• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-11-15 08:44:36    
புற்று நோயைக் கண்டறிய புதிய சோதனை முறை

cri

கழுத்தில் ஏற்படும் புற்றுநோயைக் கண்டறிவதற்கான புதிய சோதனை முறை, சீனாவில் உருவாக்கப்பட்டுள்ளது. DIGENE KEZ HPV DNA TEST என்பது அதற்குப் பெயர். கழுத்துப் புற்றுநோய்க்கு HPV வைரசுதான காரணம் என்பதை இதுவரையிலான ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. "ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, கழுத்துப் புற்றுநோய்க்கான காரணம் சரிவர தெரியாமல் இருந்தது. ஆனால், அப்போது HPV வைரசுதான் காரணம் என்பதைச் சோதனைக் கூட ஆய்வுகள் தெரிவிக்கின்றன" என்கிறார் மருத்துவர் சியாவ் யுலின். "இந்தப் புதிய சோதனை முறையானது, கழுத்துப் புற்று நோய்க்கு எதிரான எங்களின் போராட்டத்திற்கு வெற்றியை ஈட்டித்தரும்" என்கிறார் அவர்.

சீனாவில், ஆண்டுதோறும் ஒரு இலட்சம் பேர் கழுத்துப் புற்று நோய்க்கு ஆளாகின்றனர். 2001 ஆம் ஆண்டில் மட்டும், சீனாவில், இந்தப் புற்று நோய்க்கு இருபதாயிரம் பேர் பலியாயினர் என்கிறார் சியாவ் பொதுவாக, சீனக் கிராமப்புறப் பெண்கள், இந்தக் கழுத்துப் புற்று நோய்க்கு ஆளாகின்றனர். முன்கூட்டியே இதைக் கண்டறியாததால் இந்தக் குறைபாடு நிலவுகிறது. இப்போதைய புதிய சோதனை முறையினால், மகளிர் பெரிதும் பலனடைய முடியும் என்று கருதப்படுகின்றது. பொதுவாக, மனிதர் தமது வாழ்நாளில், HPV வைரசு பீடிக்கப்படுவதுண்டு. ஆனால், பிரச்சினையை உருவாக்காமல், அது, மாயமாய் மறைந்து போகிறது. அப்படி இல்லாமல், ஓராண்டுக் காலம் அல்லது அதற்கு மேற்பட்டு அது நமது உடலில் குடிகொண்டிருந்தால், கழுத்துப் புற்று நோய் ஏற்பட வாய்ப்புண்டாகிறது. முப்பது வயதுக்கு மேற்பட்ட மகளிரிடையே இதற்கு வாய்ப்பு அதிகம் என்பதால், அவர்கள் உடல்நலப் பரிசோதனையை முறையாகச் செய்து கொள்வது என்று கூறப்படுகின்றது.

இந்தப் புதிய சோதனை முறை மூலம் சாதகமான விளைவு கண்டறியப்பட்டால், மேலும் 6 முதல் 12 திங்களில் சோதனையை மீண்டும் மேற்கொண்டு, கழுத்துப் புற்றுநோய் உண்டா என்பதை உறுதிப்படுத்தலாம். ஒருவேளை, முடிவு மகிழ்ச்சி தருவதாக-அதாவது கழுத்துப் புற்று நோய்க்கு வாய்ப்பில்லை-என்றால், மன அழுத்தத்திலிருந்து மகளிர் விடுபடலாம் தானே.