• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-11-12 15:42:20    
நேயர்களின் கருத்துக்கள் 27

cri
நிகழ்ச்சிகள் பற்றிய கருத்துக்கள் இதோ.

--ஒழிந்தான் ஒரு கயவன் எனும் சீனக் கதையின் 3வது பகுதியில் தெற்கத்திவீரன் பற்றி அறிய முடிந்தது. இந்நிகழ்ச்சி நன்றாக இருந்தது என்கிறார் திருவானைக்காவல், G.சக்கரபாணி.

--வேளாண் நிலப்பரப்பு குறைந்து வருவதை தடுக்க, பயன் உள்ள நடவடிக்கையைச் சீனா எடுத்துள்ளது. அதாவது, விவசாயிகளுக்கு நவீன தொழில் நுட்பத்தை கற்றுத்தருவது, 5 ஆண்டுகளில் படிப்படியாக வேளாண் வரியை அறவே நீக்குவது மிகவும் பாராட்டதக்கதாகும் என்கிறார், நாகர்கோவில், ஸ்டெல்லா ஷர்மிளா.

--சீனாவில் இன்ப பயணம் நிகழ்ச்சியில், சீசோ பூங்காவிலான டைனொசர் காலத்திய மரத்தை, அரசு பாதுகாத்து வருவதைப் பாராட்டுகிறோம். பறவைகளின் கீச் கீச் ஒலி, சல சல வென ஓடும் நீரின் ஒலியைக் கேட்க முடிந்தது. எங்களை நேரில் அழைத்து சென்றது போன்று இருந்தது என்கிறார், பரசலூர், P.S.சேகர்.

--ஒட்டு மொத்த கட்டுப்பாடு பற்றி சீன அரசின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதன் மூலம், புதிய முதலீட்டைப் பெறுவதன் மூலம், கட்டுமானத்தை ஈர்க்க பாடுபட வேண்டும் என, சீனத் தலைவர் குறிப்பிட்டதைச் செய்திகள் மூலம் கேட்டறிந்தேன். சீன மக்களின் எதிர்காலம் ஒளிமயமாக அமைய, அரசு எடுத்து வரும் நடவடிக்கை பாராட்டத்தக்கது என்கிறார் முனுகப்பட்டு, P.கண்ணன்சேகர்.

--வர்த்தக வளர்ச்சி பற்றிய விவாதக் கூட்டம் என்ற செய்தித்தொகுப்பின் மூலம், உலக வர்த்தக அமைப்பில் சீனா சேர்ந்த பின், வர்த்தகத் துறையில் சீன அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பற்றி அறிந்தேன் என்கிறார் தார்வழி, P.முத்து.

--இசை நிகழ்ச்சியினைக் கேட்டேன். பாடகி சூ லை அவர்கள் பாடிய நினைத்தபடி வசந்த சுற்றுலா என்ற பாடலைக் கேட்டுப் பெரிதும் மகிழ்ச்சியடைந்தேன் என்கிறார், சிறுநாயக்கன்பட்டி கே.வேலுச்சாமி.

--ஒலி இதழில், தங்களின் தமிழகப் பயணத்தை, நிழற்படங்களுடன் தொகுத்து வழங்கியுள்ளீர்கள். பல நேயர்களின் நிழற்படங்கள் இடம் பெற்றுள்ளன. அனைத்து தரப்பு நேயர்களும் மகிழ்ச்சியடைந்திருப்பார்கள் என எண்ணுகிறேன் என்கிறார் சேந்தமங்கலம், P.முத்துசாமி.

--சீனத் தமிழொலி இதழ் எனக்கு கிடைத்தது. மட்டற்ற மகிழ்ச்சி. தங்களை எல்லாம் நேரில் பார்க்க எனக்கு மிகுந்த ஆவலாக உள்ளது என்கிறார், கல்லுக்குழி, S.V.பார்த்தசாரதி.

--புதிய நேயர்களின் வருகையை அங்கீகாரம் செய்யும் விதமாகவும், அவர்களுக்கு மேலும் ஆர்வத்தை தூண்டும் படியும், நேயர் நேரம் நிகழ்ச்சி இருக்கும் என்கிற நம்பிக்கையில், கடிதம் எழுதி காத்து இருந்தோம் என்கிறார் செல்லூர், N.சீனிவாசன்.

--மலர்ச் சோலையில் குறிப்பிட்ட சுற்றுச் சூழல் பணியில், துவக்கம் சிறுவர்களிடம் இருக்க வேண்டும் என்று ஐ.நா. கருதுகிறது என்ற செய்தி, உண்மைதான். ஆகவே தான், தமிழகத்தில் சுற்றுச்சூழல் இயக்கத்தில் மாணவர்களை அதிகயளவில் அரசு பங்கு பெறச் செய்துள்ளது என்கிறார், விழுப்புரம், எஸ்.பாண்டியராஜன்.

--மலர்ச் சோலை நிகழ்ச்சியில், சீன மக்களுக்கு கரப்பான் பூச்சி என்றால் அலர்ஜி. ஆஸ்திரேலிய மக்கள் கரப்பான் பூச்சியைச் செல்லமாக வளர்த்து வருகின்றன என்ற விந்தையான செய்தியைக் கேட்டேன். அமெரிக்காவில் உடல்பருத்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதையும் அறிந்து கொண்டேன் என்கிறார், S.K.பாப்பம்பாளையம் P.T.சுரேஷ்குமார்.

--சீன சமூக வாழ்வு நிகழ்ச்சியில், சீனாவுக்கான வெளிநாட்டுத் தூதர்களின் துணைவியர்தம் பெய்ஜிங் மாநகரம் பற்றி, ஒலிபரப்பினீர்கள். இந்த நிகழ்ச்சி நன்றாக இருந்தது. இப்படி மாறுபட்ட கோணத்தில் நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கியமைக்கு பாராட்டுகள் என்கிறார் அபினிமங்கலம், கே.அருண்.

--அறிவியல் உலகம் நிகழ்ச்சிக் கேட்டேன். மைக்ராஸ் கோப்பில் பார்த்துக் கொண்டே அறுவை சிகிச்சைக்கான இலக்கை நோயை சரியான முறையில் கண்டறிய முடியும். இந்த அறுவை சிகிச்சை அளிப்பதில் சிறந்து விளங்கும் மருத்துவ நிபுணர்களும் மருத்துவமனைகளும் சீனாவில் உண்டு என்பது பெருமைக்குரியது என, துறையூர் G.ரமேஷ் தெரிவித்தார்.

--நேருக்கு நேர் நிகழ்ச்சியில், V.T.ரவிச்சந்திரன் தெரிவித்த கருத்துக்களை கேட்டோம். பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்யும் நேயர்களின் கடிதங்களை, நிகழ்ச்சியில் இடம்பெறச் செய்தாலே போதும் என்கிறார் பரசலூர், எஸ்.உத்தமசீலன்.

அன்புள்ள நேயர்களே, கருத்துச் செறிவான உங்கள் கடிதம், நேயர்நேரம் நிகழ்ச்சியில் தவறாது இடம்பெறும். உங்களின் கடிதங்களை இருகரம் நீட்டி வரவேற்கின்றோம்.