சீனாவில் திபெத்தியல் பற்றிய ஒத்துழைப்பு ஆய்வு முறை
cri
திபெத்தியல் துறையின் வளர்ச்சியை முன்னேற்றுவிக்கும் வகையில், சீனத் திபெத்தியல் வட்டாரத்தினர் ஒத்துழைப்பு ஆய்வு முறையை உருவாக்க உள்ளனர். எமது செய்தியாளர் 10ந் நாள் பெய்சிங்கில் நடைபெற்ற ஒரு திபெத்தியல் ஆய்வு கூட்டத்திலிருந்து இதை அறிவித்தார்.
சீனாவில் திபெத், ஹான் மற்றும் இதர இனங்களைச் சேர்ந்த 2000க்கும் அதிகமானோர் இடம்பெறும் திபெத்தியல் ஆய்வாளர் அணி ஒன்று உள்ளது. அவர்கள், பெய்சிங், திபெத் தன்னாட்சிப் பிரதேசம், சுச்சுவான் மாநிலம் முதலிய இடங்களின் திபெத்தியல் ஆய்வு மற்றும் கல்வி நிறுவனங்களில், திபெத்தியல் ஆய்வு, வெளியீடு, நூல் தரவு முதலிய துறையில் பணி புரிந்துவருகின்றனர். ஒருங்கிணைப்பு இல்லாததால், அவர்களுக்கிடையில் பரிமாற்றமும் ஒத்துழைப்பும் ஓரளவு பாதிக்கப்படுள்ளன.
இந்த கூட்டத்தில், பிரதிநிதிகள் ஒத்த கருத்துக்கு வந்துள்ளனர். அவர்கள் ஒத்துழைப்பு ஆய்வில் ஈடுபட்டு, தகவல், திறமைசாலி பரிமாற்றம், வெளிநாடுகளுடனான கல்வியியல் பரிமாற்றம் முதலிய துறைகளில் வசதிகளைக் கூட்டாக பயன்படுத்தும் முறையை உருவாக்குவர்.
|
|