• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-11-01 07:37:32    
உலகக் கோப்பைக்கான சர்வதேச குறுகிய தூர பனிச்சறுக்கல் போட்டி

cri

2004-2005 உலகக் கோப்பைக்கான சர்வதேச குறுகிய தூர பனிச்சறுக்கல் போட்டியின் ஹார்பின் சுற்றுப் போட்டி அக்டோபர் 24ந் நாள் நிறைவடைந்தது. மகளிருக்கான 500மீட்டர் மற்றும் 1500 மீட்டர் விரைவு சறுக்கல் போட்டிகளில் சீன வீராங்கனை வாங் மொங் இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்றார். அத்துடன் உலக பெயர் வரிசை பட்டியலில் அவர் முதலாம் இடம் வகிக்கின்றார். 2004-2005 உலக உருவப் பனிச்சறுக்கல் போட்டியின் அமெரிக்கச் சறுக்கல் போட்டி அக்டோபர் 24ந் நாள் நிறைவடைந்தது. சீன வீராங்கனை சாங் தான், வீரர் சாங் ஹௌ ஜோடி மிக சிறப்பாக சறுக்கி சாம்பியன் பட்டம் பெற்றனர். மகளிருக்கான ஒற்றையர் போட்டியில் அமெரிக்க வீராங்கனை 19 வயதுடைய நெக்திநோ முதலிடம் பெற்றார்.

விவசாயி விளையாட்டுப் போட்டி சீனாவில், 5வது விவசாயி வளையாட்டுப் போட்டி24ந் நாள் சீனாவின் கியாங்சி மாநிலத்தின் யீ சுன் நகரில் நிறைவடைந்தது. சீனாவின் 32 மாநிலங்கள், தன்னாட்சிப் பிரதேசங்கள் மற்றும் நடுவண் அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழுள்ள மாநகரங்களின் பிரதிநிதிகள் அதில் கலந்துகொண்டு போட்டியிட்டனர். 6வது விவசாயி விளையாட்டுப் போட்டி பூச்சியன் மாநிலத்தின் சியுவான் சோ நகரில் நடைபெறும்.
 

ஸ்பெயினில் நடைபெற்றுவரும் 36வது சர்வதேச சதுரங்க ஒலிம்பிக் குழுப் போட்டியில் சீன அணி 2-1 என்ற செட் கணக்கில் இந்திய அணியைத் தோற்கடித்து ஒரு சுற்று முன்னதாக சாம்பியன் பட்டம் பெற்றது. இத்தகைய போட்டியில் சீன மகளிர் அணி சாம்பியன் பட்டம் பெறுவது இது நான்காவது முறையாகும். இந்த போட்டி 14ந் நாள் துவங்கியது, மொத்தம் 135 ஆடவர் அணிகளும் 91 மகளிர் அணிகளும் கலந்துகொள்கின்றன.
 
F1 உலக கார் ஓட்டப் போட்டி 2004ஆம் ஆண்டுக்கான உலக F1 கார் ஓட்ட சாம்பியன் பட்டப் போட்டி பிரேசிலில் நிறைவடைந்தது. விலியம்ஸ் அணியைச் சேர்ந்த கோலாம்பிய வீரர் மொங் தோயா சாம்பியன் பட்டம் பெற்றார். ஜெர்மனியின் வீரர் மைகல் சுமேச்சர் 148 புள்ளிகளைப் பெற்று, பொது சாம்பியன் பட்டம் பெற்றார். வரலாற்றில் மிக உயர்ந்த சாதனை இதுவாகும்.
 
தென்னிஸ் பரிசு தொகை 30 லட்சம் அமெரிக்க டாலருடைய மாட்ரீட் தென்னிஸ் மாஸ்டர் போட்டி 24ந் நாள் ஸ்பெயினில் நிறைவடைந்தது. ஆடவருக்கான ஒன்றையர் போட்டியில் புகழ் பெற்ற ரஷிய வீரர் சார்பென் 6-2,6-4, 6-3 என்ற செட் கணக்கில் ஆர்ஜென்டின வீரர் நார்பண்டியனை தோற்கடித்து, சாம்பியன் பட்டம் பெற்றார். ஆடவருக்கான இரட்டையர் போட்டியில் பஹாமா வீரர் நார்ஸூம் கனேடிய வீரர் நேஸ்டும் ஒத்துழைத்து, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் புலாய்ன் சகோதரர்களைத் தோற்கடித்தனர்.
 
பூப்பந்து, 2004ஆம் ஆண்டுக்கான உலக இளைஞர் பூப்பந்து சாம்பியன் பட்டப் போட்டியின் குழுப் போட்டி 24ந் நாள் கனடாவின் லிதுமனில் நிறைவடைந்தது. சீன அணி, 3-0 என்று ஆட்டக் கணக்கில் தென்கொரிய அணியைத் தோற்கடித்து சாம்பியன் பட்டது பெற்றது. இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த போட்டி சர்வதேச பூப்பந்து சம்மேளனம் நடத்தும் மிக உயர் தரமுடைய இளைஞர் பூப்பந்து போட்டியாகும். 25ந் நாள் முதல் தனிப் போட்டிகள் துவங்கின.