• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-11-05 15:50:32    
நேயர்களின் கருத்துக்கள் 26

cri
நேயர்கள் தயாரிக்கும் சிறப்பு நிகழ்ச்சி உங்கள் குரல் நிகழ்ச்சியில் இடம்பெறுவது பற்றிய நேயர்களின் கருத்துக்களைக் காண்போம்.

--சீன வானொலியில் உலா வரும் உங்கள் குரல் நிகழ்ச்சி அருமை. வானொலிக்குப் பெருமை சேர்ப்பது அது, நேயர்களின் உரையாடல் அற்புதம், நேயர்களின் எண்ணங்களை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியாக இது வலம் வருகிறது என்கிறார், திருச்சி 10, ப.மோகன சுந்தரம்.

--S.செல்வம் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி அருமை. பாராட்டும் வகையில் இருந்தது. நேயர்கள் இந்த நிகழ்ச்சியை எவ்வாறு தயாரித்து வழங்க வேண்டும் என்பதற்கு, முன்மாதிரியாக அமைந்து என்கிறார், பாண்டமங்கலம், எம்.தியாகராஜன்.

--பாண்டியராஜாவின் மகள் திருமண விழாவில், எஸ்.செல்வம் ஒலிப்பதிவு செய்த நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது. ஒவ்வொரு நேயரும் மண மக்களை வாழ்த்துகிறேன் என்று கூறி இருந்தால் மேலும் நன்றாக இருந்திருக்கும். நேயர்கள் கூடும் இடமெல்லாம் உங்கள் குரல் நிகழ்ச்சி உதயம் ஆவதைப் பாராட்டுகிறேன் என்கிறார் ஆரணி, கோகிலாதங்கவேலன்.

--நேயர் திருமண வைபவத்திற்கேற்ப திரைப்படப் பாடல்களுடன் உங்கள் குரல் நிகழ்ச்சியை அமைத்து, எங்களை அசத்திவிட்டீர்கள் என்கிறார், இலங்கை கினிகத்தேனை, பி.மூர்த்தி.

சீன மகளிர் நிகழ்ச்சியில், பல்வேறு துறைகளின் சாதனை பெற்ற மகளிரை அறிமுகப்படுத்துகின்றோம். இந்த நிகழ்ச்சி, பல நேயர்களைக் கவர்ந்துள்ளது.

--கொரிய இனத் தொழில் முனைவோர் வாங் சுன்ஜி அம்மையார் பற்றிய கட்டுரையைக் கேட்டேன். ஆண்களுக்கு நிகராகவும் தமது ஆழந்த ஈடுபாட்டால் அவர்களை விட சிறப்பாகவும் மகளிரால் செயல்பட முடியும் என்பதற்கு அவர் எடுத்துக்காட்டாக விளங்குகின்றனர். சீன மகளிரில் குறிப்பிடத்தக்கவர் அவர் என்பதில் ஐயமில்லை என்கிறார் மணமேடு எம்.தேவராஜா.

--83 வயது வீராங்கனை சாங்மின்யின் என்ற கட்டுரை கேட்டேன். அவரது இளமைக் காலத்தில் பல்வேறு இன்னல்களைச் சந்தித்த போதிலும், 73 வயதில் சாதனை நிகழ்த்தத் துவங்கினார் என்ற செய்தி வியப்பாக இருந்தது. அயரா முயற்சி மூலம், சீன முதியோர் போட்டியில் பரிசு வென்றுவிட்டார். நேயர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அவரை உளமார வாழ்த்துகின்றோம் என்கிறார், வளவனூர் புதுப்பாளையம் S.செல்வம்.

--மங்கோலிய இனப்பாடகி பற்றி கேட்டதனால், இவர் பாடிய சிறந்த பாடலை வழங்கி எம்மையும் நேயர்களையும் மகிழ்வித்தீர்கள் என்கிறார், ராமியம்பட்டி, எஸ்.பாரதி.

சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியில் இடம்பெற்ற சீன வறுவல் நேயர்களுக்கு மிகவும் பிடிக்கிறது. சமைத்து ருசித்த பின்பு. அவர்கள் கடிதங்களை அனுப்பியுள்ளனர்.

--இறைச்சி மட்டுமே உண்டு வந்த எங்களுக்கு, புதிய புதிய சுவை வழங்கும் உணவு வகைகளை அறிமுகம் செய்து வரும் சீன வானொலிக்கு நன்றி! நீங்கள் வழங்கிய சில உணவு வகைகளை சமைத்து ருசித்துள்ளேன். ஒவ்வொரு ஆண்டும் சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியைத் தொகுத்து, நூல் வடிவில் வெளியிட்டால் பயன் மிக்கதாக இருக்கும் என்கிறார் 30 பள்ளிப்பட்டி, N.முருகேசன்.

--காய்கறி துட்டு எனும் சீன வகை உணவு தயாரிப்பது பற்றி கேட்டு, செய்து உண்டோம். அனைத்து பொருட்களும் சத்தானவை சந்தையில் மலிவாக கிடைத்தன. சாதத்திற்கு ஏற்ற உணவு வகையாகவும், அதிக சத்தானதாகவும், புத்துணர்ச்சி அளிப்பதாகவும் அமைந்துள்ளது என்கிறார், மின்னக்கல், ஜெ.கலா.

--காய்கறி துட்டு, வெள்ளரி கிச்சடி செய்முறையைக் கேட்டேன். சீன உணவு வகைகளை அனைவரும் ருசிக்க வேண்டும் என்ற உங்கள் ஆர்வம் மற்றும் அதை தொகுத்து அளிக்கும் முறை நன்று. நிகழ்ச்சியை கேட்கும் போது, சுவைக்கத் தூண்டும் ஆர்வம் ஏற்படுகிறது என்கிறார் அல்லூர், P.அய்யாறப்பா.

--கேரட் கலந்து இறைச்சி வறுவல் பற்றி, கேட்டேன். இந்த வகை உணவு மிகவும் சத்துள்ளதாகவும், வலிமை தரக் கூடிய தாகவும் உள்ளது என்கிறார், மேல்மாயில், வி.ரங்கோலிராதாகிருஷ்ணன்.

--வித்தியாசமான சூப் வகை பற்றி, அறிந்து கொண்டேன். சீன மக்களின் உணவில் சூப் என்பது இல்லாமல் உணவு கிடையாது. ஏதாவது ஒருவகை சூப்பானது, அவர்களின் உணவில் இருக்கும்; இருக்க வேண்டும். நமது நிகழ்ச்சிகளிலும் ஏறக்குறைய 10க்கும் மேற்பட்ட சூப் வகைகளை கண்டு விட்டோம் இருப்பினும் புதிய ரகங்களை அறிய விருப்பம் அதிகரிக்கிறது என்கிறார், திருச்சி அண்ணாநகர், V.T.ரவிச்சந்திரன்.