• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-10-21 17:50:33    
மீண்டும் உயிராற்றல் பெற்றுள்ள புல்வெளி

cri

குன்சாண்டாக் புல்வெளி சீனாவின் உள் மங்கோலியாவுக்குத் தென்கிழக்கில் அமைந்துள்ளது. இது பெய்சிங்குடன் மிகவும் நெருங்கிய புல்வெளியாகும். 4 ஆண்டுகளுக்கு முன் அங்கே தாவரங்கள் சீர்குலைக்கப்பட்டதால் பாலைவனம் மாறிவிட்டது. இருப்பினும் முயற்சியின் மூலம் புல்வெளி படிப்படியாக அதன் உயிராற்றலை மீட்டுள்ளது. அங்குள்ள சில இடங்களில் மரங்களும் காடும் வளர்ந்து வருகின்றன. இந்த வளர்ச்சிப் போக்கை சான் சன் சியான் எனும் முதியோர் கண் கூடாகக் கண்டுள்ளார். புல்வெளியில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்ற அவர் கூறினார்.

2000, 2001ம் ஆண்டுகளில் மலைக் குன்றுகள் மணல் விரிவாக்கப்பட்டன. ஆண்டு முழுதும் மணல் நடமாடி வந்தது. அறிவியல் தொழில் நுட்பத்தின் மூலம் புல்வெளியைக் கட்டுப்படுத்திய பின் 3 ஆண்டுகளில் வரலாற்றில் இருந்த தாவரங்கள் மீண்டும் காணப்பட்டுள்ளன என்றார் அவர்.

சீன அரசு அங்கே மணல் காற்று தோற்றுவாயைக் மட்டுப்படுத்துவதன் மூலம் தான் குன்சாண்டாக் புல்வெளியில் மணல் பாலைவனமாகும் போக்கு கட்டுப்பாட்டுக்கு வந்தது. சீன அரசின் வனத்தொழில் ஆணையகம், சீன வேளாண் பல்கலைக்கழகம், சீனப் பொறியியல் கழகம் முதலியவை இணைந்து மணல் கண்காணிப்பில் முன்னேறிய தொழில் நுட்பத்தை மேற்கொண்டன. இது பற்றி சீனப் பொறியியல் கழகத்தின் மூத்தறிஞர் வாண்ற்றோ அறிமுகப்படுத்துகின்றார்.

அப்பிரதேசப் பாலைவனமயமாக்கத்தின் மீதான கண்காணிப்பு

1995ல் துவங்கியது. தொலை உணர்வுக் கட்டுப்பாடு, நிலவியல்

தகவல் முறைமை, முதலிய நவீன உயரிய அறிவியல் தொழில்

நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளோம். இதுவரை இரண்டு முறை

பாலைவன மயமாகுவதை கண்காணிப்பு பணியை நாங்கள்

வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளோம். மண் தடுத்து இதைக்

கட்டுப்படுத்துவதற்கு இந்நடவடிக்கை முக்கிய சரியான

ஆதாரங்களை சேகரித்துள்ளது. இந்த அறிவியல் கண்காணிப்பு

தொழில் நுட்பம் உலகில் முன்னணியில் உள்ளது என்றார்

வான்ற்றோ.

இத்தகைய உயரிய அறிவியல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி கண்காணிப்பு மூலம் மணல் பரவல் மாற்றம் போன்ற அடிப்படை நிலைமையைக் கண்டறிந்த பின் மணல் பரவாமல் தவிர்க்கும் வழிமுறையை மேற்கொள்ள சீன ஆய்வாளர் முயற்சி மேற்கொண்டனர். அப்பிரதேசத்தில் பல முறை கள ஆய்வு மேற்கொண்ட பின் பாலைவனப் பிரதேசத்தில் கடற்பாசிவகை போன்ற தாவரங்கள் பரந்தளவில் வளர்கின்றன. மரங்கள், புல் ஆகியவற்றை விட வறட்சியை அவை தாக்குபிடிக்க முடியும். நீரற்ற நிலைமையிலும் கூட அவை உயிருடன் இருக்கலாம். நீரை பெற்றதும் மேலும் விறுவிறுப்பாக வளரலாம். "இயல்பைக் காப்பாற்றுபவர்" என்று போன்ற தாவரங்களைப மக்கள் பாராட்டுகின்றனர். தவிர, இவற்றைக் கொண்டு மணல் நடமாட்டத்தைத் தடுத்து நிறுத்துவதற்கான செலவு மரம் புல் ஆகியவற்றை நடுவதை விட குறைவு. அதேவேளையில் வேதியியல் வழிமுறை மூலம் ஆராய்ந்து தயாரித்த மருந்து மணல் நடமாட்டத்தைத் தடுப்பதில் மிகவும் பயன் காணப்படுகின்றது. அறிவியல் தொழில் நுட்ப ஊழியர்கள் கடற்பாசி வகை போன்ற தாவரங்களை நடுவதை வேதியியல் முறையில் மணலை தடுத்து நிறுத்துவதுடன் உரிய முறையில் இணைத்துள்ளனர். விரைவாக மணல் நடமாட்டப் பிரச்சினையை நீங்கிவிட்டது. குன்சாண்டாக் புல்வெளியிலான மணலை கட்டுப்படுத்துவதில் அவர்கள் மற்ற அறிவியல் தொழில் நுட்பத்தை மேற்கொண்டனர். இத்துறையில் சீனா குறிப்பிடத்தக்க சாதனை பெற்றுள்ளது. சீன வேளாண் பல்கலைக்கழகத்தின் வன ஆய்வகத்தின் ஆய்வாளர் சோ சன் கூறுகின்றார்.

மணலும் காற்றும் வீசு பாலைவனமாகமாறிய பிரதேசத்தில் செயற்கைப் புல் விதை விதைப்பது, விநானம் மூலம் புல்லை விதையை விதைப்பது போன்ற நடவடிக்கையைப் பெருமளவில் மேற்கொள்ள வேண்டும். இப்பிரதேசத்தில் அறிவியல் தொழில் நுட்பம் மூலம் மணலை கட்டுப்படுத்தும் மாதிரி மண்டலத்தை நிறுவ வேண்டும். பல்கலைக்கழகம், கல்லூரி, அறிவிய்ல ஆய்வகம் ஆகியவற்றின் ஆதரவை அடிப்படையாக கொண்டு வறட்சியை எதிர்த்து நிற்க வல்ல வன வளர்ப்புத் தொழில் நுட்பத்தையும் மர வகைகளையும் உட்புகுத்த வேண்டும். அறிவியல் தொழில் நுட்ப மாதிரி பரவலை அதிகரிக்க வேண்டும் என்றார் அவர்.