• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-10-29 14:53:15    
நேயர்களின் கருத்துக்கள் 25

cri
ஒலி என்ற எமது இதழ் குறித்து, நேயர்கள் பாராட்டும் வரவேற்பும் தெரிவித்துள்ளனர். அது பற்றிய கருத்துக்கள் இதோ.

--சீன தமிழொலி என்ற இதழ் வாசித்து மகிழ்ந்தேன். அத்துடன், எனது நண்பர்களுக்கும் அந்த இதழ் கொடுத்தேன். அவர்களும் விருப்பமாக வாசித்து மகிழ்ந்தனர். இந்த இதழ், புதிய நேயர்களை கவரும் என்பது என் கருத்து என்கிறார் திருச்சி அண்ணாநகர், N.பாலமுரளி.

--இதில், நேயர்களின் கருத்துக்களை புகைப்படத்துடன் அருமையாக வெளியிட்டிருந்தீர்கள். நிகழ்ச்சி நிரல், ஒலிபரப்பு நேரம் இவைகளையும் சிறப்பாக வெளியிட்டுள்ளீர்கள். வண்ணப் புகைப்படங்கள் இதழை அலங்கரித்தன. நிழற்படங்களை எடுத்தும் இதழைப் பதிப்பித்தும் வெளியிட்ட பணியாளர்களுக்கு பாராட்டுக்கள் என்கிறார், மணலிப்புது நகர், தங்க.சங்கரபாண்டியன்.

--நடைமுறை நிகழ்ச்சிகளையும் சிறந்த நேயர்களையும் தமிழ் பிரிவின் பணியாளர்களையும் அறிந்து கொள்வதற்கு இந்த இதழ் மிகவும் பயனுள்ளதாகிறது. இந்த இதழ் தொடர்ந்து வெளி வந்து சாதனைப் படைக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்கிறார் ஆரணி, S.அசோக் குமார்.

நல வாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சியில், பயன் மிக்க தகவல்களைப் பெறலாம் என்று பல நேயர்கள் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சி பற்றி நேயர்களின் கருத்துக்களை கேளுங்கள்.

--இதில், சமையல் நுட்பம் பற்றி கூறியது மிக சிறப்பு. காய்கறிகளில் உப்பு சேர்ப்பது வழக்கம் இது சரியல்ல;முதலில், காய்கறி மீது சர்க்களை தூவி பிறகு உப்பு, புளிப்பு சாற்றை சேர்க்க வேண்டும் என்றும் உப்பு போட்டால், நீர் வெளிநேறி விடும் சர்க்களை தூவிறால் நீரை உறுஞ்சி விடும் என்ற விஷயங்கள் விரிவாக அறிந்துகொண்டோம் என்கிறார், மஹராஜப்புரம், J.சாரதா, J.சுகந்தா.

--இதில், "தாய்ப் பாலின் மகத்துவம்" பற்றி அறிந்துகொண்டேன். மிகவும் பயன்மிக்க பகுதியான நலவாழ்வு பாதுகாப்பு என்றென்றும் சீன வானொலியில் வளம் வர வேண்டும் என்பது எனது விருப்பம் என்கிறார் புதுவை, G.ராஜகோபால்.

--"தாய்ப் பாலின் மகத்துவம்" பற்றிய நிகழ்ச்சி, மிகமிக சுமையாக இருந்தது. இது, மகளிருக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சியாக அமைந்தது. தாய்பாலின் அவசியம் முக்கியதுவம் போன்ற எல்லாவற்றையும் விளக்கி கூறியது மிகவும் தெளிவாக புரியும் வகையில் அமைந்து இருந்தது. இது போன்ற பயன் தரும் நிகழ்ச்சிகளை மேலும் நிறைய ஒலிபரப்பும் படி கேட்டுக்கொள்கிறேன் என்கிறார், சிவநாதபுரம், K.சுகுமார்.

