• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-12-03 09:50:05    
நேயர்களின் கருத்துக்கள் 30

cri

நேயர்களால் மிகவும் வரவேற்கப்படும் நிகழ்ச்சிகளில், நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி இடம்பெறுகிறது. அதில், பயனுள்ள தகவல் பெறலாம் என்கிறார் பல நேயர்கள் தெரிவித்தனர்.

--உடலில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டால் கை கால் சோர்வு ஏற்படும். வளர்ச்சி பற்றாக்குறையாகும். கைக்குழந்தைக்கு நீர் ஊற்றும் போது, வளர வளர நீரை கூடுதலாக்க வேண்டும். தாய்ப்பால் குடிக்காத குழநத்தைக்கு நீர் அதிகம் தர வேண்டும். இனிப்பான சாற்றை ஊற்றக் கூடாது என்பதை அறிந்துகொண்டேன் என்கிறார், வாழ்மான பாளையம், தி.அழக நாச்சியார்.

--இதில், மனச்சோர்வு ஏன் ஏற்படுகிறது. அதனால் ஏற்படும் விளைவுகள் ஆகியவற்றை அறிந்துகொண்டோம். தொடர்ந்து வந்த, பாண்டமங்கலம் தியாகராஜன் வழங்கிய பதட்டம் பற்றிய தகவல்கள் மிகச் சிறப்பாக இருந்தன. பதட்டத்தைத் தவிர்க்கவும், போக்கவும் அவர் கூறிய வழிமுறைகள் மிகப் பயனுள்ளவை என்கிறார், மீனாட்சிபாளையம், கே.அருண்.

--மனித வாழ்விற்கு உடல் உறுதியுடன் இருந்தால் தான், நல்லது. அந்த உடல் உறுதியை பெறுவதற்காக நாள்தோறும் உடற்பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. எந்தேந்த வயதுடையவர்கள் எந்தேந்த உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று பட்டியலிட்டுக் கூறினார். உடலின் உறுதி உடையவரே உலகில் உறுதி உடையவர் என்ற வாய் மொழி இந்த நிகழ்ச்சி மூலம் உண்மையாகி உள்ளது என்கிறார், சேந்தமங்கலம், வி.பாலகிருஷ்ணன்.

--சீனாவிடம் இருந்து இந்தியா அதிக அளவு இறக்குமதி செய்யும் வெள்ளை பூண்டிற்கு ரத்தம் உறைவதை தடுக்கம் திறனுடன், ரத்தத்தை கெட்டு போகாமலும் பாதுகாத்திடும் சக்தி உள்ளதையும், ரத்தப் புற்றை அண்டவிடாமல் விரட்டி அடிக்கும் அதிசய குணம் உள்ளதையும் கேட்டு ரசித்தோம் என்கிறார் செல்லூர் N.சீனிவாசன்.

--பொது மக்களின் பாதுகாப்பு போன்றவை, எப்போதும் முதலிடத்தில் வைக்கப்பட வேண்டும் என்பது நியாயமானதே. மக்களின் வாழ்க்கைத் தரத்தை தூக்கி நிறுத்துவதில் சீன அரசு அரும்பாடுபட்டு வருவது பாராட்டுதற்குரியது என்கிறார், செந்தலை N.பாலமுரளி.

--பாண்டமங்கலம் எம்.தியாகராஜன் தொகுத்து வழங்கிய நலவாழ்வுப் பாதுகாப்பு செய்திகளைக் கேட்டேன். மேலும் தேவைகளை ஆராயந்து நம் வாழ்வில் வளர தெரிவு செய்ய வேண்டும் என பல கருத்துக்களைக் கூறினார் என்கிறார் ராமியம்பட்டி, எஸ்.பாரதி.

வேறுபட்ட காலத்தில், வேறுபட்ட இசைகளையும் பாடல்களையும் இசை நிகழ்ச்சியில் சேர்த்து வருகிறோம். அண்மையில், நேயர் விருப்பம் நிகழ்ச்சி துவங்கியது. இதில், புகழ்பெற்ற சீன பாடல்களையும், நீங்கள் விரும்பும் தமிழ்பாடல்களையும் கேட்கலாம்.

--இசை நிகழ்ச்சியில், சீன மக்கள் விடுதலைப் படை உருவாகி 27ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் அவ்வேளையில் அதனை சிறப்பிக்க ஒலிபரப்பிய அனைத்துப் பாடல்களும் அருமை. அப்பாடலில் சீன மக்களின் நாட்டுப்பற்று வெளிப்பட்டது. இவ்வாறு முக்கிய நாட்களில் அவை பற்றிய செய்திகளுக்கு சீன அரசு வழங்கியுள்ள முக்கியத்துவத்தை அறிய முடிந்தது என்கிறார், 30 பள்ளிப்பட்டி, N.கார்த்திகேயன்.

--தாய்நாட்டைப் பேணிக்காத்த வீரர்களை நினைவு படுத்திய அருமையான பழைய பாடல் கேட்கச் சுவையாக இருந்தது என்கிறார் விழுந்தமாவடி, ஆர்.மகேந்திரன்.

--சீன கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்ட நாளை முன்னிட்டு, ஒலிபரப்பான சிறப்பு நிகழ்ச்சியில் சீன மக்களை பெரிதும் உயர்த்திய சீன கம்யூனிஸ்ட் கட்சியில்லை என்றால் நவசீனா இல்லை எனும் பாடலும், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில், நாட்டு மக்களுக்கு உணவு உடை போன்ற அடிப்படை பிரச்சினைகள் இல்லை என்ற கருத்தில், தாய்நாட்டின் நல்ல மக்களாக நாங்கள் விளங்குவோம் என்ற பொருள் தரும் பாடல் மிகச் சிறப்பாக இருந்தது என்கிறார், 30 பள்ளிப்பட்டி, P.R.சுப்ரமணியன்.

--லட்சுமி வழங்கிய இசை நிகழ்ச்சியில், சீன மக்கள் விடுதலைப்படையுடன் தொடர்புடைய பாடல்கள் இடம்பெறச்செய்தார். எல்லைப்பிரதேசத்தின் ஊற்றுநீர், ஏன் பூக்கள் சிவப்பாக உள்ளன, புரட்சிக்கான கால நிலை உட்பட பாடல்கள் மிகவும் சிறப்பு என்கிறார், புதுவை, ஜீ.ராஜகோபால்.

--இசை நிகழ்ச்சியில் ஒரு வாரம் தமிழ்ப்பாடல்களையும் மற்றொரு வாரம் சீன மொழிப் பாடல்களையும் மாறிமாறி வழங்கலாம். பாடல்களை வழங்கும் போது, நேயர்களின் பெயர்களை வாசிக்கலாம் என்கிறார் பரசலூர், எஸ்.உத்தமசீலன்.

--நேயர் விருப்பம் நிகழ்ச்சி, நேயர்களை கவரும் நிகழ்ச்சியாகும். வானொலியில், பாடல் கேட்பது நேயர்களின் எதிர்பார்ப்புகளில் ஒன்று தான். இந்த நிகழ்ச்சியை நான் பெரிதும் வரவேற்கிறேன் என்கிறார் எஸ்.நாட்டாமங்கலம், ஏ.மாதுராஜ்.