• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-11-12 21:58:06    
கறுப்பு நிற ஆடை அணியும் சுவாங் இனம்

cri

சுவாங் இனத்தவர் கறுப்பு நிறத்தை விரும்புவது ஏன்? இதற்கு ஒரு கதை உண்டு. 1300 ஆண்டுகளுக்கு முன், போர் குழப்பத்தில் குடியேறுவதில் ஒருபகுதி சுவோங் இன மக்கள், நாபோ மாவட்டத்தில் தங்கி தரிசு நிலத்தை விளை நிலமாக்கி வாழ்ந்தனர். என்பவரை, தமது தலைவராக அவர்கள் பரிந்துரை செய்தனர். எதிரி, இவ்விடத்தை ஊறுபடுத்திய போது, போரில் காயமுற்றார். அடர்த்தியாக மலையில் குடியேறி ஓய்வெடுத்தார். ஓரிரவில், கனவு கண்ட போது, எனும் ஒரு வகை காட்டு மூலிகையைக் கொண்டு காயத்துக்குச் சிகிச்சை அளித்தால் பயனி கிடைக்கும் என கடவுள் அவருக்கு தெரிவித்தார். பின்னர், அவர் அவ்வாறே செய்தார். காயம் விரைவில் குணமடைந்தது. எனவே, இத்தகைய மூலிகையைப் பறித்தெடுத்து, அதன் காற்றில் துணியைத் தோய்த்தொடுக்குமாறு தமது இனத்தவரைக் வேண்டிக்கொண்டார்.

மீண்டும் போரிடும் போது, கறுப்பு நிற ஆடைகளையும் கறுப்பு நிற கால் சட்டைகளையும் அணிந்து கொண்டு, கத்திகளுடன் எதிரியை எதிர்த்துப்போரிட்டனர். அவர்கள், ஆகாயத்திலிருந்து இறங்கிய கறுப்பு நிறக் கடவுளர் போலிருந்தனர். அவர்களது துணிவு, ஈடிணையற்றது. எனவே, எதிரிகள், கதிகலங்கி தப்பிச்சென்றனர். இதற்குப் பின், இம்மூலிகையைக் கொண்டு, துணியைக் கறுப்பாக்கி தோய்ந்து, ஆடைகளைத் தைத்து அணியுமாறு, அவர், தமது இனத்தவரை வேண்டிக்கொண்டார். இவ்வாறு, கறுப்பு நிறத்தின் மீது அவர்கள் விருப்பம் கொள்ளலாயினர்.

 


1  2  3