மத்திய மற்றும் தென்னாசிய பொருளாதாரத் துறையின் மையம்
cri
காஷ் நகர் சீனாவின் சிங்கியான் உயிகூர் தன்னாட்சி பிரதேசத்தில் அமைந்துள்ளது. தாஜிகிஸ்தான், ஆப்கான், பாகிஸ்தான், கிரிகிஸ்தானா, இந்தியா முதலிய 8 நாடுகளுடன் காஷ் ஒட்டி அமைந்துள்ளது. இந்த தனிச்சிறப்பியல்பு மிக்க நிலவியல் மேம்பாட்டை கொண்டதால், சீனா மத்திய, மேற்கு, மற்றும் தென் ஆசியாவுடன் இணையும் இயல்பான பாடலமாகவும் தங்க ஊடுவழியாகவும் காஷ் மாறியுள்ளது. அண்மையில் காஷ் பிரதேசத்தின் அரசாங்கம் சீனாவின் தெற்கிலுள்ள நகரான ஹாஞ்சோ நகரில் கருத்தரங்கு நடத்தியது. 80க்கும் அதிகமான மத்திய மற்றும் தென்னாசிய நாடுகளின் உயர் நிலை அதிகாரிகள் சீனாவுக்கான தூதர்கள், தொழில் மற்றும் வணிக துறைகளைச் சேர்ந்த பிரமுகர்கள், இந்த நாடுகளுக்கான சீனத் தூதர்கள் தூதாண்மை அதிகாரிகள் ஆகியோரும், உள் நாட்டின் புகழ் பெற்ற பொருளியலாளர்களும் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டனர். சிங்கியான் காஷ் மத்திய மற்றும் தென்னாசிய பொருளாதாரத் வளையத்தின் குவி மையமாக வளர்வதென்ற கருத்தை இதில் கலந்து கொண்டோர் ஒருமுகமாய் ஏற்றுக் கொண்டுள்ளனர். பட்டுப் பாதையில் ஒளிமயமான வர்த்தக நகராகிய காஷ் பண்டை காலம் தொட்டு உலகில் புகழ் பெற்ற பட்டுப் பாதையின் தெற்கு பகுதி, வட பகுதி நடு பகுதி ஆகியவை சந்திக்கும் இடமாகவும் போக்குவரத்து மையமாகவும் அழைக்கப்பட்டுள்ளது. 15வது நூற்றாண்டில் கடல் வழி போக்குவரத்துக்கு திறந்து வைக்கப்படுவதற்கு முன் காஷ் சீனாவின் மேற்கு பகுதியில் சர்வதேச வணிக நகராக விளங்கியது. வணிக பொருட்கள் குவியல் குவியலாகவும் வணிகர்கள்கள் தேனீக்கள் போலவும் காணப்பட்டனர். ஒரே பரபரப்பான செழுமையான காட்சி அப்போது காஷில் காணப்பட்டது. நிலவியல் நிலையைப் பார்த்தால் காஷ் ஆசிய ஐரோப்பிய கண்டத்தின் மையத்தில் அமைந்துள்ளது. அதன் எல்லைக் கோட்டு நீளம் 888 கிலோமீட்டராகும். ஹுங்சிராபு ,துர்கோட், இர்கஷ்தான், கலாசு, காஷ் சர்வதேச விமான நிலையம் ஆகிய 5 நுழைவாயில்கள் வெளிநாடுகளுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளன. இந்த 5 நுழைவாயில்களின் மூலம் எட்டு நாடுகளுக்குச் செல்லமுடியும். காஷ்க்கு கிடைத்த வரலாற்று வாய்ப்பு நிலவியல் நிலை ரீதியான மேம்பாடு பொருளாதாரத் துறையிலான மேம்பாடு என பொருட்படவில்லை. தற்போது காஷ் பொருளாதாரத் துறையில் ஓரளவு பின் தங்கிய நிலையில் உள்ளது. அரசு முன்வைத்த மேற்கு பகுதி வளர்ச்சி நெடுநோக்கு திட்டம் உலக பொருளாதாரத்தின் ஒருமைபாட்டு மயமாக்கம் ஆகியவற்றை எதிர்நோக்கும் போது காஷியர் இனிமேல் சும்மா இருக்க முடியாது. வரலாற்று வாய்ப்பை அவர்கள் கண்டறிந்துள்ளனர். சிங்கியானை மத்திய ஆசியா, தென் மற்றும் மேற்கு ஆசிய நாடுகளுக்கும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் வணிக பொருட்களை ஏற்றுமதி செய்யும் முக்கிய தளமாகவும் வணிக மையமாகவும் கட்டியமைத்து, தெளிவான வளர்ச்சி மேம்பாட்டையும் உருவாக்க வேண்டும் என்ற திட்டத்தை இவ்வாண்டின் துவக்கத்தில் நடுவண் அரசு முன்வைத்துள்ளது. மேற்கு பகுதியின் வளர்ச்சிக்கு நடுவண் அரசு முழுமூச்சுடன் ஆதரவளிப்பதை இது மிகவும் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது. வெளிநாடுகளுக்கு திறந்து வைப்பதில் சீன மேற்கு பிரதேசத்தின் முன்னணியில் இருக்கின்ற சிங்கியான் இந்த கடப்பாட்டை ஏற்றுக் கொள்வது இயல்பே.
தவிர, அண்டை நாடுகளுடனான உறவை பார்த்தால் பல ஆண்டுகளாக சீனாவுக்கும் மத்திய,தென் மற்றும் மேற்கு ஆசிய அண்டை நாடுகளுக்குமிடையிலான உறவு பெரிதும் சீரடைந்துள்ளது. ஹாசாகிஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பிக்ஸ்தான், தாஜிகிஸ்தான் ரஷியா ஆகிய 5 நாடுகளுடனான ஒத்துழைப்பு அரசியல் ரீதியிலிருந்து பொருளாதார வளரிச்சியாக வளர்ந்துள்ளது. இதில் மிகவும் முக்கியமானது என்ன வெனில் சீனாவின் தென்கிழக்கு கடலோரப் பிரதேசம் சிங்கியானுடனும், சிங்கியாங் அண்டை நாடுகளுடனும் பொருளாதார துறையில் ஒன்றிடம் இல்லாததை மற்றது நிரம்பும் பொன் காலகட்டத்தில் உள்ளன. வளர்ச்சியடைந்த கடலோரப் பிரதேசம் சிங்கியான், அண்டை நாடுகள் ஆகியவற்றைப் பொறுத்தவரை பொருளாதார வளர்ச்சியில் இந்தத் தேவை ஒரு வகை உந்து சக்தியாக திகழ்கின்றது.
|
|