• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-10-25 19:11:54    
விவசாயி விளையாட்டுப் போட்டி

cri

சீனாவின் 5வது விவசாயி விளையாட்டுப் போட்டி 18ந் நாள் கியாங்சி மாநிலத்தின் யீ சுன் நகரில் துவங்கியது. தைவான் மாநிலம் உள்ளிட்ட நாட்டின் 32 மாநிலங்கள், தன்னாட்சிப் பிரதேசங்கள் மற்றும் நடுவண் அரசின் நேரடி ஆட்சியின் கீழுள்ள மாநகரங்களின் பிரதிநிதிக் குழுக்களைச் சேர்ந்த 4000 பேர் அதில் கலந்து கொள்கின்றனர். அவர்களில் 2560 விளையாட்டு வீரர் வீராங்கனைகள் இடம்பெறுகின்றனர். இந்த விளையாட்டுப் போட்டியில் மொத்தம் 14 விளையாட்டுக்களைச் சேர்ந்த 155 போட்டிகள் நிகழும்.

கூடைப் பந்து அக்டோபர் திங்கள் 19ந் நாள் சீனாவின் சென்சென் நகரில் நடைபெற்ற ஆசியாவின் மகளிருக்கான இளைஞர் கூடைப் பந்தாட்டப் போட்டியில் சீன அணி 78-48 என்ற புள்ளிக்கணக்கில் சீன தைப்பெய் அணியைத் தோற்கடித்தது. இவ்வாறு சீன அணி ஏ பிரிவின் நான்கு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று, அரை இறுதிப் போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெற்றது.

NBA சீனப் போட்டி 2004ஆம் ஆண்டுக்கான NBA சீனப் போட்டியின் இரண்டாம் ஆட்டம் 17ந் நாள் பிற்பகல் பெய்சிங்கில் நடைபெற்றது. SACRAMENTO KINGS அணி 91-89 என்ற புள்ளிக்கணக்கில் சீன வீரர் யோமிங் இடம்பெறும் HOUSTON ROCKETS அணியைத் தோற்கடித்தது. 14ந் நாள் ஷாங்கையில் நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் HOUSTON ROKETS அணி 88-86 என்ற புள்ளிக்கணக்கில் SACRAMENTO KINGS அணியைத் தோற்கடித்தது நினைவூட்டத்தக்கது.

மராதன் 17ந் நாள் பெய்சிங்கில் நடைபெற்ற பெய்சிங் சர்வதேச மராதன் போட்டியில் ஆடவருக்கான பிரிவில் கெனிய வீரர் மொயிபென் 2 மணி பத்து நிமிடம் 42 வினாடியில் தூரத்தை ஓடி முடித்து, சாம்பியன் பட்டம் பெற்றார். மகளிர் பிரிவில், சீன வீராங்கனை சுன் யிங் ஜே 2 மணி 24 நிமிடம் 11 வினாடி என்ற சாதனையுடன் முதலிடம் பெற்றார்.

சதுரங்கம் 36வது சர்வதேச சதுரங்க ஒலிம்பிக் குழு போட்டி 15ந் நாள் ஸ்பெயினின் மாலோர்காவில் துவங்கியது. புகழ் பெற்ற வீரர் யோ சியாங் சுவன் தலைமையிலான ஆடவர் அணியையும் முன்னாள் சாம்பியனான சியே சுன் தலைமையிலான மகளிர் அணியையும் சீனா அனுப்பியுள்ளது. மொத்தம் 135 ஆடவர் அணிகளும் 91 மகளிர் அணிகளும் இப்போட்டியில் கலந்துகொள்கின்றன. அனைத்து போட்டிகளும் அக்டோபர் 31ந் நாள் நிறைவடையும்.

பூப்பந்து ஜெர்மன் பூப்பந்து ஒப்பன் போட்டி 17ந் நாள் நிறைவுற்றது. ஆடவருக்கான ஒற்றையர் போட்டியில் சீன வீரர் லின் தான் 17-16,15-9 என்ற செட் கணக்கில் தன் அணி தோழரான சியா சியன் தே ஐத் தோற்கடித்தார். மகளிருக்கான ஒற்றையர் போட்டியில் சீன வீராங்கனை சியே சிங் பாங் ஜெர்மனி அணியின் சார்பில் போட்டியில் கலநதுகொண்ட முன்னாள் சீன வீராங்கனை சு குவாய் வென்னைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றார். மகளிருக்கான இரட்டையர் போட்டி, சீன வீராங்கனைகளுக்கிடையில் நடைபெற்றது. இறுதியில் சாங் தான்-சாங் யா வென் ஜோடி 15-8, 15-12 என்ற செட் கணக்கில் சீனாவின் மற்றொரு ஜோடியைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றனர்.

வூ சு முதலாவது உலக பாரம்பரிய வூ சு விழா 16ந் நாள் இரவு சீனாவின் செங் சோ நகரில் துவங்கியது. 62 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் 154 அணிகள் விழாவில் கலந்துகொள்கின்றன. சர்வதேச வூ சு சம்மேளனமும் சீன வூ சு சங்கமும் இந்த உலகளாவிய போட்டியை ஏற்பாடு செய்துள்ளன.

பொது சீனாவில் 15வது பத்து தலைசிறந்த இளைஞர் தேர்தலுக்கான 30 வேட்பாளர்களின் பெயர் பட்டியல் அண்மையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏதன்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான 110 மீட்டர் தடை ஓட்டப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற சீன வீரர் லியூ சியாங்கும், மேஜை பந்தாட்டப் போட்டியின் ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டிகளில் இரண்டு தங்க பதக்கம் பெற்ற சீன வீராங்கனை சாங் யி நிங்கும் இப்பெயர் பட்டியலில் இடம்பெறுகின்றனர்.