• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-10-28 13:43:10    
16வது கருத்தரங்கு நடத்துவது பற்றிய விவாதம்

cri
வணக்கம் நேயர்கள். இணையத்தில் உங்களைச் சந்திப்பது எனக்கு மிக மகிழ்ச்சி. இன்றைய கட்டுரை மூலம் அனைத்திந்திய சீன வானொலி தமிழ் நேயர் மன்றத்தின் 16வது கருத்தரங்கு நடத்துவது பற்றி ஓரளவு அறிந்து கொள்ளலாம். அனைத்தின்திய சீன வானொலி தமிழ் நேயர் மன்றத்தின் தலைவர் எஸ் செல்வம், புதுவை மாநிலத்தின் சீன வானொலி நிலைய தமிழ் நேயர் மன்றத்தின் தலைவர் என் பாலகுமார், செயலாளர் ஜி ராஜ கோபால் ஆகியோருடன் நான் தொலை பேசி மூலம் தொடர்பு கொண்டு 16வது கருத்தரங்கு நடத்துவது பற்றி விவாதித்தேம. இது பற்றிய விவரம் ஏற்கனவே வானொலி மூலம் நேயர்களுக்கு ஒலிபரப்பாகியது. இணையத்தின் மூலம் இதை மீண்டும் தெளிவாக அறிவிக்க எனக்கு விரும்புகிறேன். மேலும் கூடுதலான நேயர்கள் இணையத்தின் மூலம் இதை அறிந்து கொண்டு சரியான நேரத்தில் புதுவைக்குச் சென்று கருத்தரங்கில் கலந்து கொள்வதற்கு இது துணைபுரியும் என்று நம்புகின்றேன். துவக்கத்தில் மதுரை சீன வானொலி தமிழ் நேயர் மன்றமும் புதுவை சீன வானொலி தமிழ் நேயர் மன்றமும் 16வது கருத்தரங்கு நடத்துவது பற்றிய விருப்பம் சென்ற ஆண்டு ஆரணியில் கருத்தரங்கு நடைபெறர்ற போது தெரிவித்தன. மதுரையில் நேயர்களைச் சந்திக்கும் போது முனைவர் திரு தமிழ் குடிமகன் ஐ.யா மதுரை தமிழ் நேயர் மன்றத்தின் சார்பில் கூட்டத்தில் அதிகாரப்பூர்மவாக தெரிவித்தார். ஆனால் மிக அதிர்ஷ்டவசமாக தமிழ் குடிமகன் ஐ.யா நோய்வாய்பட்டு காலமானார்கள். ஆகையால் மதுரையில் இக்கருத்தரங்கு நடைபொற முடியாமல் போயிற்று. இது மிகவும் வருத்தமாகும். இங்கே நேயர்களின் சார்பிலும் தமிழ்ப் பிரிவின் பணியாளர்களின் சார்பிலும் ஐ.யாவுக்கு அஞ்சல் செலுத்துகின்றேன். சீன வானொலி நிலையத்தின் மதுரை தமிழ் நேயர் மன்றத்தின் சூழ்நிலை காரணமாக இந்த ஆண்டு 16வது கருத்தரங்கு நடத்தும் வாய்ப்பு புதுவை மாநில சீன வானொலி தமிழ் நேயர் மன்றத்துக்கு கிடைத்தது. புதுவை நேயர் மன்ற தலைவர் என் பாலகுமார் உடனடியாக ஏற்றுக் கொண்டதோடு தம் கருத்தை தொலை பேசி மூலம் தெரிவித்தார். அத்துடன் கருத்தரங்கை நன்றாக நடத்தும் மன உறுதியை தெரிவித்தார். கருத்தரங்கு நடைபெறும் போது நேயர்களிடமிருந்து ஈமேல் முகவரி வாங்கி இந்த முகரவரி கொண்ட நேயர்களுடன் தொடர்பு கொண்டு சீன வானொலி தமிழ் இணையத்தில் எப்படி கட்டுரைகளையும் செய்திகளையும் படிப்பது என்பது பற்றி அவர்களுக்கு பாடம் சொல்லி தரும் விருப்பத்தையும் என் பாலகுமார் தொலைபேசியில் மேலும் தெரிவித்தார். இது நல்ல யோசனை. நான் தயக்கமின்றி அவருடைய யோசனைக்கு ஆதரவளித்துள்ளேன். ஈமேல் முகவரி கொண்ட நேயர்கள் சமயம் இருந்தால் டிசெம்பர் திங்கள் 12ம் நாள் புதுவை சென்று கருதரங்கில் கலந்து கொள்ளுமாறு நான் இங்கே வேண்டிக் கொள்கின்றேன். தொலை பேசி மூலம் கருத்தரங்கில் கலந்து கொள்ளும் நேயர்களின் எண்ணிக்கை பற்றியும் விவாதித்தோம். இது பெரும் பிரச்சினை இல்லை. அண்மையில் லாரிட்டா வானொலி திருச்சியில் கூட்டம் நடத்திய போது எங்கள் நேயர்கள் பார்வையாளர் என்ற முறையில் இதில் கலந்து கொண்டனர். மற்ற மன்றம் எப்படி கூட்டம் நடத்துவது என்பது பற்றி அறிந்து கொள்ளும் நோக்கத்துடன் அவர்கள் இதில் கலந்து கொண்டனர். உலகில் தமிழ் ஒலிபரப்பாகிய வானொலி நிலையத்தின் நடவடிக்கையில் கலந்து கொள்வது இயல்பானது. மற்றவரின் அனுபவத்தை கற்றுக் கொண்டு எமது சீன வானொலி நிலையத்தின் தமிழ் நேயர் அணியை விரிவாக்கினால் நல்ல விஷயமாகும். இந்த முறை வாய்ப்பை பயன்படுத்தி கற்றுக் கொண்ட அனுபவத்தை எங்களுக்கு கடிதம் அல்லது ஈமேல் மூலம் தெரிவிப்பதை வரவேற்போம். டிசெம்பர் திங்கள் 12ம் நாள் புதுவையில் நடைபெற உள்ள 16வது கருதரங்கில் மேலும் கூடுதலான நேயர்கள் கலந்து கொள்வதற்கு வரவேற்பையும் நன்றியையும் முன்கூட்டியே தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த 16வது கருத்தரங்கு டிசெம்பர் திங்கள் 12ம் நாள் நடைபெறுவதால் இந்த முறை தமிழ்ப் பிரிவின் பிரதிநிதிகள் இவ்வாண்டு நடைபெற்றுவரும் நவ சீனாவின் 55 ஆண்டு எனும் போட்டிக்கான நேயர்களின் விடைத்தாள்களை கொண்டு வர முடியாமல் இருப்பர். இது பற்றி நாங்கள் வானொலியில் ஒலிபரப்பாகிய கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் ஏற்கனவே உங்களை நினைவூட்டினோம். இங்கே மீண்டு இதை உறுதிப்படுத்துகின்றோம். நவெம்பர் திங்கள் 31ம் நாளுக்குள் வான் அஞ்சல் மூலம் எங்களுக்கு நேரடியாக விடைத்தாள்களை அனுப்புங்கள். இதுவரை நாங்கள் பெற்றுக் கொண்ட விடைத்தாள்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் அதேகாலத்தைக் கிடைத்ததை காட்டிலும் குறைவு. ஆகவே நேயர்கள் எல்லோரும் தமிழ்ப் பிரிவு சீன வானொலியில் முதலாவது இடத்தை வகிப்பதற்காக முயற்சி செய்ய வேண்டும் என்று மீண்டும் வேண்டிக் கொள்கின்றேன்.