• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-12-06 18:55:15    
கலப்பின் நெல் அறிவியலாளர் யுவான் லுங்பிங்

cri

சீனாவின் புகழ் பெற்ற வேளாண் துறை அறிவியலாளர் யுவான் லுங்பிங் 2001ஆம் ஆண்டு 50 லட்சம் ரேன்மின்பி யுவான் பரிசு தொகையை பெற்றுக்கொண்டார். 70 வயதான யுவான் லுங்பிங் 1953ஆம் ஆண்டு சீனாவின் தென் மேற்கு வேளாண் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றார். 60 ஆண்டுகள் கலப்பின நெல் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடலானார். கலப்பின் நெல் பற்றிய அரசின் திட்டப் பணிக்கான தொழில் நட்ப ஆய்வு மையத்தின் தலைவராகவும், தற்போது அவர் பணிபுரிகின்றார். தமது வாழ்நாள் முழுவதையும் வேளாண் துறை பற்றிய ஆராய்ச்சிக்கு அவர் அர்ப்பணித்துள்ளார்.

விதை வளர்ப்பு துறையிலான முன்னேற்றம். வேளாண் உற்பத்திக்கு பெரும் வளர்ச்சியை ஏற்படுத்தலாம் என்பதை வேளாண் வளர்ச்சியின் வரலாறு காட்டியுள்ளது. அறிவியல் தொழில் நுட்பத் துறையில் சீனா அவ்வாளவு வளர்ச்சியடைந்திராத போதிலும், விதை வளர்ப்பு துறையில் அது முன்னணியில் உள்ளது. இதுவரை உலகளவில் வெற்றிகரமாக நிகழ்ந்து இரண்டு முறை நெல் வகை வளர்ப்பிலும் சீன அறிவியலாளர்கள் தான் முதலில் ஆராய்ச்சி செய்து வெற்றி பெற்றனர். 60ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில், சீன அறிவியலாளர்கள் ஒரு புதிய குட்டையான நெல் வகையை ஆராய்ச்சி மூலம் வளர்த்தனர். அதன் தலா ஹெக்டர் விளைச்சல் சாதாரண நெல்லின் விளைச்சலை விட 20 விழுக்காடு முதல் 30 விழுக்காடு அதிகரித்தது. காற்று, உரம் ஆகியவற்றை தாக்கு பிடிக்கக் கூடிய இந்த நெல் ஆய்வு லட்சியத்திலான யுவான் லுங்பிங்கின் பெரும் ஆர்வத்தை எழுப்பியுள்ளது. அப்போது அவர் ஒரு வேளாண் பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்திருந்து வந்தார். பாடம் கற்பிக்கும் அதே வேளையில், கலப்பின் நெல் பற்றிய ஆராய்ச்சியையும் பள்ளிகூட ஆராய்ச்சி அறையில் துவக்கினார்.

சுமார் பத்து ஆண்டுகால முயற்சி மூலம், காட்டு நெல்லையும் வளர்ப்பு நெல்லையும் ஒன்று கலந்து உயர் விளைச்சலைத் தரும் கலப்பின நெல்லை அவர் வெற்றிகரமாக வளர்த்தார். சாதாரண நெல்லை கலப்பின நெல்லாக மாற்றிய போது, கலப்பினத்தின் மேம்பாட்டை பயன்படுத்தும் அதே வேளையில் குட்டை நெல்லின் சிறப்பு தன்மையையும் நிலைநிறுத்தியுள்ளது. இவ்வாறு கலப்பின நெல்லின் விளைச்சல், குட்டை ரக நெல்லின் விளைச்சலை விட மேலும் 20 விழுக்காடு அதிகரித்துள்ளது. 1976ஆம் ஆண்டு, கலப்பின் நெல் சீனாவின் விசாலமான நிலப்பரப்பில் பயிரிடப்படத் துவங்கியது. நெல் பயிரிடுவதில் கலப்பின நெல்லின் மேம்பாட்டை பயன்படுத்திய முதலாவது நாடாக சீனா மாறியுள்ளது. இது வேளாண் துறை வளர்ச்சி வரலாற்றில் காணப்படும் ஒரு மாபெரும் முன்னேற்றம் ஆகும். இரண்டாவது "பசுமை புரட்சி" என இது உலகில் அழைக்கப்பட்டது.

உலகின் நெல் அறிவியலாளர்களிடையே, கலப்பின நெல்லின் தந்தை என்று யுவான் லுங்பிங் போற்றப்பட்டார். கடந்த 50 ஆண்டுகளில், சீன மக்கள் தொகை 50 கோடியிலிருந்து 120 கோடியாக அதிகரித்துள்ளது. அதே வேளையில், தானியத்தில் தன்னிறைவை சீனா அடிப்படையில் உத்தரவாதம் செய்துள்ளது. இதற்கு யுவான் லுங்பிங்கின் கலப்பின நெல் ஆராய்ச்சி பெரும் பங்கினை ஆற்றியுள்ளது. புள்ளிவிபரங்களின்படி, கடந்து சில ஆண்டுகளில், சீனாவில் கலப்பின நெல் பயிரிடப்பட்ட நிலப்பரப்பு ஒரு கோடியே 50 லட்சம் ஹெக்டருக்கு அதிகமாகும். ஆண்டுதோறும் அதிகரித்த நெல் விளைச்சல் 6 கோடி பேரின் தானிய தேவையை நிறைவேற்ற முடியும். கலப்பின நெல் பயிரிடும் விவசாயிகள் பலரும் யுவான் லூங்பிங்கிற்கு உளமார்ந்த நன்றி தெரிவித்தனர்.

யுவான் லுங் பிங் பெரும் நிலப்பரப்பில் பயிரிட்ட நெல்லின் தலா ஹெக்டர் விளைச்சல் சுமார் 12 ஆயிரம் கிலோகிராமை எட்டியது. ஒரு சிறு நிலப்பகுதியில் அவர் பயிரிட்ட நெல்லின் தலா ஹெக்டர் விளைச்சல் 13 ஆயிரம் கிலோகிராமை எட்டியது. இவ்வாறு, சூப்பர் நெல் பற்றிய ஆராய்ச்சியின் குறிக்கோள் நிறைவேறியது. பிறகு, மீ உயர் விளைச்சல் தரும் நெல் விதை வளர்ப்பு பற்றிய ஆராய்ச்சியில் யுவான் லூங்பிங் ஈடுபட்டார். 2003ஆம் ஆண்டு அவர் இந்த ஆராய்ச்சியில் வெற்றி பெற்று மீ உயர் விளைச்ச நெல் விதையை அவர் சீன மக்களுக்கு வழங்கியுள்ளார்.