• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-10-29 14:53:15    
நேயர்களின் கருத்துக்கள் 24

cri

அடுத்து, நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி பற்றிய கருத்துக்கள் கேட்டு மகிழுங்கள்.

--சக்கரை நோய் பற்றிய தகவல்களை வழங்கியது மிக சரியான தகவல்களாகும். இன்றைய உலகில் நிறைய பேருக்கு இந்நோய் உள்ளது இதை கட்டுபடுத்தும் முறையைக் கேட்டறிந்தேன் என்கிறார் 30 பள்ளிப்பட்டி, S.வெங்கடேஸ்.

--உலகிலுள்ள சர்க்கரை நோயாளிக்கு, உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, என்றுதான் கூறியுள்ளார்கள். ஆனால், சீர்மிகு சீன வானொலி மட்டுமே, அதிகமாக சிரித்தால் நோயை குணப்படுத்தலாம் என்று கூறிய அரிய தகவலை எந்நாளும் மறக்க முடியாது. இன்றைய நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்கிறார் காஜாமலை, G.பிரபாகரன்.

--இன்றைய நிகழ்ச்சி அருமை, அனைத்து வயதினருக்கு ஏற்ற உடற்பயிற்சியை அறிவித்து நிகழ்ச்சியில் புரட்சி ஏற்படுத்தி விட்டீர்கள். எளிமையானவையாகவும், சிறப்பான முறையில் செயல்படுத்தக்கூடிய உடற்பயிற்சிகள், இந்த உடற்பயிற்ச்சியின் பயன் பற்றிய செயல்விளக்கம் உடற்பயிற்ச்சியை உற்சாகமாக செய்திட வாய்ப்பாக அமைந்தத்து என்கிறார் S.நாட்டாமங்கலம், V.ராமகிருஷ்ணன்.

--சர்க்கரை ரோய் பற்றிய செய்தி கேட்டேன். அற்புதமான தகவல் இது. அதுவும் எளிமையான பயிற்சியும் இது. கொழுப்பு இருந்தால் உடற்பயிற்சி அவசியம் என்று கூறியது நிகழ்ச்சிக்கு முத்தாக அமைந்தது என்கிறார் விழுப்புரம் S.பாண்டியராஜன்.
சீனாவில் இன்ப பயணம் நிகழ்ச்சியில், சீன மக்களின் வாழ்க்கை முறை, அழகான இயற்கை காட்சிகள் ஆகியவை விளக்கிக்கூறப்பட்டுள்ளன.

--இதில், ஹானி இன மக்கள் வாழ்க்கை முறைப் பற்றி, தெரிந்து கொண்டேன். சீனாவில் 56 தேசிய இன மக்கள் இருக்கிறார்கள். 12 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஹானி இன மக்கள் என தாங்கள் அறியத் தந்தீர்கள். நான் விரும்பு கேட்டு வரும் நிகழ்ச்சிகளில், சீனாவில் இன்ப பயணம் நிகழ்ச்சியும் ஒன்று என்கிறார் ஈரோடு, M.C.பூபதி.


--ஹானி இன மக்களின் வாழ்க்கை முறை, இவர்கள் வாழும் இடம், இவர்களது தொழில் ஆகியவை, இன்ப பயணம் நிகழ்ச்சி மூலம் விரிவாக அறிந்துகொண்டோம். நிகழ்ச்சியில் ஒலிபரப்பப்பட்ட ஹானி இன மக்கள் பாடிய பாடல் புரியாவிட்டாலும் கேட்க மிகவும் இனிமையாக இருந்தது என்கிறார் மீனாட்சிப்பாளையம் K.அருண்.
சீன தேசிய இனக்குடும்பம் நிகழ்ச்சியில், சின்சியாங் வைகூர் தன்னாட்சி பிரதேசம் பற்றி ஒலிபரப்பியள்ளோம். அதன் விபரங்கள், பல நேயர்களைக் கவர்ந்துள்ளன.

--இதில், சின்சியாங் சிறந்த இடம் என்பைதை கேட்டேன். தங்கம், செம்பு, ஈயம், துத்தநாகம் போன்ற உலோகப் பொருட்கள் இங்கு இருப்பது. இங்கு விளையும் திராட்சைப் பழங்கள் உலக புகழ்பெற்றது. இங்கு ஆண்டு முழுவதும் உறை வணி இருப்பதால் சூரியன் அதிகம் காணப்படுவதில்லை. இதன் எல்லையில் இந்தியா, பாக்கிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகளின் எல்லைகள் இருப்பதையும் கேட்டறிந்தேன் என்கிறார் சத்திரப்பட்டி, E.S.M.பாண்டியராஜா.

--சின்சியாங் பிரதேசம் பற்றிய கட்டுரையைக் கேட்டேன். சின்சியாங்கின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, சீன அரசு, மேற்கொண்ட கட்டுமான பணிகள், பிரதேசத்தை பெருமளவில் முன்னேற்றி, மக்களின் வாழ்க்கைத் தரத்தை பெருமளவில் உயர்த்தி உள்ளது என்பது, நேயர்கள் அறிந்ததே என்கிறார், மணமேடு M.தேவராஜா.

--சிங்ஜியாங் உய்க்கூர் தன்னாட்சி பிரதேசம் பற்றிய சீன தேசிய இனக் குடும்பம் நிகழ்ச்சி, மிகவும் அருமை. இதில், அதிகமான தேசிய இனங்கள் இருந்தும், ஒற்றுமையாக இருப்பது பாராட்டத்தக்கதாகும். உலகில் பல நாடுகளிலுள்ள பல தேசிய இனங்கள் ஒருவருக்கொருவர் சண்டை போட்டு கொண்டிருப்பதை நிறுத்தி, இப்பிரதேச மக்கள் மாதரி, ஒற்றுமையாக வாழ பழக வேண்டும் என்கிறார், நாகர்கோவில், பிரின்ஸ் ராபர்ட் சிங்.

--சின்சியாங், பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான் காசக்ஸ்தான் போன்ற எட்டு நாடுகள் எல்லைகளாக உள்ளன எந்றும் 16 இடங்களில் எல்லை புற வாயில்கள் அமைந்துள்ளன என்றும், இவை பல்வேறு போக்குவரத்து வழிமுறை மூலம் இணைக்கப்பட்டுள்ளது பற்றி, அறிய முடிகிறது என்கிறார், பரசலூர், P.சேகர்.