• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-11-26 08:51:46    
நேயர்களின் கருத்துக்கள் 29

cri
எமது ஒலிபரப்பு பற்றிய பல்வேறு வட்டாரத்தினரின் கருத்துக்களை இப்போது கேட்கலாம்.

--சீன வானொலி தமிழ் நிகழ்ச்சிகளை, மூன்று ஆண்டுக்கு மேலாக கேட்டு வருகிறேன். சீன தமிழ் சுவையும் ஒலியும் தரும் ஆனந்தம், எமக்கு பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது அரசுசார்பற்ற நட்புபாலம் சிதையாமல் இருக்க வானொலி உறுதுணையாக இருக்கிறது என்கிறார் சேலம்-8, S.சரத்பாபு.

--ஒலிபரப்பை ஒரு மணி நேரமாக மாற்றியதன் மூலம், நேயர் விருப்பம் நிகழ்ச்சி மீண்டும் வலம் வந்திருப்பது பாராட்டிற்குரியது என்கிறார், திருச்சி அண்ணாநகர், N.S.பாலமுரளி.

--ஜூலை 15 முதல், தமிழ் ஒலிபரப்பு ஒரு மணி நேரம் ஆக்கப்பட்டது குறித்து, மிகவும் பெருமை அடைகிறேன். நேயர்களுக்கு எதிர்பார்த்த இன்ப அதிர்ச்சி இந்த 1 மணி நேரம் அதிகரிப்பு இதனால் பல புதிய நிகழ்ச்சிகள் அறிமுகமாகும் என்கிறார் சேந்தமங்கலம், ஜெ.பாஸ்கர்.

--நட்பு பாலம் நிகழ்ச்சியில், வாணி அம்மையார், புது தில்லியில் தமிழ் மொழியை பயிற்றுவித்த பேராசிரியருடன் நடத்திய உரையாடலை அறிய தந்தீர்கள். தென்னிந்திய உணவுவகைகளை ருசித்து சாப்பிட்ட அனுபவங்களை, வாணி, எங்களிடம் பகிர்ந்து கொண்டார் என்கிறார், ஈரோடு, M.C.பூபதி.

--நட்பு பாலம் நிகழ்ச்சியில், பல நேயர்களின் குரல் இடம்பெற்றது. விநாயக மூர்த்தி, ராமபத்திரன் இருவரின் உள்ளங்களையும், மனிதர் உள்ளத்தை வார்த்தை வடிவில் எங்களுக்கு வழங்கப்பட்டது என்கிறார் சேந்தமங்கலம், K.சிவக்குமார்.

--ஆசிய ஒத்துழைப்பு அமைச்சர் நிலைகூட்டத்தில் சீனத் தலைமையமைச்சர் ஆற்றிய உரை பற்றிய செய்தித்தொகுப்பைக் கேட்டேன். புதிய பொருளாதார சூழ்நிலையில் கூட்டு ஒத்துழைப்பு தான் வளர்ச்சிக்கான உத்தரவாதம் என்பதில் ஐயமில்லை. சீனா கூட்டாகப் பாடுபட தயாராய் இருப்பது, அவற்றிடையே ஆர்வத்தை ஏற்படுத்தும் என நம்புகின்றேன் என்கிறார் மணமேடு, எம்.தேவராஜா.

--உலக நலவாழ்வு நாளை முன்னிட்டு, ஒலிபரப்பான சீனாவில் நெடுஞ்சாலை பாதுகாப்பு எனும் செய்தித்தொகுப்பைக் கேட்டேன். ஓராண்டில் மட்டும் 12 லட்சம் பேர் சாலை விபத்தில் உயிரிழக்கும். விபரத்தை தெரிவித்த இந்த நிகழ்ச்சிக்கு பாராட்டுக்கள் என்கிறார், பாலக்காடு, T.V.ராமசுவாமி.

--உயிரைப் பறித்த வண்டு என்ற சீனக் கதையை கடிகாசலம் அவர்கள் வாசிப்பில் கேட்டு மகிழ்ந்தேன். கதையின் முடிவு நன்றாக அமைந்திருந்தது என்கிறார், தார்வழி வி.வினாயகமூர்த்தி.

