• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-10-15 19:25:15    
நேயர்களின் கருத்துக்கள் 23

cri
இவ்வாணிடின் மே 25ம் நாள் முதல், ஜுன் 3ம் நாள் வரை, P.A.நாச்சிமுத்து, சிறப்பு நேயராக, சீனாவில் இலவசப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவரின் சீன பயணம் பற்றிய நிகழ்ச்சியைக் கேட்ட பின், நேயர்கள் அதிகமான கடிதங்களை அனுப்பியுள்ளனர்.

--அவர் சீன வானொலி நிலையத்தினர் நேயர்களின் கடிதத்தைப் பொக்கவுமாக பாதுகாத்து வருகின்றனர் என்று கூறினார். இது கேட்டவுடன் மிகவும் பூரிப்படைந்தேன். நேயர்களுக்கு நீங்கள் கொடுக்கும் மதிப்பை கண்டு வியப்படைந்தேன் என்கிறார் பஹ்ரைன், F.முஹம்மது ஸாஃபான்.

--பகளாயூர் P.A.நாச்சிமுத்து சுற்றுப்பயணம் செய்த போது, தமிழ் பிரிவு பணியாளருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நன்றாக இருந்தது. அத்துடன் கருத்து மிக்க உரையாடல் இருந்தது. அந்த நிகழ்வுகள் எல்லாம் மனக்கண்ணால் பார்த்து அசை போட்டு கொட்டிருக்கின்றேன் என்கிறார் துரையூர், G.ரமேஷ்.

--நகரம், சமூக நிலைமை, அவர் தங்கியிருந்த விடுதி பற்றிய பொதுவான சில செய்திகளும் சுவையான முறையில் அவரால் கூறப்பட்டன. இன்று அளித்தது போல், தினமும், விரிவான முறையில் நாச்சிமுத்துவின் அனுபவக் கட்டுரைகளை வழங்குமாறு அன்புடன் தங்களைக் கேட்டுக்கொள்கின்றேன் என்கிறார் வளவனூர் புதுப்பாளையம், S.செல்வம்.

--சிறப்பு நிகழ்ச்சியில், நாச்சிமுத்துவின் குரலை வண்ணத்தில் கேட்டேன். அந்த சிறப்பு நிகழ்ச்சிகளில் அவர் கூறிய விதம் உண்மையிலேயே நேயர்கள் ஆகிய எங்களுக்கு சீனாவில் நேரில் சென்று பார்த்த அனுபவத்தை ஏற்படுத்தியது. ஆண்டுக்கு ஒரு நேயரை சிறந்த நேயராக தேர்வு செய்து, சீனாவுக்கு அழைத்துச் சென்றால் சிறப்பாக இருக்கும் என்பது எனது கருத்து என்கிறார் S.K.பாப்பம்பாளையம், P.T.சுரேஷ்குமார்.

பிற நிகழ்ச்சிகள் பற்றிய கருத்துக்கள்.

A:--மக்கள் சீனம் நிகழ்ச்சியில், விற்பனை உற்பத்தி வெளிநாடுகளில் இருந்து முக்கிய நிறுவனங்கள் சீனாவுடன் கூட்டு சேர்ந்து கார் உற்பத்தி தயாரித்து வருகிறது என்பதைக் கேட்டறிந்தேன். இதனால், சீன அரசுக்கு 600 கோடி யென் அன்னிய முதலிட்டு வெளிநாட்டு பணம் வருமானமாக கிடைக்கிறது. 2003ம் ஆண்டு 20 விழுக்காட்டு கார்கள் சீனாவில் இறக்குமதி செய்யப்பட்டது என்கிறார் ராசிபுரம், R.M.மோகன்.

--சமூக வாழ்வு நிகழ்ச்சியில், சீனாவிலுள்ள வெளிநாட்டுத் தூதர்களின் மகிழ்ச்சியான வாழ்வு முறை குறித்து, விலக்கப்பட்டது. வலிமையான அரசு, சமாதான வாழ்வு, சகோதர மனப்பான்மை ஆகியவற்றைக் கடைபிடித்து வளரும் சீனா, எதிர்காலத்தில் மிக சிறந்த நாடாகும் என்பதில் ஐயமில்ல. பிற நாட்டுத்தூதுவர்களை மதிப்பது, பிற நாடுகளுடன் கொண்டுள்ள நட்புறவைக்காட்டும் வளர்க்க சீனா, வாழ்க சமாதானக்கோட்பாடு என்கிறார், ஆரணி, பொன்.தங்கவேலன்.

