• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-11-09 09:31:19    
ரத்தமோட்டத்தைச் சீர்செய்ய வல்ல கறுப்பு சோக்லித்

cri

ரத்தம் ஓட்டத்துக்கு துணைபுரியும் கறுப்பு சோக்லித் பற்றிய தகவல். பன்னாட்டு அறிவியலாளர்கள் புதிய ஆராய்ச்சியில் ஈடுபடும் போது புதிய கண்டுபிடிப்பைக் கண்டறிந்துள்ளனர். அதாவது கறுப்பு சோக்லித் உன்பது ரத்தம் ஓட்டத்தைச் சீர்செய்ய முடியும் என்பதாகும். ரத்த குழாய் திறனை எவ்வாறு மேம்படுத்தி ரத்தக் குழாய் விரிவாக்கத்தைத் விரைவுப்படுத்தி உள்ளார்ந்த , நாசகரமான ரத்த கட்டி உருவாக்கத்தைத் தடுப்பது என்பதில் சோக்லித் ஆற்றும் பங்கு பற்றி கிறிஸ் அறிவியலாளர் பரிசோதனைக்கு பின் முதன்முறையாக நிரூபித்தனர். ஏதன்ஸ் மருத்துவவியல் கழகத்தின் ஆய்வாளர் ஐரோப்பிய இதய நோய் தடுப்பு சங்கத்தின் ஆண்டு கூட்டத்தில் இது பற்றிய ஆய்வை எடுத்து கூறினார். 100 கிராம் கறுப்பு சோக்லித் உன்பது ஆரோக்கியமான இளைஞரின் ரத்தக் குழாய் திறனைசச் சீர்செய்யலாம். அதன் பயன் குறைந்தது 3 மணி நேரம் நீடிக்கலாம். இதை உறுதிப்படுத்துவதற்கான ஆய்வில் 17 தொண்டர் கலந்து கொண்டனர். அவர்கள் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டனர். ஒரு பகுதியினர் 100 கிராம் கறுப்பு சோக்லித் உட்கொண்டனர். ஏனையவர் சோக்லித் தவிர்ந்த மற்ற உணவை உட்கொண்டனர். கறுப்பு சோக்லித் உட்கொண்ட குழுவினரின் ரத்த குழாய் உள் சுவரின் செயல் திறன் மேம்படுத்தப்பட்டது. சோக்லித் உட்கொள்ளாத குழுவினரின் ரத்தக் குழாய் உள் சுவரின் செயல் திறன் சீரடைய வில்லை என்று ஆய்வின் முடிவு எடுத்துக்காட்டுகின்றது. ரத்தக் குழாயின் உள் சுவர் என்றால் ரத்தக் குழாயின் உள் சுவரில் மூடப்பட்ட மெல்லிய படலமாகும். கடந்த ஆண்டில் இத்தாலி மற்றும் பிரிட்டிஷ் அறிவியலாளர்கள் இடம் பெறும் ஆய்வு குழு ஆய்வின் மூலம் பின்வருமாறு கண்டறிந்தது. அதாவது, சாதாரண சோக்லித் ரத்தத்தில் உள்ளார்ந்த உயிரக இணைவு எதிர்ப்பு கூட்டல் 20 விழுக்காடு அதிகரிக்கலாம். பால் குடிக்கும் போது இதை பாதிக்கலாம். ஆகவே கறுப்பு சோக்லித் ஆற்றும் பங்கு பால் கலந்த சோக்லிதுக்கு கிடைக்காது என்பதாகும்.

அடுத்து யார் மலை ஏற கூடாது என்பது பற்றி அறிமுகப்படுத்துகின்றோம். விடுமுறை நாட்களில் புத்தம் புதிய காற்று வாங்கும் வகையில் புறநகரில் அமைந்த மலையில் ஏறி உடல் பயிற்சி செய்வது ஒரு நல்ல பொழுதுப்போக்காக கருதப்படுகின்றது. ஆனால் இந்த பயிற்சிக்கு ஓக்சிஞ்சினி நுகர்வு அளவு அதிகம் தேவைப்படுகின்றது. யார் இந்த பயிற்சியில் ஈடுபடலாம் என்பதை தெளிவாக அறிந்த கொண்ட பின் தான், மலை ஏறும் விளையாட்டின் பாதுகாப்பு தன்மையை உத்தரவாதம் செய்யலாம். இது மிகவும் முக்கியமானது. இளைஞர்கள். எதிர்பாராத நிலையில் மரணமடைவருக்கு இதய நோய் முக்கிய காரணியாகும். ஆகவே வாழ்க்கையில் இதய நோயினால் அல்லல்படுத்தப்பட்ட இளைஞர்கள் மலை ஏறும் விளையாட்டில் ஈடுபடுவதற்கு ஏற்றதல்ல. நடு வயதுடையவர். அவர்கள் சிறப்பு மக்கள் தொகுதியானவர். வேலை சுமையினால் உடல் நலத்தில் கவனம் செலுத்தாமல் இருக்கின்றனர். ஆகவே பல்வகை நோய்களால் பீடிக்கப்படுவர் அதேவேளையில் இதை முன்னதாக கண்டுபிடிப்பது சிரமம். சாதாரண நாட்களில் உடல் பயிற்சி செய்வது மிக குறைவு. திடீரென மலையில் சீக்கிரமாக ஏறினால் இதய நோய் ஏற்படுவதற்கு ஆபது அதிகம். ஆகவே உரிய முறையில் உடல் நலத்துக்கு ஏற்ற பயிற்சியில் ஈடுபட வேண்டும். முதியோர். முதியோரைப் பொருத்தவரை, உடல் பாகங்களின் திறன் பொதுவாக பல வீனமடைந்து வருகின்றது. பல்வகை தீரா நோய்கள் அவர்களுக்குத் தொல்லை கொடுக்கின்றன. ஆகவே அவர்களுக்கு ஏற்ற விளையாட்டுக்களைச் தெரிவு செய்வது நல்லது. கண் மூடித்தனமான உடல் பயிற்சியில் குறிப்பாக மலை ஏறுவதில் ஈடுபட்டால் பிரச்சினை வரும். மலை ஏறுவது போன்ற கடும் விளையாட்டில் கலந்து கொள்ளும் போது நுணுக்கமான முறையில் செயல்பட வேண்டும். பல்வகை நோயினால் அல்லல்படுவோர். மூட்டு வீக்கம், நீரக நோய், ரத்த நோய், சர்க்கரை நோய், நுரை ஈரல் மற்றும் இருதய நோய் முதலிய நோயினால் அல்லல்படுவோர் மலை ஏறுவது போன்ற கடும் விளையாட்டில் கலந்து கொள்ளக் கூடாது. பிடிவாதமாக இதில் ஊன்றி நின்றால் மெதுவாக ஏற வேண்டும். நடுப் பகுதி வரை மலை ஏறலாம் என்பன மனதில் நினைவு கொள்ள வேண்டும். மலை ஏறும் போது எந்த உணவு உடம்புக்கு நல்லது. மலை ஏறும் போது தாகம் அடிக்கடி ஏற்படும். ஆகவே வென்னீர் குடித்தால் உடம்புக்கு நன்மை பயக்கும். இது முதியோர் நண்பர்களுக்குக் குறிப்பாக தகுந்தது.