--தாய்பாலின் சிறப்பு என்பதை ஒளிப்பரப்பட்டன. குழந்தையை பொற்று எடுத்தா தாய் கடைப்பிடிக்க வேண்டியா நடைமுறைகள் தெளிவாக குறப்பட்டன. இந்த நிகழ்ச்சி மூலம், தாய்மறுர்களும் குழந்தைக்களும் மகிழ்ச்சி அடைந்தனர் ஒவ்வொரு கேட்க வேண்டியா ஒரு நிகழ்ச்சியா பயன் அளிக்கின்றது என்கிறார், ஆரணி, K.பாபு.

--குழந்தைக்கு எத்தனை மாதங்கள் தாய்பாலைத் தர வேண்டும். சரிவிகித மட்டுமே போதுமான உணவாகுமா? போன்ற பல தகவல்களை அறியத் தந்தது நிகழ்ச்சி என்கிறார், கைத்தறி நகர், J.D.மணிகண்டன்.

--இந்த நிகழ்ச்சி, சர்க்கரை நோய் தடுப்பு உடற்பயிற்சியின் வயது வாரியாக உடற்பயிற்ச்சியினை தெளிவாக விளக்கிக்கூறி, மக்களின் நலனை கருத்தில் கொண்டு உருவாக்கிய ஒரு மருத்துவ பூங்கா என்கிறார், விழுப்புரம் K.சிவக்குமார்.

--தாய்பால் குழந்தைகளுக்கு ஏற்படும் சுடுமையான நோய்களை தடுக்கும். தாய்பால் குடிக்கும் குழந்தைகளை சுடுமையான நேய்கள் அண்டாது என்பதை போன்ற நல்ல கருத்துக்கள் இன்றைய நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சியல் இடம்பெற்றன. ஆரோக்யமான பாசமிக்க வலிமைமிக்க சந்ததிகள் உருவாக குழந்தைக்கு தாய்பால் கொடுப்பதே மூல காரணமாக இருக்கிறது என்பதை, நிகழ்ச்சி மிக அழகாக விளக்கியது என்கிறார், எஸ்.நாட்டாமங்கள், ஏ.மாதுராஜ்.

சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியைக் கேட்ட பிறகு, பல நேயர்கள் சீன உணவைத் தயாரிக்கப் பழகி வருகின்றனர்.

--சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியில், இனிப்பான பழ சூப், வெள்ளரிக்காய் கிச்சடி, வாயில் எச்சில் ஊறவைத்தது என்கிறார் உத்திரக்குடி, சு.கலைவாணன்ராதிகா.

--காய்கறி கூட்டு தயாரிப்பது பற்றிய செய்திகளை கேட்டு அடுத்த நாள் சமைத்தோம். அனைத்து பொருட்களும் மிக மலிவாக கிடைத்தது. சத்தாண உணவு பொருளாய் அமைந்தது. மேலும் நாங்கள் உண்ணும் சாதத்திற்கும் ஏற்புடையதாகவும் உள்ளது. தமிழர் அன்றாட உணவு வகைகளில் இந்த சீன வகை காய்கறி கூட்டு நிச்சயம் இடம்பெறும் என்பதில் எள்ளவும் ஐயமில்லை என்கிறார், மின்னக்கல், இ.செல்வராஜ்.

--வேர்க்கடலை, கேரட், வெள்ளரி ஆகியவை இடம்பெற்ற ஒரு புதிய வகை உணவை தயார் செய்வது எவ்வாறு என்பதை, சீன உணவு அரங்கம் நிகழ்ச்சி மூலம் அறிந்துகொண்டேன். கூறப்பட்ட, தேவை பொருட்கள் அனைத்தும் இங்கே எளிதாகக் கிடைக்கக் கூடியவைதான். சீன உணவில் நல்ல எண்ணெய், சர்க்கரை ஆகியவை அதிக அளவில் சேர்க்கப்படுகின்றன. ஆனால் தமிழக உணவில் நல்ல எண்ணெய் சேர்க்கப்படுவதில்லை என்கிறார் வளவனூர் புதுப்பாளையம், S.செல்வம்.