• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-10-28 13:49:52    
அறிவியல் கல்வியறிவை உயர்த்துவதற்கான முயற்சி

cri

சீனா 130 கோடி மக்கள் தொகை கொண்ட பெரிய நாடு. சீனாவின் தொடர வல்ல வளர்ச்சியை முன்னேற்றுவிக்கும் வகையில் கடந்த சில ஆண்டுகளில் சீன அரசும் தொடர்புடைய வாரியங்களும் பல்வகை வடிவங்களில் பொது மக்களின் அறிவியல் கல்வியறிவை உயர்த்த பாடுபட்டு வருகின்றன. மக்கள் தொகை என்ற கடுமையான சுமையை ஆட் ஆற்றல் மூலவள மேம்பாடாக மாற்ற அவை அரும்பாடுபட்டு வருகின்றன.

மக்களின் அறிவியல் கல்வியறிவு நிலைமையை பன்முகங்களிலும் அறிந்து கொள்ளும் வகையில் கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நாடு முழுவதிலும் மக்களிடையில் இது பற்றிய கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்களின் அறிவியல் கல்வியறிவு ஆண்டுக்காண்டு உயர்ந்து வருவதை கள ஆய்வு எடுத்துக் காட்டுகின்றது. ஆனால் உயரும் வேகம் அவ்வளவு விரைவாக வில்லை என்று கள ஆய்வுக்குப் பொறுப்பான சீன அறிவியல் பரவல் ஆய்வகத்தின் பொறுப்பாளர் லீ டாக்குவான் கருத்து தெரிவித்தார்.

சில முறை மேற்கொண்ட கள ஆய்வைப் பார்த்தால் எங்கள் மக்களின் அறிவியல் கல்வியறிவு உயர்ந்துள்ளது. நாட்டின் பொருளாதார அதிகரிப்பு வேகத்தைக் காட்டிலும் இது மெதுவானது. வளர்ச்சியடைந்த நாடுகளுடன் ஒப்பிட்டு பார்த்தால் எங்கள் அறிவியல் நிலை மிகவும் தாழ்ந்தது என்றார் அவர்.

சர்வதேச ரீதியில் பயன்படுத்தப்பட்ட அறிவியல் கல்வியறிவு குறிக்கோள் முறைமை, கணக்கு முறை ஆகியவற்றைக் கொண்டு கணக்கிப் பார்த்தால் 2003ல் சீன மக்களிடையில் அறிவியல் கல்வியறிவு நிலை அடைந்தோரின் விகிதாசாரம் 1.98 விழுக்காடாகும். 2001ல் இருந்ததை விட சுமார் 0.6 விழுக்காடு உயர்ந்தது. உயரிய கல்வியறிவு பெற்றவரிடையில் அறிவியல் கல்வியறிவு உடையோரின் விழுக்காடு உயர்வானது. இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் அறிவியல் கல்வியறிவு விகிதாசாரம் 15.6 விழுக்காடாகும். இந்த விழுக்காடு வளர்ச்சியடைந்த நாடுகளுக்குச் சமமாகும். ஆனால் வயது வந்தவர்களிடையில் அவர்களின் அடிப்படை அறிவியல் கல்வியறிவு நிலை விழுக்காடு வெகுவாக குறைந்து வருகின்றது. அவர்களுக்கும் வளர்ந்த நாடுகளுக்குமிடையிலான இடைவெளி விரிவாகியுள்ளது. 2000ல் ஜப்பானியரின் அறிவியல் கல்வியறிவு நிலை 5.3 விழுக்காடாகும். அமெரிக்க மக்களின் அறிவியல் கல்வியறிவு நிலை 17 விழுக்காட்டை எட்டியது.

மக்களின் அறிவியல் கல்வியறிவை உயர்த்தும் வகையில் கடந்த சில ஆண்டுகளில், அறிவியல் பரவல் காட்சியகம், இது தொடர்பான நூல்களின் வெளியீட்டையும் விநியோகத்தையும் அதிகரிப்பது போன்ற பல்வகை வடிவங்களின் மூலம் சீனா அதன் அறிவியல் அறிவின் பரவலை அதிகரித்துள்ளது. சீனாவின் அறிவியல் பரவல் நிபுணரும், சீன அறிவியல் தொழில் நுட்ப காட்சியகத்தின் தலைவருமான ஓங் யு சன் எமது செய்தியாளருக்குப் பேட்டியளிக்கையில் இந்த நடவடிக்கள் பயனைத் தரத்துத் தரத் துவங்கியுள்ளன என்று சுட்டிக்காட்டினார்.

கடந்த சில ஆண்டுகளில் சீன அறிவியல் பரவல் துறையில் மாபெரும் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. அரசாங்க வாரியங்கள் அறிவியல் பரவலின் வளர்ச்சிக்குச் சாதகமான கொள்கை வகுத்துள்ளன. மேன்மேலும் அதிகமான பணியாளர்கள் இந்த துறையில் பங்கு எடுத்துள்ளனர். மிக பல பெரிய ரக அறிவியல் பரவல் காட்சியகங்களும், இயற்கை அறிவியல் பொருட்காட்சியகங்களும் அடுத்தடுத்து கட்டியமைக்கப்பட்டுள்ளன. செய்தி ஊடகம் இதில் மேலும் கூடுதலான கவனம் செலுத்தியுள்ளது. மக்களால் மிகவும் வரவேற்கப்பட்ட அறிவியல் பரவல் படைப்புகள் தோன்றியுள்ளன. மக்கள் இத்துறைக்குக் காட்டிய ஆர்வம் நாள்தோறும் அதிகரித்துள்ளது என்று அவர் கூறினார்.

