இவ்வாண்டு, எமது ஒலிபரப்பில் தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சியை மீண்டும் தயாரித்து வழங்குகின்றோம். இந்நிகழ்ச்சிக் கேட்டு சீன மொழியைக் கற்றுக்கொண்ட பல நேயர்கள், கடிதங்களில் ஓரளவு சீன மொழியை எழுதுவது கண்டு வியப்படைந்தோம்.
--இதுவரை கற்றுக்கொண்ட 6 வார்த்தைகளும் மீண்டும் நிதானமான முறையில் கற்றுத்தரப்பட்டது. ஒவ்வொரு வார்த்தைக்கும் தனித்தனியே பொருள் கூறுவது நன்றாக உள்ளது. இலக்கியச் சார்பில்லாமல், சாதாரண முறையில் விளக்கம் அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்கிறார் வளவனூர் புதுப்பாளையம் எஸ்.செல்வம்.
--தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சிக்குப் பொறுப்பேற்று இருக்கும் தமிழ்ச்செல்வம் அறிமுகம் செய்துள்ள புதிய பாடத்திட்டம் அனைவரையும் கவரும் வகையில் உள்ளது என்கிறார், 30 பள்ளிப்பட்டி P.R.சுப்ரமணியன்.
--இப்பகுதியில், சீன மொழி மூலம் பற்றி எடுத்துக் கூறியது எங்களுக்குப் புரிய வில்லை. நிகழ்ச்சி அருமையாக இருந்தது. சிறப்பாக தொகுத்து வழங்கிய பாசமிகு அறிவிப்பாளர் தமிழ்செசல்வம் அவர்களுக்கு நன்றி என்கிறார் கண்டமங்கலம், ஏ.முஜீபுர் ரஹ்மான்.
--தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி, தற்போது வித்தியாசமாக உள்ளது. ஒரு பாடத்தை விளக்கிய பிறகு, அடுத்த நாள் மீண்டும் நினைவுபடுத்துவது சிறப்பாக உள்ளது என்கிறார் ஆரணி, இ.ரேணு.
அடுத்து, இனிமையான இசை நிகழ்ச்சி பற்றிய கருத்துக்கள்.
--லட்சுமி வழங்கிய இசை நிகழ்ச்சியில், பனிமலையும் சதுப்பு நிலமும் யாருக்காக, ஊரின் பெருமை, சீன மக்கள் விரும்பும் பாடல் என்று இசையுடன் கூடிய பாடல்களை ஒலிக்க வைத்து நிகழ்ச்சியை விறுவிறுப்பு அடையச் செய்தார். பாராட்டுக்கள் என்று, புதுவை ஜீ.ராஜகோபால் தெரிவித்தார்.
--இசை நிகழ்ச்சி மூலமாக, சீனாவில் உழைப்பாளர் நாளை, சீன மக்கள் எவ்வாறு கொண்டாடுகிறார்கள் என்பதை அறிந்துகொண்டேன். வாரம் ஒரு முறை, சீனப் பாடல்களைக் கேட்டு, மகிழ முடிகிறது என்கிறார் கைத்தறிநகர், J.D.ஆனந்தன்.
--இசை நிகழ்ச்சியில், தாயின் பாசத்தை விட தந்தையின் பாசம் மிகவும் சிறந்தது என்பதை, சீனப் பாடல் அறிவித்தது. செவிக்கு விருந்து படைப்பதாக அமைந்திருந்தது என்கிறார், திருச்சி ராப்பள்ளி, ஏ.எம்.நஜ்முல் ஆரிபீன்.
--உழைப்பாளர் நாளை முன்னிட்டு லட்சுமி வழங்கிய, உழைப்பாளர்களை உளமார வாழ்த்தும் பாடல் மிக அருமையாக இருந்தது. தொழிலாளர் மிகவும் கவுரவம் வாய்ந்தவர்கள் எனும் பாடல் மிகச்சிறப்பாகவும், இனிமையாகவும் இருந்தது என்று ஒரு நேயர் கருத்து தெரிவித்தார்.
--சீனப் பாடலுக்கு தமிழ் விளக்கம் அளித்த வட்சுமிக்கு நன்றி. பாடலின் மொழி புரிய வில்லை என்றாலும், இசை இனிமை என்கிறார், 30 பள்ளிப்பட்டி R.பழனிசாமி.
--இசை நிகழ்ச்சியில், பாடலை ஒலிபரப்புவதற்கு முன், அந்த பாடலின் பொருளைக் கூறி விட்டு, பின்னர் பாடலை ஒலிபரப்புவது, பாடலை புரிந்துகொண்டு போன்ற உணர்வினை ஏற்படுத்துகிறது. இந்நிகழ்ச்சி, வரவேற்கப்பட்ட நிகழ்ச்சியாகும் என்கிறார், பாண்டமங்கலம், எம்.தியாகராஜன்.
சமூக வாழ்வு நிகழ்ச்சி மூலம், இன்றைய சீன மக்களின் வாழ்வு முறையை புரிந்துணரலாம். இந்த நிகழ்ச்சி பல நேயர்களைக் கவர்ந்துள்ளது.
--சாங்குவா பசுமை குடும்பம் எனும் கட்டுரையில், சீனாவில் ஹைவே மாநிலத்தில் அமைக்கப்பட்ட இந்த 2002ம் ஆண்டு திங்கள் முதல் வெற்றிகரமாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தாய் தகப்பன் ஒரு குடும்பம் வருவோரை உபசரித்து, அவர்கள், தொடர்ந்து இன்பமுடன் வாழ்க்கையைக் கழிக்க, பெரும் முயற்சியின் விளைவாக நடைபெறுகிறது என்கிறார் 30 பள்ளிப்பட்டி, N.முருகேசன்.
--சமூக வாழ்வு நிகழ்ச்சியில், சீனா பற்றி ரஷ்ய தூதரின் மனைவி கூறிய கருத்து மூலம், சீன மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் ரஷ்ய தூதரின் சீனா பற்றிய கருத்துக்கு உலக பெரும்பாலான தூதர் குடும்பங்களின் கருத்தும் ஒன்றே எனலாம் என்கிறார், நாகர்கோவில், பிரின்ஸ் ராபர்ட் சிங்.
--சீனாவின் யாங்சி ஆற்று மூமலை இடுக்கு நீர்தேக்க திட்டமும் மின் உற்பத்தியும் பற்றிய கட்டுரை இது, கேட்டேன். 1994ம் ஆண்டு துவங்கியது. பயன் மிக்கது நாட்டுக்கு சிறந்த பங்கு ஆற்றுகிறது என்பதை, மிக தெளிவாக அறிந்தேன் என்கிறார் ராமியம்பட்டி, எஸ்.பாரதி.
|