• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-11-25 11:28:46    
இலவச ரத்த தானம் செய்யும் அமைப்பு முறை

cri

இலவச ரத்த தானம் செய்யும் அமைப்பு முறை சமூகத்தின் நாகரிகத்தையும் முன்னேற்றத்தையும் எடுத்து காட்டும் முக்கிய அறிக்குறியாக மாறியுள்ளது. பல நாடுகளில் இந்த அமைப்பு முறை பரவலாக்கப்பட்டுள்ளது. ஆறு ஆண்டுகளுக்கு முன் சீனாவில் பல்வேறு இடங்களில் இந்த அமைப்பு முறை நிறுவப்பட்டுள்ளது. நடைமுறையில் பெரும் சாதனை கண்டுள்ளது. பயன் தரும் முறையில் சிகிச்சைக்குத் தேவையான ரத்த பயன்பாட்டின் பாதுகாப்பை இம்முறை உத்தரவாதம் செய்துள்ளது.

முன்பு நீண்ட காலமாக பல சீனர் ரத்த தானம் செய்வது பற்றி அறிவியல் ரீதியில் அறிந்து கொள்ள வில்லை. இப்படி செய்தால் சொந்த உடல் நலத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்று தவறாக அறிந்து கொண்டனர். ஆகவே ரத்த தானம் செய்வோரின் எண்ணிக்கை மிக குறைவு. 1998ம் ஆண்டில் சீனாவில் ரத்த தானம் செய்வதன் மூலம் கிடைத்த ரத்த அளவு சிகிச்சைக்குத் தேவையான ரத்த அளவில் சுமார் 20 விழுக்காடு மட்டும் வகித்தது. எஞ்சியது கட்டணத்துடன் வாங்கிய ரத்தமாகும்.

ரத்த தானம் செய்வோரில் விவசாயிகளும் நகர மற்றும் கிராமப்புறத்தில் வாழ்கின்ற குறைந்த வருமானம் பெறுவோரும் இருந்தனர். அவர்கள் ரத்தத்தை விற்பனை செய்வதை பொருளாதார வருமானம் பெறும் ஊற்று மூல ஒன்றாக பயன்படுத்தி வாழ்ந்தனர். ஆகவே சம்பாதிப்பதற்காக அவர்களில் சிலர் நோய்வாய்ப்பட்ட போதிலும் உண்மை நிலைமையை தெரிவிக்காமல் தொடர்ந்து ரத்தத்தை விற்பனை செய்தனர். அப்போது சீனாவில் ரத்த பரிசோதனை வழிமுறை கண்டிப்பற்றத்தில் இருந்ததால் ரத்தம் பெறுவதன் மூலம் எய்ட்ஸ் நோய், கல்லீரல் அழற்சி போன்ற நோய்கள் தொற்றிவிக்கப்படும் நிகழ்ச்சி அடிக்கடி நிகழ்ந்தது.

1998ம் ஆண்டு முதல் சிகிச்சைக்குத் தேவையான ரத்தத்தின் பாதுகாப்பை உத்தரவாதம் செய்யும் வகையில் சீனா பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இவற்றில் "ரத்தம் வழங்கும் சட்டம்" வகுக்கப்பட்டு இலவச ரத்த தானம் செய்வதன் சட்ட தகுநிலை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சமூகம் முழுவதிலும் இலவச ரத்த தானம் செய்வது பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது. இந்த அமைப்பு முறை சீனாவில் மிக சிறந்த பயன் கண்ட்டுள்ளது என்று சீன நலவாழ்வு அமைச்சகத்தின் மருத்துவ விவகார பகுதியின் துணை தலைவர் வான் யு தெரிவித்துள்ளார். 

1998ம் ஆண்டுமுதல் சீனாவில் இலவச ரத்த தானம் செய்யும் பணி சட்ட அமைப்புமயமாக்க பாதையில் அடியெடுத்துள்ளது. இதுவரை பெரும் முன்னேற்றமடைந்துள்ளது. சமூகத்தின் பல்வேறு துறைகள் மிக பல மக்கள் ஆகியோர் இதில் பங்கெடுப்பதுடன் 1998ம் ஆண்டை விட 2003ம் ஆண்டில் இலவச ரத்த தானம் செய்த ரத்த அளவு சிகிச்சையில் பயன்பாட்டு ரத்தத்தில் 60 விழுக்காட்டுக்கு மேலாக வகித்தது என்றார் அவர். 2003ல் சிகிச்சையில் பயன்படுத்தப்பட்ட ரத்தத்தில் இலவச ரத்த அளவு 85 விழுக்காட்டை எட்டியது. இலவச ரத்த தானம் செய்வதை பரவல் செய்யும் போக்கில் சீன உள்ளூர் அரசாங்கங்கள் பொது மக்கள் இது பற்றி குறைந்த அறிவியல் அறிவை கொண்டதை குறித்து, இலவச ரத்த தானம் செய்வது பற்றிய அறிவை பிரச்சாரம் செய்து கல்வி அறிவை அளிக்கும் பணியை மேற்கொண்டுள்ளன. தகுந்த அளவில் ரத்த தானம் செய்வது என்பது உடல் ஆரோக்கியத்துக்குத் தீங்குவிளைவிக்காது என்பதை நடவடிக்கை மூலம் மக்களை அறிந்து கொள்ள உதவி செய்துள்ளன. ரத்த தானம் செய்வதென்ற முக்கியத்துவத்தை அவர்கள் அறிந்து கொள்ள உதவியுள்ளன. அதேவேளையில் சில உள்ளூர் அரசாங்கங்களின் தலைவர்கள் முன் வந்து ரத்த தானம் செய்தனர். வானொலி தொலைக் காட்சி மற்றும் செய்தி தாள்கள் போன்ற செய்தி ஊடகங்கள் நீண்டகாலமாக இலவச ரத்த தானம் செய்யும் நடவடிக்கைகளை பற்றி பிரச்சாரம் செய்துள்ளன. தவிர, இலவச ரத்த தானம் செய்யும் அணியில் சேர குடி மக்களுக்கு வேண்டுகொள் விடுத்து ரத்த தானம் செய்வது பற்றிய பிரச்சாளராக இருக்குமாறு சீன சமூகத்தில் செல்வாக்கு மிக்க புகழ் பெற்ற திரைப்பட நடிகருக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த நடவடிக்கைகள் சமூகத்தின் மாபெரும் எதிரொலிப்பை எழுப்பின. இலவச ரத்த தானம் செய்யும் பணி சீன பொது மக்களிடமிருந்து பரந்தளவிலான புரிந்துணர்வையும் ஆதரவையும் பெற்றுள்ளது.