• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-10-18 15:14:23    
பாதுகாப்பான சூரிய ஒளி

cri

தோல் புற்று நோய் தவிர்ந்த ஏனைய புற்றுநோய் வராமல், சூரிய ஒளி நமது உடலைப் பாதுகாக்கலாம் என அறிவியலாளர் கூறுகின்றனர். சூரிய ஒளி உடம்பில் பட்டால், வைட்டமின் D ஐ தோல் உற்பத்தி செய்கிறது. இந்த வைட்டமின் D , புற்று செல் வளர்ச்சியடையாமல் தடை செய்கிறது. 24 ஆண்டுகளுக்கு முன்பு, இவ்வாறு அறிவிக்கப்பட்டது.

இப்போது, இதை உறுதிப்படுத்தும் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உடலில் காணும் வைட்டமின் D யில் 90 விழுக்காடு சூரிய ஒளியினால் ஏற்படுகிறது. சூரிய ஒளி அதிக அளவில் கிடைக்கும் பகுதிகளில் வசிப்போர், மார்பகப் புற்றுநோய் உள்ளிட்ட சிலவகை புற்றுநோயால் மரணம் அடையும் விகிதம் 10 முதல் 27 விழுக்காடு வரை குறைந்து காணப்படுகிறதாம். ஆனால், குறைந்த சூரிய ஒளியும் வைட்டமின் D பற்றாக்குறையும் புற்றுக் கழலை ஏற்படக் காரணமா என்று தெரியவில்லை. வைட்டமின் D யும், புற ஊதாக் கதிர்கள் உடலில் உருவாகும் CALCITRIOL எனும் ஹார்மோனும் உடலுக்கு நன்மை பயக்கின்றன என்பது உணரத்தக்கது.

ஆழ்கடலில் நிழற்படக் கருவி ஆழ்கடலில் உயிர்வாழும் உயிரினங்களைப் படம் பிடிப்பதற்காக, புதிய நிழற்படக் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. டாக்டர் விட்டெர் அம்மையார் உருவாக்கியிருக்கும் இந்த நிழற்படக் கருவிக்கு "EYE IN THE SEA கடற்கண்"என்பது பெயராகும். ஆயிரம் மீட்டர் ஆழத்தில் இது பொருத்தப்படலாம். உயிரினத்திற்குத் தெரியாமல், இது படம் பிடித்துவிடும். "இதுவரை, மனிதரால் கண்டறியப்படாத நீர்வாழ் உயிரினங்களைப் படம் பிடிக்க வேண்டும் என்பதே தமது நோக்கம்" என்கிறார் டாக்டர் வெட்டர் அம்மையார்.