• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-12-10 08:08:57    
நேயர்களின் கருத்துக்கள் 31

cri
சீன பண்பாடு நிகழ்ச்சியில், சீனா பற்றிய பல்வேறு தகவல்களை நேயர்கள் அறிந்துக்கொள்ளலாம். இது பற்றிய கருத்துக்கள் கேட்டு மகிழுங்கள்.

--சீன பண்பாடு நிகழ்ச்சியில், சீனாவின் புகழ்பெற்ற TANG வம்ச நடனக்கலையை பற்றி கூறப்பட்டது. இந்த நடனக்கலையை தன்வம்ச அரசர்கள் தோற்று வித்ததால் இந்த நடனத்திற்கு இந்த பெயர் சூடப்பட்டது. 12 வகையான இசை நடனங்கள் நடித்துக்காட்டப்படுகின்றன. இதில் தலைச்சிறந்தது, வால் நடனம் தான் என்கிறார் ராசிப்புரம், கே.குணசேகரன்.

--திபெத் இனத்தை சேர்ந்தவர்கள் சீனா புத்தாண்டை மிகவும் ஆடம்பரமாக கொண்டாடினார்கள் என்றும், புத்தருக்கு வெண்ணயால் ஆன சிலை செய்து கொண்டாடினார்கள் என்றும் பல தகவல்களையும், சீன பண்பாடு நிகழ்ச்சியில் அறிந்துக்கொண்டேன் என்கிறார் கண்டமங்கலம், ஏ.முஜீபுர் ரஹ்மான்.

--வெண்ணை மலர்கள் என்ற திபெத் பாரம்பரிய புத்தாண்டு விழா பர்றியும் வெண்ணை சிலைகள் பற்றியும் அறிந்து வியப்படைந்தேன். வெண்ணை உருகுவதை தடுக்க பயன்படுத்தும் முறையை பாராட்டுகிறேன் என்கிறார், வளவனூர் கே.சிவக்குமார்.

--இதில், நாசி இன மக்களின் பண்பாடு சிறப்பு மிக்கது விழாக்கள், குதிரை பந்தயம், நடனம் ஆகியவை உண்டு. கோழி போன்ற இருபதுவகையான உணவு தியாரிக்கும் போது, தூய்மையாக கைபதாக உணவாக படையல் போட வேண்டும் போன்ற சிறப்பு மிக்க பண்டைய வரலாறுகளை கேட்கும் போது செவிக்குவிருந்தாகிறது என்கிறார், திருவானைகாவல் ஜீ.சக்ரபாணி.

--சீனாவின் புகழ்பெற்ற தங் வம்ச நடனக் கலையை பற்றி கூறப்பட்டது. இந்த நடனக் கலையை தன் வம்ச அரசர்கள் தோற்றுவித்தால் இந்த நடனத்திற்கு இந்த பெயர். 12 வகையான இசை நடனங்கள் நடத்துக்காட்டப்படுகின்றன. இதில் தலை சிறந்தது வால் நடனம் தான் என்கிறார் சேந்தமங்கலம் வி.யுவராஜா.

--இதில், ஒட்டிணைவு கலை வேலை குறித்துச் சொன்னீர்கள். தேவைக்கு எனத் தொடங்கி இப்போது ஒர் கலையாக வளர்ந்து, இதன் அடிப்படை காகிதக் கத்தரிப்பு என்பதையும் அறிந்தேன் என்கிறார் வேலுர், V.M.தமிழரசு.

--கலையாக மாறிய ஒட்டுத்துணி. ஒட்டுத்துணி பல வேலை பாடுகளுடன் பல வண்ணங்களாக ஒட்டப்படும் போது மிகவும் கலை வண்ணம் அளிப்பதாகவும், அதுவே பண்டைய கலாச்சாரத்தை உருவாக்கு வண்ணம் பெற்றதையும் அறிய முடிந்தது என்கிறார் குருணிகுரத்துப்பட்டி, C.முருகன்.

