• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-11-18 16:33:31    
சிறுவர்கள் கலந்து கொண்ட ஸ்கேட்டிங் நடவடிக்கை

cri

"மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பயணம்" என்ற நோக்கத்துடன் திருச்சி ரீஜனல் ரோலர் ஸ்கேட்டிங் சங்கமும் திருச்சி ரோட்டரி ராக்சிட்டி சங்கமும் இணைந்து ஸ்கேட்டின் பயணம் ஏற்பாடு செய்தன. திருச்சி முதல் பாண்டிச்சேரி வரையான 215 கிலோமீட்டர் நீளமான பயணத்துக்கு மூன்று நாட்கள் பிடித்தது. அனைத்திந்திய சீன வானொலி தமிழ் நேயர் மன்ற தலைவர் எஸ் செல்வம், சீன வானொலி திருச்சி அண்ணா நகர் தமிழ் நேயர் மன்றத் தலைவர் திரு வி. தி. இரவிச்சந்திரன், சீன வானொலி பாண்டிச்சேரி மாநில நேயர் மன்ற தலைவர் என் பாலகுமார் செயலாளர் ஜி ராஜகோபால் முதலியோர் இந்த ஸ்கேட்டின் பயண வாய்ப்பினைப் பயந்படுத்தி சீன வானாலி தமிழ் ஒலிபரப்பை பிரச்சாரம் செய்தனர். நடவடிக்கை பற்றி திரு எஸ் செல்வம் கட்டுரை எழுதி சீன வானொலி தமிழ்ப் பிரிவுக்கு அனுப்பினார். இதோ அவர் எழுதிய கட்டுரை.

4 வயது முதல் 19 வயது வரையிலான சிறுவர்களைக் கொண்ட ஸ்கேட்டிங் குழு ( காலில் சக்கரங்களைப் பொருத்திக் கொண்டு ஓடுவது) 16.4.2004 அன்று காலை திருச்சியிலிருந்து புறப்பட்டு விழுப்புரம் வழியாக பாண்டிச்சேரி வருவதாகவும் குழு பாண்டிச்சேரி நெருங்கும் போது அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்து தருமாறும் திரு வி. தி. இரவிச்சந்திரன் என்னிடம் கூறினார். மேலும் சீன வானொலி பற்றிய பிரச்சாரத்தையும் மேற்கொள்ளும் வகையில் என்னிடமிருந்து ஏற்கனவே பெற்றிருந்த சீன வானொலிக் கொடியை குழுவினரிடம் அவர் கொடுத்து அனுப்பினார். பின்னர் 18.4.2004 அன்று காலை பாண்டிச்சேரி மாநிலத்தின் புறநகரான வில்லியனூர் எனும் இடத்தில் காலை 10 மணிக்கு சீன வானொலி சார்பாகவும் நேயர் மன்றம் சார்பாகவும் ஸ்கேட்டிங் குழுவினரை நானும் பாண்டிச்சேரி மாநில நேயர்களான என் பாலக்குமார், ஜி ராஜகோபால், பா.ஜெயச்சந்திரன், எல் காசிநாதன் ஆகியோரும் வரவேற்றோம். பின்னர் குழுவினர் இளைப்பாறவும், மதிய உணவு சமைத்து சாப்பிடவும் அழகான இடம் ஒன்றினை அவர்களுக்காக ஏற்பாடு செய்தோம். நமது வானொலி சார்பில் சிறுவர் சிறுமியருக்காக 200 குடிநீர்ப் பைகளை வாங்கி அவர்களுக்கு அளித்தோம். திருச்சி அண்ணா நகர் திரு வி.தி. இரவிச்சந்திரன் கொடுத்தனுப்பிய சீன வானொலிக் கொடியைப் பெற்றுக் கொண்டோம்.

பின்பு பிற்பகல் 4 மணிக்கு ஸ்கேட்டிங் குழு வில்லியனூரை விட்டுப் புறப்பட்ட போது பாண்டிச்சேரி கடற்கரை வரை இரு சக்கர வாகனங்களில் நாங்களும் உடன் சென்றோம். போக்குவரத்து நெரிசலில் சிறுவர் சிறுமியர் பாதுகாப்பாக செல்ல உடனிருந்து உதவினோம்.

பின்பு கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் நாங்களும் கலந்து கொண்டு சீன வானொலி தமிழ்ப் பிரிவு பற்றி அங்கு கூடியிருந்தவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தோம். சீன வானொலிக் கொடியை கையிலேந்தி பல நிழற்படங்கள் எடுத்துக் கொண்டோம். மேலும் முக்கிய ஆங்கில நாளேடான "The Hindu"இதழில் செய்தி வெளிவரவும் ஏற்பாடு செய்தோம்.

பின் விழா இனிதே நிறைவடைந்த செய்தியை பாக்ஸ் மூலமாக சீன வானொலிக்கு தெரிவித்து விட்டு அனைவரும் வீடு திரும்பினோம்.