
சீனாவின் வேணான் உற்பத்தி நிலையை உயர்த்தி, வேளாண் துறையின் அதிகரிப்பு முறையை மாற்றும் வகையில், அறிவியல் தொழில் நுட்பத்தை வேகுவரைவில் உற்பத்தி ஆற்றலாக மாற்ற வேண்டும். இதற்காக, அறிவியல் தொழில் நுட்பம் குடும்பத்துக்குச் செல்வது என்ற திட்டப்பணியை அண்மையில் சீன வேளாண் துறை அமைச்சகம் துவக்கியுள்ளது. திட்டப்படி, 2010ஆம் ஆண்டில், பத்து லட்சம் அறிவியல் தொழில் நுட்ப முன்மாதிரி குடும்பங்களை வளர்க்க வேண்டும், அவற்றின் மூலம் 2 கோடி குடும்பங்களுக்கு இத்துறையில் ஈடுபடத் துணைபுரிய வேண்டும், பத்தாயிரம் புதிய ரக வேளாண் அறிவியல் தொழில் நுட்ப சேவை நிறுவனங்களை உருவாக்க வேண்டும். அதே வேளையில், முக்கிய முன்மாதிரி மண்டலங்களில் முன்னேறிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தும் குடும்பங்கள் வகிக்கும் விகிதம் 90 விழுக்காட்டுக்கு மேல் அடைய வேண்டும், வேளாண் துறையின் பன்நோக்க உற்பத்திக்கான செலவு 15 விழுக்காட்டுக்கு மேல் குறைக்க வேண்டும். அறிவியல் தொழில் நுட்ப முன்னேற்றம், வேளாண் உற்பத்தியின் அதிகரிப்புக்கு ஆற்றிய பங்கு விகிதம் 10 விழுக்காட்டுக்கு மேல் வகிக்க வேண்டும். இவை இந்த பணியின் இலக்குகளாகும்.
அறிவியல் தொழில் நுட்பப் பணியாளர்கள் நேரடியாக குடும்பங்களுக்குச் செல்வது, சிறந்த பயிரிடும் முறை வயலில் நேரடியாக மேற்கொள்ளப்படுவது, தொழில் நுட்பத்தை விவசாயிகள் நேரடியாக கற்று கிரகித்துக் கொள்வது ஆகியவற்றின் மூலம் புதிய கருத்து, சிறந்த உற்பத்தி திறன், அலுவல் மற்றும் நிர்வாகத்தை அறிந்துகொள்வது, மற்றவருக்கு உதவி அளிப்பதில் வலுவான திறமை ஆகியவை படைத்த பெரும் தொகையான வேளாண் அறிவியல் தொழில் நுட்ப முன்மாதிரி குடும்பங்களை வளர்த்து உருவாக்குவது என்பது இந்த திட்டப்பணியின் நோக்கமாகும் என்று வேளாண் அமைச்சகத்தின் பொறுப்பாளர் ஒருவர் கூறினார். சீனாவில், வேளாண் அறிவியல் தொழில் நுட்பம் கிராமப்புறங்களில் பரவலாக்கும் பணி தற்போது அவ்வளவு சிறப்பாக மேற்கொள்ளப்படவில்லை. பல பிரதேசங்களில் அடிமட்ட வேளாண் அறிவியல் தொழில் நுட்பப் பரவல் அமைப்புமுறை இன்னும் நன்றாக உருவாகப்படவில்லை. இந்த நிலை சந்தை பொருளாதாரத்துக்கு ஏற்றதாக இருக்காது. ஏனவே, கஷ்டப்பட்டு வேலை செய்து, ஒரு புதிய வகை விதை ஆராய்ந்த பின், அதற்கு ஏற்ற நீர், உரம் தொடர்பான நடவடிக்கை, இசைவான தொழில் நுட்பம் ஆகியவை இல்லாததால் ஆய்வு பனி, இறுதியில் உற்பத்தியில் பயன்படுத்தப்பட இயலாமல் போயிற்று. இது தொழில் நுட்ப வீண்ணாகுவதற்கு வழிகோலும் அதேவேளையில், வேளாண் துறையின் வளர்ச்சி வாய்ப்பினையும் இழந்துவிட செய்துள்ளது. எனவே, அறிவியல் தொழில் நுட்பம் குடும்பங்களுக்கு செல்வதென்ற திட்டப்பணியை செயல்படுத்த சீன வேளாண் துறை முடிவு செய்துள்ளது.
அறிவித்த படி, இவ்வாண்டில், இந்த திட்டப்பணி, நெல், கோதுமை, மக்கா சோளம், அவரை ஆகிய நான்கு பயிர்கள்மீது 13 மாநிலங்கள் மற்றும் தன்னாட்சிப் பிரதேசங்களில் சோதனை முறையில் மேற்கொள்ளப்பட துவங்கியுள்ளது. நல்ல பயனும் பெற்றுள்ளது. மைய முன்மாதிரி பிரதேசத்தில் ஒரு மூ நெல்லின் விளைச்சல் 600 கிலோகிராமுக்கு அதிகமாகும். 100 யுவான் கூடுதலான வருமானம் கிடைத்துள்ளது. செலவு 20 யுவான் குறைந்துள்ளது. கோதுமையின் விளைச்சல் 15.2 விழுக்காடு அதிகரித்துள்ளது. ஒரு மூ கோதுமை பயிரிடுவதன் மூலம் 87.6 யுவான் கூடுதலான வருமானம் கிடைத்துள்ளது. ஒரு மூ மக்கா சோளத்தின் விளைச்சல் 607.4 கிலோகிராம் அடைந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளின் சராசரி விளைச்சலை விட 24.9 விழுக்காடு இது அதிகரித்துள்ளது. செலவும் குறைந்துள்ளது. இவ்வாறு ஒரு மூ மக்கா சோளம் பயிரிட்டால் 100 யுவான் கூடுதலான வருமானம் கிடைக்கலாம் என்று புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்தியுள்ளன.
|