--சீனப் பண்பாடு நிகழ்ச்சியில், தீபத்திருவிழா கொண்டாடப்படும் விதம் அதன் வரலாறு. இந்த திருவிழா பல்வேறு பகுதிகளில் பல்வேறு விதமாக கொண்டாடப்படும் விதம் பற்றியும் தெரிந்து கொண்டேன் என்கிறார் வாதானூர், M.விநாயகமூர்த்தி.

இவ்வாண்டு ஜீலை 15ம் நாள் முதல், எமது ஒலிபரப்பு ஒரு மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இச்செய்தியைக் கேட்ட பின், நேயர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

--ஜீலை 15ம் நாள் முதல், தொடர்ச்சியாக ஒரு மணி நேர நிகழ்ச்சிகளை வழங்குவதற்கு அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றத்தின் சார்பிலும், அனைத்து நேயர்களின் சார்ப்பிலும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்ப்பிரிவு வரலாற்றில், இன்று மற்றுமொரு சாதனை நிகழ்த்தப்படுகிறது. சாதனை காலத்தில் தமிழ்ப்பிரிவின் நேயராக இருப்பதற்காக, உண்மையில் நான் பெருமைப்படுகின்றேன் என்கிறார், வளவனூர் புதுப்பாளையம், எஸ்.செல்வம்.

--பெருந்துறை பல்லவி கே.பரமசிவன் அவர்கள் தொலைபேசி மூலமாக ஒரு மணி நேர ஒலிபரப்பு தொடங்கியதற்கு வாழ்த்து கூறியதைக் கேட்டோம். தின மணி நாளிதழில் கூட பெட்டகச் செய்தியாக பிரசுரம் செய்திருந்தார்கள் என்கிறார் ஈரோடு, M.C.பூபதி.

--தமிழ் ஒலிபரப்பை ஒரு மணி நேரமாக வழங்கத்தொடங்கி இருக்கும் தமிழ்பிரிவிற்கு வாழ்த்துக்கள். பாராட்டுகள். இதை நாங்கள் வரவேற்கிறோம். மிகச் சிறப்பாக பணியாற்ற தமிழ்பிரிவு பணியாளர்களை வாழ்த்துகிறோம் என்று, மீனாட்சி பாளையம், கே.அருண், கே.அனிதா தெரிவித்தார்.

--ஜீலை 15ம் நாள் முதல், சீன வானொலியின் தமிழ் ஒலிபரப்பு நேரம், அதிகரிக்கப்பட்டுள்ளது. இச்செய்தி எங்களுக்கு நற்செய்தி ஆகும். சீன வானொலி படிப்படியாக வளர்ந்து ஒலிபரப்பு நேரம் அதிரித்தனமக்கு பாராட்டு. ஒரு மணி நேர நிகழ்ச்சியில் நேயர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்குவது. எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது என்கிறார் பச்சுடையாம்பட்டிப்புதூர், எஸ்.மணிகண்டன்

--தமிழ்ப் பிரிவு ஒரு மணி நேர நிகழ்ச்சி துவங்கி இருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியது. தினமும் நிகழ்ச்சி துழங்கும் போது ஒரு திருக்குறளை அல்லது சீனப் பழமொழியை ஒலிபரப்பலாம். தினமும் வானிலை அறிவிப்பு மிகவும் வரவேற்புக்குரியது. புதிய நிகழ்ச்சி நிரலை தயாரித்து நேயர்களுக்கு உடனடியாக அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன் என்கிறார், சத்திரப்பட்டி E.S.M.பாண்டியராஜா.

--இந்த செய்தியைக் கேட்டு, மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அதிக நிகழ்ச்சி கேட்கமுடியும் சீனத் தமிழொலி மூலமாக, சீனாவிலுள்ள நடைமுறைகள் பற்றிய செய்திகளை அறிந்துகொள்ள முடிகிறது என்கிறார், ஜம்புரியபட்டி, S.ஆரோக்கியசாமி.