--பழி வாங்கிய பாவை என்ற சீனக் கதையின் முதல் பகுதியைக் கேட்டேன். முத்துமாலை யாருக்குச் சொந்தமாகும், நீதிபதி பாவ் என்ன தீர்ப்பு கூறுவார் போன்ற எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திவிட்டது. அந்தக் கதை. முடிவை அறிய இன்னும் 7 நாள் காத்திருக்க வேண்டியுள்ளதே இருக்கிறது என்கிறார் காசுக்காரன் பாளையம், D.நந்தகுமார்.

--சீனாவில் இன்ப பயணம் நிகழ்ச்சியில், அயனி கிராம மக்கள் வாழ்க்கை பற்றி கேட்டேன். அவர்கள் வாழ்க்கை வடிவமைப்பு, வாழ்க்கைத் தரம், பற்றிய தகவல்களைக் கேட்டவுடன், நேரில் சென்று பார்க்க வேண்டும் போல் உள்ளது என்கிறார், கரியாப்பட்டிணம், K.N.தங்கமுத்து.

--சீன பண்பாடு நிகழ்ச்சியில் இடம்பெற்ற, முதலாவது பெளர்ணமி நாளில் கொண்டாடப்படும் வசந்த விழா பற்றிய கட்டுரை சிறப்பாக இருந்தது. தீப திருவிழா வின் போது, பலவகை வடிவிலான பலவகை நிறுத்திலான விளக்குகள் அரண்மனையில் தொங்க விடப்படுவதும் டிரரகன் நடனமும், கற்பனையில் சீனாவை வலம் வரச்செய்தன என்கிறார் திருவாணைக்காவல், ஜி.சகரபாணி.

இனி, இலங்கை நேயர் சிலரின் கருத்துக்களை கேளுங்கள்.

--சீன வானொலி நிகழ்ச்சிகள், தமிழ்ப் பேசும் மக்கள், இனிமையாக பொழுதைக் கழிப்பதற்கு உதவுகிறது. என்னை மிகவும் கவர்ந்த நிகழ்ச்சி, நேயர் நேரம். புதன்கிழமை தோறும் ஒலிபரப்பாகும் இந்நிகழ்ச்சியை, தவறாது கேட்டு வருகிறேன் என்கிறார், காத்தான்குடி-2 M.A.F.ரிசானா.

--மக்கள் சீனம் நிகழ்ச்சியில், கிராமம் பற்றி விளக்கிக்கூறினீர்கள். அதில் கிராம எண்ணிக்கை, கிராமத்திலுள்ள மக்களின் ஆடை, தொழில் மற்றும் ஏனைய விடயங்கள் ஒவ்வொன்றையும் விளக்கிக்கூறினீர்கள். சீன கிராமம் பற்றி அறிந்து கொள்ள ஏதுவாக இருந்தது என்கிறார் காத்தான்குடி-1 M.B.பாரிஜா சிதாரா.

--20 ஆண்டுகளுக்கு முன் கேட்ட பெய்ஜிங் வானொலி தமிழ் ஒலிபரப்பிற்கும், இன்றைய சீன வானொலி ஒலிபரப்பிற்கும் இடையே நிறைய வேறுபாடு உண்டு என்பதை, மிகத் தெளிவாக உணர முடிகிறது. தமிழ்ப்பணியின் வளர்ச்சி கண்டு பெருமை கொள்கின்றோம் என்கிறார் கண்டி, மாலதி, சண்முகம்.

--சீன சமூக வாழ்வு நிகழ்ச்சி பாராட்டுக்குரியது. பாலைவனத்தின் முத்து வடமேற்குப் பிரதேசம் குறித்தும், செழுமை மற்றும் தூய்மை பூங்கா நகரம் குறித்தும், மணல் காற்றைத் தடுத்து வாழ்க்கை சீர்செய்வது குறித்தும், குறிப்பிட்ட கருத்தாய்வு மிகவும் அருமை என்கிறார் பாண்டமங்கலம், P.R.கார்த்திகேயன்.

--இந்த நிகழ்ச்சியின் வாயிலாக, க்வ்ஸகி அவர்களின் சமூக அக்கறை கொண்ட பொது சேவை பற்றிக் கூறக் கேட்டேன். யாங்சி ஆற்று வெள்ள பெருக்கால் ஏற்பட்ட இயற்கைச் சீற்றங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உடை இருப்பிட வசதியை, ஓர் அரசாங்கம் செய்ய வேண்டிய கடமையை, அவர் ஒருவரே செய்தது சாதனை தான் என்கிறார், புதுக்கோட்டை G.வரதராஜன்.