• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-11-22 10:49:25    
சீனாவில் நரம்பியல் அறுவை சிகிச்சை

cri

மனித குல வரலாற்றில் ஒரு நூற்றாண்டு என்பது, கடல் நீரில் ஒரு துளிக்கு ஒப்பாகும். ஆனால், கடந்த நூறு ஆண்டுகளில், "நியூரோ சர்ஜரி" எனப்படும் நரம்பியல் நோய்களுக்கான அறுவை சிகிச்சை அளிப்பதில், சீனா மாபெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. மேலை நாடுகளைக் காட்டிலும் இத்துறையில் சீனா மிகவும் பின்தங்கியிருந்த போதிலும், சீன மருத்துவர்கள் முன்னேறிய நாடுகளின் மருத்துவர்தம் திறமையை வெகு விரைவில் எட்டிப் பிடித்துள்ளனர். இன்று, இத்துறையிலான எத்தகைய சிக்கலான அறுவை சிகிச்சையும் சீனாவில் அளிக்கப்பட முடிகிறது என்பது, அபார வளர்ச்சியாகும். 1949இல் நவ சீனா நிறுவப்பட்ட பிறகு, இத்துறையில் மிகுதியும் அக்கறை செலுத்தப்பட்டது.

1970ஆம் ஆண்டுகளின் பிற்பாதியில், வெளிநாட்டுத் திறப்புக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படத் துவங்கிய பிறகு, இத்துறையில் சீனா ஆர்வம் காட்டலாயிற்று. பிற நாடுகளின் மருத்துவத்துறை நுட்பங்கள், சீனாவுக்குள் தாராளமாக நுழைய வழியேற்பட்டது. மூளையில் வளரும் கட்டியை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சை, அபாரமான ஒன்று. BRAINSTEM-அதாவது மூளைத் தண்டு-நமது கட்டை விரல் அளவே இருக்கின்றது. மூளையின் செயல்பாட்டைக் கட்டுப்பத்துகின்றது. அதில் கை வைக்க, மருத்துவர் பயந்த காலம் ஒன்று உண்டு. சீனாவில் இத்தகைய அறுவை சிகிச்சையை பச்சைக்கொடி காட்டித் துணிச்சலாகத் துவக்கி வைத்த பெருமை, வாங் ஸோங் செங் என்பாரையே சாரும். "சீனாவின் நம்பியல் ஆறுவை சிகிச்சையின் தந்தை" என அவர் போற்றப்படுகிறார். இத்துறை, சீனாவில் வேரூன்றி வளர்வதற்கு அவர்தாம் காரணம். மூளையில் வளரும் கட்டியை அகற்றுவதற்காக 520 பேருக்கு அறுவை சிகிச்சையளித்துள்ளார். ஒரு விழுக்காட்டினர் மட்டுமே உயிர் பிழைக்கவில்லை. ஆக, இன்று பிற நாடுகளில் மருத்துவர் அஞ்சக்கூடிய ஒரு சில நரம்பியல் அறுவை சிகிச்சை, சீனாவில் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.

மக்கள் தொகை மிகுந்த நாடான சீனாவில் மூளைக் கட்டிக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதில் வியப்பில்லை. ஒரு இலட்சம் சீன மக்களில், 7 பேர் தற்போது இவ்வாறு பாதிக்கப்படுவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, இந்த மருத்துவத் துறையின் வளர்ச்சியானது, சீனாவைப் பொறுத்தவரை மிக மிக இன்றியமையாததாகிறது. இத்தகைய சிகிச்சை வழங்கும் மருத்துவமனைகள் சீனாவில் ஏராளமாக இருப்பதாக மருத்துவ நிபுணர் வாங் பெருமைப்படுகின்றார். உலகின் முன்னேறிய மருத்துவ நுட்பங்களைச் சீனா உள்வாங்கி வருகிறது. எடுத்துக்காட்டாக, மூளையில் ஏற்படும் கட்டியை அகற்றுவதில் "மைக்ரோ சர்ஜரி" பயன்படுத்தப்படுகிறது. உரிய இடத்தைக் கண்டறிந்து அறுவை செய்வது என்பதற்கு மைக்ராஸ்கோப் இதில் பயன்படுத்தப்படுகிறது. மைக்ராஸ்கோப்பில் பார்த்துக் கொண்டே, அறுவை சிகிச்சைக்கான இலக்கை மருத்துவர் எளிதாகவும் சரியாகவும் கண்டறிய முடியும். இந்த அறுவை சிகிச்சை அளிப்பதில் சிறந்து விளங்கும் மருத்துவமனைகளும் மருத்துவர்களும் சீனாவில் இன்று உண்டு என்பது பெருமைக்குரியது. எனினும், சீனாவில், இந்த துறையிலான ஆய்வு, போதுமானது அல்ல எனும் கருத்தும் நிலவுகிறது. போதிய நிதியுதவி இல்லாமையே இதற்குக் காரணம் எனக் கருதப்படுகிறது. இந்நிலையில் "நியுரோசர்ஜரி பயிற்சி மையம்" ஒன்று பெய்ஜிங்கில் நிறுவப்பட இருக்கிறது என்பது அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் செய்தி!