அரசாங்கம் தவிர, சீனாவின் அரசு சாரா நிறுவனங்கள் சில அறிவியல் தொழில் நுட்ப அறிவைப் பரவல் செய்யும் துறையில் கலந்து கொண்டுள்ளன. அறிவியல் தொழில் நுட்ப ஊழியர்கள் இடம் பெறும் சீன அறிவியல் தொழில் நுட்ப சங்கம் இவற்றில் அடங்குகின்றது. இச்சங்கத்தின் பொறுப்பாளர் சான் யு தாய் இது பற்றி அறிமுகப்படுத்துகிறார்.

சீன அறிவியல் தொழில் நுட்ப சங்கம் தன் அமைப்பு இணையத்தின் மேம்பாட்டைப் பயன்படுத்தி கிராமப்புற மற்றும் நகர வசிப்பிடங்களுக்கும் இளைஞர்கள் மற்று சிறுவர்களுக்கும் சேவை புரிந்து அவர்களிடையில் அடிக்கடி அறிவியல் பரவல் நடவடிக்கை மேற்கொள்ள அறிவியல் தொழில் நுட்ப பணியாளர்களை அணிதிரட்டியுள்ளது. அறிவியல் தொழில் நுட்ப பயிற்சி, அறிக்கையளிப்பது, தொலைக்காட்சி, வானொலி, இணையம், நூல் மற்றும் இதழ் போன்ற பொது செய்தி ஊடகங்களின் மூலம் பல்வகை வடிவத்திலான அறிவியல் தொழில் நுட்ப பரவல் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

அறிவியல் தொழில் நுட்ப அறிவை மேலும் செவ்வனே பிரச்சாரம் செய்து இளைஞரும் குழந்தையும் சிறுவயத்திலிருந்து அறிவியலைக் கற்றுக் கொண்டு இதை விரும்புவதை பழக்கவழக்கமாக்கும் பொருட்டு சீனா பெருமளவில் கல்வி சீர்திருத்தத்தில் ஈடுபட்டு வருகின்றது. முன்பு ஆசிரியர்கள் பாடம் சொல்வது மாணவர்கள் கற்றுக் கொள்வதென்ற கல்வி முறையை அறிவுறுத்தும் கல்வி முறையாக மாற்றி, அறிவியல் தொழில் நுட்பத்திலான மாணவர்களின் ஆர்வத்தை தட்டியெழுப்பி அறிவியல் ஆராய்ச்சியிலான அவர்களின் திறனை வளர்க்க வேண்டும். அதேவேளையில் இடைநிலை மற்றும் துவக்க பள்ளிகளில் பன்முக நடைமுறை தன்மை வாய்ந்த அறிவியல் பாடம் போதிக்கப்படுகின்றது. மனித குலத்தின் நவீன வாழ்க்கைக்கு செல்வாக்கு ஏற்படுத்தும் வழிமுறையையும், நவீன அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய சாதனை, புதிய பாட நூல்கள், புதிய கண்ணோட்டம் ஆகியவற்றையும் மாணவர்களுக்கு சீனா அறிமுகப்படுத்துகின்றது. இதன் மூலம் மாணவர்கள் சுய ஆற்றல் மூலம் புதிய அறிவை கற்றுக் கொள்ளும் திறன் அதிகரிக்கப்படும். குழந்தைகள் அறிவியல் கல்வியறிவை மேலும் கூடுதலாக கற்றுக் கொள்ளலாம். சீனாவுக்கும் வளர்ச்சியடைந்த நாடுகளுக்குமிடையிலான இடைவெளியைக் குறைத்து பொது மக்களின் அறிவியல் கல்வியறிவை மேலும் உயர்த்தும் வகையில் வகுத்துக் கொண்டிருக்கும் அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி திட்டத்தில் இத்துறையிலான முதலீட்டை சீன அரசாங்கம் அதிகரிக்கும்.

2020ம் ஆண்டில் சீன மக்களின் அறிவியல் கல்வியறிவு வளர்ச்சியடைந்த நாடுகளின் 21ம் நுற்றாண்டின் துவக்க காலத்திலான நிலையில் இருக்கச் செய்ய வேண்டும். மக்கள் தொகை என்ற சுமை நாட்டின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் திறமைசாலி என்ற மேம்பாடாக மாற்றப்படும்.

எதிர்காலத்தில் சீனாவின் அறிவியல் பரவல் பணி முக்கியமாக விவசாயி, இளைஞர், குழந்தை அரசு பணியாளர் ஆகியோரிடையில் மேற்கொள்ளப்படும். விவசாயிகளிடையில் பயண்பாட்டு தொழில் நுட்பத்தை சீனா பரப்பி சிறப்பு தொழில் திறனுக்கான பயிற்சியை வலுப்படுத்தி, அறிவியல் தொழில் நுட்ப கல்வியறிவை உயர்த்தச் சீனா பாடுபடும்.