• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-11-08 20:00:41    
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்தப் பணி

cri

ஹு சிந்தாவ்-ரோகே சந்திப்பு

2008 பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்தப் பணியில் சீன அரசு மிகவும் கவனம் செலுத்துகின்றது. 2008ஆம் ஆண்டு ஒரு உயர் நிலை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்துவதில் பெய்சிங் மாநகரத்துக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும். நவம்பர் முதல் நாள் பெய்சிங்கில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் ரோகேவைச் சந்தித்துரையாடிய போது சீன அரசு தலைவர் ஹு சிந்தாவ் இவ்வாறு கூறினார். பெய்சிங் ஒலிம்பிக் அமைப்பு கமிட்டி செய்துள்ள ஆயத்தப் பணி குறித்து ரோகே மனநிறைவுத் தெரிவித்தார்.

லியூ ச்சி-ரோகே சந்திப்பு

பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான அனைத்து விளையாட்டு அரங்கங்களும் 2007ஆம் ஆண்டில் முழுமையாக நிறைவடையும் என்று பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான அமைப்பு கமிட்டித் தலைவர் லியூ ச்சி அக்டோபர் 28ந் நாள் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு வாக்குறுதியளித்தார். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்தப் பணியை சர்வதேச ஒலிமபிக் கமிட்டியின் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி ஒருங்கிணைப்புக் கமிட்டித் தலைவர் வேர்புரூக்கன் உயர்வாக மதிப்பிட்டார். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான அமைப்புக் கமிட்டி முன்வைத்த "சிக்கனத்துடன் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்துவதென்ற கருத்தை" அவர் வெகுவாக போற்றினார். இதன் மூலம், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான செலவை பயனுள்ள முறையில் கட்டுப்படுத்தலாம் என்று அவர் கருதுகின்றார். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை மிக சிறப்பாக நடத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேசை பந்து 2004ஆம் ஆண்டு உலக கோப்பைக்கான மேசை பந்தாட்டப் போட்டி அக்டோபர் 31ந் நாள் நிறைவடைந்தது. ஆடவருக்கான ஒற்றையர் போட்டியில் சீன வீரர் மாலின் 4-2 என்ற செட் கணக்கில் கிரேக்க வீரர் கிலின்காவைத் தோற்கடித்து மூன்றாம் முறையாக சாம்பியன் பட்டம் பெற்றார். மகளிருக்கான ஒற்றையர் போட்டியில் ஏதன்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் சாம்பியனான சாங் யீ நீங் 4-2 என்ற செட் கணக்கில் தன் அணி தோழியான வாங் நானைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றார். இந்த போட்டியின் சாம்பியன் பட்டம் அவர் பெறுவது இது மூன்றாம் முறையாகும்.

பனிச்சறுக்கல் அக்டோபர் 29ந் நாள் உலக உருவப் பனிச்சறுக்கல் போட்டியின் கனடா போட்டியில், சீன வீராங்கனை சென்சியே வீரர் சௌ ஹோங்போ ஜோடி பல்வேறு நாட்டு விளையாட்டு வீரர் வீராங்கனைகளை தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றனர். 2002, 2003ஆம் ஆண்டுகளிலும் அவர்கள் தொடர்ச்சியாக இரட்டையர் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது. 2006ஆம் ஆண்டு துர்லினில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சீனாவுக்கு தங்கப் பதக்கம் பெற்று தருவதில் அவர்களுக்கு அதிக வாய்ப்பு உண்டு. 2004-2005 உலக கோப்பைக்கான குறுகிய தூர விரைவுப் பனிச்சறுக்கல் போட்டியின் பெய்சிங் சுற்றுப் போட்டி, அக்டோபர் 31ந் நாள் நிறைவடைந்தது. இப்போட்டியில் சீன வீராங்கனை ஒரு தங்கம் மட்டும் பெற்றார். தென் கொரிய வீரர் வீராங்கனைகள் ஏனைய 9 தங்கப் பதக்கங்களையும் பெற்றனர். தென் கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட 18 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் 130க்கும் அதிகமான வீரர் மற்றும் வீராங்கனைகள் இப்போட்டியில் கலந்துகொண்டனர். பூப்பந்து 2004ஆம் ஆண்டு உலக இளைஞர் பூப்பந்து சாம்பியன் பட்டப் போட்டியின் 5 தனிப் போட்டிகள் அக்டோபர் 31ந் நாள் கனடாவில் நிறைவடைந்தது. ஆடவருக்கான ஒற்றையர் போட்டி, மகளிருக்கான இரட்டையர் போட்டி, இரட்டையர் கலப்பு போட்டி ஆகிய மூன்று போட்டிகளில் சீனா சாம்பியன் பட்டம் பெற்றது. ஆனால் மகளிருக்கான ஒற்றையர் போட்டியில் தொடர்ந்து 5 முறையாக பெற்றுவரும் சாம்பியன் பட்டத்தை சீனா இழந்துவிட்டது வருந்தத் தக்கது. முன்னாக, கலப்பு குழுப் போட்டியில், சீன அணி சாம்பியன் பட்டம் பெற்றது.