• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-10-12 13:32:31    
தண்ணீர் பற்றாக்குறையும் நவீன அறிவியல் தொழில் நுட்ப தகவலும்

cri

நவீன சமூகத்தில் பொருளாதார வளர்ச்சியுடன் அதற்கு தேவையான தண்ணீர் பெரிதும் அதிகரித்துள்ளது. ஆனால் மூல வளம் என்ற முறையில் தண்ணீர் அளவில் கட்டுப்பாட்டு வரம்பு உண்டு. உலகின் மக்கள் தொகை அதிகரித்துள்ளதால் தண்ணீர் மீதான அவர்களின் தேவை அளவு அதிகரித்துவருகின்றது. இதைத் தவிர, தொழிற்துறை மற்றும் போக்குவரத்து துறைகளின் வளர்ச்சியுடன் தண்ணீர்ப் பயன்பாடு ஓங்கி உயர்ந்துள்ளது.

நகரங்களின் விகிதாசாரம் தொடர்ந்து விரிவடைந்ததால், பூமியில் குடிநீர் மூவவளம் அளவில் குறைந்துவரும் நிலையில் உள்ளது. தொடர்புடைய புள்ளிவிரபத்தின் படி தற்போதைய உலகின் நகர வாசிகளின் தொகை மக்கள் தொகையில் 30 விழுக்காட்டுக்கு மேல் வகிக்கின்றது. பல வளர்ந்த நாடுகளின் நகரவாசிகளின் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையின் மூன்றில் இரண்டு பகுதியைத் தாண்டியுள்ளது. எடுத்துக்காட்டாக நகரில் ஒவ்வொரு சதுர கிலோமீட்டரில் 30 ஆயிரம் பேர் வாழ்கின்றனர். மழை 1000 மின்னி மீட்டர் அளவில் பெய்கின்றது. அப்போது ஒவ்வொருக்கு மழை நீரளவு சுமார் 33 கன மீட்டராகும். ஒவ்வொருவருக்கும் சராசரியாக 400 கன மீட்டர் தண்ணீர் விநியோகிப்பதென்ற தாழ்ந்த இலக்கு அடைய வேண்டுமாயின் குறைந்தது 13 சதுர கிலோமீட்டர் அளவுடைய மழை நீர் 30 ஆயிரம் பேருக்கான தண்ணீர் தேவையை நிறைவு செய்யலாம். தவிர நகருக்கு தண்ணீர் தேவைப்படுகின்றது. நீர் வெளியேற்றமும் தேவை. இந்தத் தண்ணீர் பயன்படுத்தப்பட்டதால் நீர் ஊற்றுமூலத்துக்கும் விண்வெளிக்கும் கடும் தீங்கு விளைவிக்கும். இதன் விளைவாக நீர் சுற்றுசூழல் மோசமடைந்தது. நீர் மூலவளத்தின் மதிப்பு இழந்து விடும். தண்ணீர் இருந்தாலும் அது பயன்படுத்தப்பட முடியாது. இந்த நிலைமை தற்போதைய நீர் நெருக்கடியை இரட்டையாக்கும். இன்றைய உலகம் முன்னெப்போதையும் விட கூட்டாக பாடுபட்டு பரஸ்பரம் உதவுவது அவசியம் என்பதை இயற்கை சேதத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் மேன்மேலும் அறிந்து கொண்டுள்ளனர். நவீன அறிவியல் தொழில் நுட்பத் தகவல் உயர்வாக வளர்ச்சியடைந்து பொதுவாக பயன்படுத்தப்படுவது என்பது இதற்கு சாதகமான வசதி வழங்கியுள்ளது. தண்ணீர் விநியோகத்துக்கும் நிர்வாகத்துக்குமிடையில் நிலவும் கூர்மையான பிரச்சினைகளைக் கையாளும் போது மிக நவீன முன்னேறிய தொழில் நுட்பம், அறிவியல் சாதனை ஆகியவற்றை பயன்படுத்துவது என்பது நீர் தரத்தைக் கண்காணிப்பதற்கும் நீர் மூலவளத்தை மதிப்பீடு செய்து நிர்வகிப்பதற்கும் வெள்ளத்தை முன்கூட்டியே அறிவிப்பதற்கும் எல்லையைக் கடந்த தண்ணீர் நியாயமாக பயன்படுத்தப்படுவதற்கும் முக்கிய திறவுக்கோளாகும்.

மூல வளம் என்ற முறையில் காலநிலை, அது பற்றிய தகவல் ஆகியவற்றின் பொருளாதார மற்றும் சமூக மதிப்பு மேன்மேலும் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. உண்மையில் சமூக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் காலநிலை மற்றும் தண்ணீர் பற்றிய தகவல் மிக முக்கியமானது. வேளாண் பயிர்களின் விளைச்சலை உயர்த்துவது, நீர் மூலவளத்தின் மீதான நிர்வாகம், பாலைவன மயமாக்கத்தை கட்டுப்படுத்துவது முதலிய துறைகளில் இநத தகவல் பயன்படுத்தப்படுகின்றது. தகவல் யுகம் காலநிலை, நீர் இயல், தொடர்புடைய பூமி இயல்பியல் ஆகியவற்றுக்கு வாய்ப்பு ஏற்படுத்துகின்றது. உலக வானிலை அமைப்பு, நாட்டின் வானிலை மற்றும் நீர் இயல் வாரியங்கள் ஆகியவை மேலும் கூடுதலான அறைகூவல்களை சமாளிப்பதற்கும் துணை புரியும். தடுப்பு பலவீனமான தன்மைவாய்ந்த மதிப்பீடு ஆகியவற்றின் மூலம் தொடரவல்ல வளர்ச்சிக்கும் வறுமை அழிப்பதற்கும் பங்கு ஆற்றுவதன் மூலம் மக்களின் உயிர் சொத்து ஆகியவற்றை மேலும் செவ்வனே பாதுகாக்கலாம்.