிக்கான 4 கட்டுரைகள் இரண்டு முறையாக வானொலி மூலம் ஒலிப்பரபாயின. நேயர்களுக்கிடையில் நிலவிய ஐயப்பாடுகள் பற்றி கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் முடிந்த வரை விளக்கி கூறியுள்ளோம். இது மட்டுமல்ல் தொலைப் பேசி மூலம் நேரடியாக விடையளித்தோம். அண்மையில் முணுகப்பட்டு பி கண்ணன் சேகருடன் தி கலையரசி தொலை பேசி மூலம் தொடர்பு கொண்டு நேயர்களுக்கு சேவைபுரிந்தார். இது பற்றிய விவபரம் இன்றைய கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஆக்ஸ்ட் திங்கள் 7ம் நாள் ஒலிபரப்பாகிய கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் முணுகப்பட்டு பி கண்ணன் சேகர் அவர் இடம் பெறும் வேலூர் நேயர் மன்ற உறுப்பினர்கள் எப்படி நடப்பு போட்டியில் கலந்து கொள்வது, விடைத் தாள்களை எப்படி தயாரிப்பது பற்றி கண்ணன் சேகர் விபரமாக அறிமுகப்படுத்தினார். வானொலியில் விபரமாக அறிமுகப்படுத்திய போதிலும் இணையதளத்தில் கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் நாம் தங்களுக்கு மீண்டும் அறிமுகப்படுத்துகின்றோம்.

வேலூர் நேயர் மன்றத்தின் தலைவர்கள் இந்த முறை புதிய வழிமுறையை மேற்கொண்டு மன்ற உறுப்பினர்களை போட்டியில் கலந்து கொள்ளுமாறு அணித்திரட்டியுள்ளனர். முதலில் மன்ற உறுப்பினர்களை அணிதிரட்டி கூட்டம் நடத்தி கட்டுரைகளில் நிலவிய சந்தேகம் பற்றி விளக்கி கூறினார்கள், பின் மன்ற உறுப்பினர்கள் சுய விருப்பத்தின் படி தலாக்கு 2000 விடைதாள்களை அனுப்புமாறு கோரிக்கை விடுத்தனர். இந்த ஈராயிரம் வினாத்தாள்களை சுய செலவில் கணிணிக் கடைக்காளரிடம் கட்டணம் செலுத்தி வாங்க வேண்டும். இதற்கு முன் மன்ற பொறுப்பாளர்கள் கடைக்காளரிடம் மொத்த வினாத்தாள் எண்ணிக்கை சொல்லி தகவல் தந்தனர். ஒவ்வொரு மன்ற உறுப்பினரும் தமக்கு தேவையான வினாதாள்களைத் தெரிவித்து பணம் செலுத்திய பின் வினாதாள்களைத் வாங்கலாம். ஒழுங்கான முறையில் மன்ற சின்னம் அச்சிடப்பட்ட வினாதாள்களில் விடைகளை அளித்தால் சரி பார்ப்பது எளிது. அனுப்புவதும் எளிதானது. காட்சிக்கு வைக்கப்பட்டால் சரியான முறையில் பார்வையாளர் கண்களுக்கு விருந்து தர முடியும் என்ற எண்ணத்துடன் வேலும் நேயர் மன்ற பொறுப்பாளர்கள் முயற்சி செய்துள்ளனர். இது பாராட்ட தக்கது. பிரச்சாரம் செய்யவும் தக்கது. மற்ற நேயர் மன்றம் அவர்களைப் பின்பற்றி செயல்படலாம். அல்லது தங்கள் திட்டத்தின் படி நடப்பு போட்டியில் கலந்து கொள்ளலாம்.

நவெம்பர் திங்கள் இறுதிக்கு அதாவது விடைத் தால் அனுப்பப்படும் இறுதி நாளுக்கு இன்னும் ஒன்றரை திங்கள் இருக்கின்றது. இதற்கிடையில் நேயர்கள் சீக்கிரமாக விடைகளை வினாதாள்களில் நிரப்பி எங்களுக்கு அனுப்ப வேண்டும். இலவச கடித உறை போதாது என்றால் எங்களுக்கு விரைவாக தெரிவியுங்கள். நாங்கள் உடனே தங்களுக்கு அனுப்புவோம். முடிந்த வரை நடப்பு அறிவுப் போட்டியில் பங்கு கொள்ளுங்கள். எதாவது சந்தேகம் இருந்தால் தாராளமாக எங்களிடம் தெரிவியுங்கள். வெவ்வேறான கருத்துக்களுக்கு வரவேற்பு தெரிவித்து அவற்றை ஏற்றுக் கொள்வோம். நன்றி. வணக்கம்.