B:--தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சியின் முதலாவது பாடம் மிகவும் அருமை. என் போன்ற நேயர்களுக்கு எழுத்து வடிவத்தோடு பயிலக்கொடுக்கும் பாங்கு வரவேற்கத்தக்கது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் நிஹவோ, சொல்லியும். எழுதியும் பழகுகின்றேன். இப்பணி தொடர வேண்டும். நேயர்கள் பயனடைவார்கள் என்கிறார் சென்னை, M.கணேசன்.

--சீன வானொலி செய்திகளில், ஒட்டு மொத்த கட்டுபாடு பற்றி சீன அரசின் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதின் மூலம், புதிய முதலீடுகளை பெறுவதின் மூலம், கட்டுமானத்தை ஈர்க்க பாடுபட வேண்டும் என சீனத் தலைவர் குறிப்பிட்டு இருப்பதைக் கேட்டறிந்தேன். சீன மக்கள் எதிர்காலம் ஒளிமயமாக அமைய அரசு எடுத்து வரும் நடவடிக்கை பாராட்டுபடி உள்ளது என்கிறார் முனுகப்பட்டு, P.கண்ணன்சேகர்.

--வர்த்தக வளர்ச்சி பற்றி விவாத திட்டம் என்ற செய்தித்தொகுப்பின் மூலம், சீனா உலக வர்த்தக அமைப்பில் சேர்ந்த பின்பு சீன நாட்டு வர்த்தக துறையில் சீன அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளின் விவரத்தினை அறிந்தேன் என்கிறார், தார்வழி, P.முத்து.

--நேயர் நேரம் நிகழ்ச்சி கேட்டேன். இதில், பல தரமான கருத்துக்களைத் தெரிவித்த நேயர்களின் பல விதமான கருத்தக்கள் இந்த நிகழ்ச்சியின் மூலம் வெளிவந்துள்ளது. இதில் இடம்பெற்ற அனைத்து கடிதங்களும் அருமை என்கிறார், 30 பள்ளிப்பட்டி, P.R.சுப்ரமணியன்.

சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியைக் கேட்ட பிறகு, பல நேயர்கள் சீன உணவைத் தயாரிக்கப் பழகி வருகின்றனர்.

--சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியில், இனிப்பான பழ சூப், வெள்ளரிக்காய் கிச்சடி, வாயில் எச்சில் ஊறவைத்தது என்கிறார் உத்திரக்குடி, சு.கலைவாணன்ராதிகா.

--காய்கறி கூட்டு தயாரிப்பது பற்றிய செய்திகளை கேட்டு அடுத்த நாள் சமைத்தோம். அனைத்து பொருட்களும் மிக மலிவாக கிடைத்தது. சத்தாண உணவு பொருளாய் அமைந்தது. மேலும் நாங்கள் உண்ணும் சாதத்திற்கும் ஏற்புடையதாகவும் உள்ளது. தமிழர் அன்றாட உணவு வகைகளில் இந்த சீன வகை காய்கறி கூட்டு நிச்சயம் இடம்பெறும் என்பதில் எள்ளவும் ஐயமில்லை என்கிறார், மின்னக்கல், இ.செல்வராஜ்.

--வேர்க்கடலை, கேரட், வெள்ளரி ஆகியவை இடம்பெற்ற ஒரு புதிய வகை உணவை தயார் செய்வது எவ்வாறு என்பதை, சீன உணவு அரங்கம் நிகழ்ச்சி மூலம் அறிந்துகொண்டேன். கூறப்பட்ட, தேவை பொருட்கள் அனைத்தும் இங்கே எளிதாகக் கிடைக்கக் கூடியவைதான். சீன உணவில் நல்ல எண்ணெய், சர்க்கரை ஆகியவை அதிக அளவில் சேர்க்கப்படுகின்றன. ஆனால் தமிழக உணவில் நல்ல எண்ணெய் சேர்க்கப்படுவதில்லை என்கிறார் வளவனூர் புதுப்பாளையம், S.செல்வம்.