• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-12-17 10:02:04    
நேயர்களின் கருத்துக்கள் 32

cri
நேயர்களால் வரவேற்கப்படும் நிகழ்ச்சிகளில், நட்பு பாலம் நிகழ்ச்சி இடம்பெறுகிறது. இந்த நிகழ்ச்சி பற்றிய கருத்துக்கள் இதோ.

--தமிழ்பிரிவின் பிரபல நேயர்கள் அனைவரது பேட்டியினையும் கேட்டேன். சீன வானொலியோடு மட்டும் இல்லாமல் சீன நாட்டின் செய்திகளை சேகரிப்பதிலும் அவர்கள் காட்டும் ஆர்வம் பாராட்டுதலுக்குரியது என்கிறார், சின்னவளையம் P.P.பிரகாஷ்.

--இந்த நிகழ்ச்சியில், தமிழ் பிரிவின் சிறப்பு பரிசு பெற்று சீனாவில் பயணம் மேற்கொண்ட பகலாயூர் P.A.நாச்சிமுத்து அவர்கள், தனது பயணத்தின் போது பார்வையிட்ட சீனாவின் பிரமாண்டமான உருக்காலையை பற்றி கூறினார். அவர் விவாதித்து சொன்ன பொழுது இந்த பெரிய உருக்காலையை மனக்கண்ணால் கண்டேன் என்கிறார் எஸ்.நாட்டாமங்கலம், ஏ.மாதுராஜ்.

--இதில் இடம்பெற்ற தமிழ்ச்செல்வம் P.A.நாச்சிமுத்து அவர்களுடன் வழங்கிய உருக்கு ஆலை பற்றிய அறிய செய்தியை கேட்டு வியப்பு அடைந்தேன். இந்த இரும்பு உருக்கு ஆலை ஆரம்பித்து 93 ஆண்டுகள் ஆகின்றது என்பதை நினைக்கின்ற போது, மனம் வியப்பு அடைகின்றது. இந்த நிகழ்ச்சியின் மூலம் எங்கள் போன்ற நேயர்களுக்கு, உருக்கு ஆலையை நேரில் வந்து பார்த்த உணர்வினை ஏற்படுத்தியது என்கிறார் பாண்டமங்கலம், எம்.தியாகராஜன்.

--நண்பர் டில்லி வாழும் தமிழர் வாழ்க்கை பற்றி, டாக்டர் ராஜகேரபால் அவர்கள் கூறிய கருத்துக்களை இந்த பயனுள்ள நிகழ்ச்சி மூலம் கேட்க மிக முடிகிறது. மேலும் இவர் டில்லி பல்கலைக்கழகத்தில் தனது குடும்பம் பற்றி கூறியதும் கேட்டேன் என்கிறார், ராமியம்பட்டி S.பாரதி.

--இவ்வாண்டின் சிறப்பு நேயர் பகளாயூர் P.A.நாச்சிமுத்து அவர்கள் தமது சீன பயண அனுபவத்தை வானொலிக்கு வழங்கிய பேட்டி நிகழ்சசி மூலம் கேட்க முடிந்தது என்கிறார் நெய்வேலி, A.M.சுப்ரமணியன்.

--சிறப்பு நேயரின் சீனப்பயணம் பற்றிய ஒலிபரப்பு கேட்டேன். அதில், நவீன சீனாவைப் பற்றி P.A.நாச்சிமுத்து அவர்கள் எடுத்துகூறியது, என் மனதை கவர்ந்தது. நான், ஒரு விவசாயி. மண் இல்லாமல் பயிரிடுவதை கேட்டு ஆச்சரியமடைந்தேன். அவர்களின் உரைகள் சீனவானொலியில் ஒலிபரப்பாகியதால், சீனாவைப் பற்றி தெரிய முடிந்தது என்கிறார் பாலக்காடு, T.V.ராமசுவாமி.

தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சியைக் கேட்ட பிறகு, பல நேயர்கள் கடிதம் எழுதி, சீன மொழியைக் கற்றுக்கொள்ளும் விருப்பம் தெரிவித்தனர்.

--தமிழ்ச்செல்வம் மற்றும் வான்மதி வழங்கிய தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சியைக் கேட்டேன். மிகவும் அருமையாக உள்ளது. நிகழ்ச்சியைக் கேட்கும் போது, சீன மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் காரணமாக ஒரு நாள் நிகழ்ச்சி மட்டும் ஒலிபதிவு செய்துள்ளேன் என்கிறார் 30 பள்ளிப்பட்டி, P.R.சுப்ரமமியன்.

--தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சியைத் துவக்கும் முன், கடந்த பாடத்தில் இடம்பெற்ற வாக்கியங்களை மீட்டாய்வு செய்வது நல்லது, வரவேற்கத்தக்க முறை. இம்முறையை அடுத்த வரும் நிகழ்ச்சிகளிலும் நீங்கள் தொடர வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என்கிறார், வளவனூர் புதுப்பாளையம், S.செல்வம்.

--தற்பொழுது நமது தமிழ் பிரிவில் பதிய நேயர்கள் பலரும் இணைந்த வண்ணம் உள்ளனர். இவர்களில் பலர் என்னைப் போன்ற இளைஞர்கள், மாணவர்களாவர். சீன மொழியை கற்றிட வேண்டும் எனும் ஆவல் எங்களுக்கும் உண்டு. எனினும் தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி நீண்டகாலமாக ஒலிபரப்பதால், இந்நிகழ்ச்சி எங்களுக்கு இடைக்கால பாடமாகவே தோன்றுகின்றது என்கிறார், மின்னக்கல் இ.செல்வராஜ்.

அடுத்து, பிற நிகழ்ச்சிகள் பற்றிய கருத்துக்கள்.

--சீன சமூக வாழ்வு நிகழ்ச்சியில், தண்ணீர் சிக்கனம் பற்றி கூறியதைக் கேட்டு ஆச்சரியம் அடைந்தேன். நான் கூட என் வீட்டில் காய் அரிசிகழுவும் நீரை தொட்டியில் உள்ள செடிகளுக்கும், துணி துவைக்கும் நீரை கழிவறைக்கும் உபயோகிக்கிறேன். ஏனென்றால், எங்கள் ஊரில் தண்ணீர்ப் பஞ்சம் என்கிறார், மறைமலைநகர், சி.மால்லிகா தேவி.

--எஸ்.செல்வம் தொகுத்து வழங்கிய உங்கள் குரல் நிகழ்ச்சி அருமை. பாராட்டும் வகையில் இருந்தது. உங்கள் குரல் நிகழ்ச்சியை நேயர்கள் எவ்வாறு தியாரித்து வழங்க வேண்டும் என்பதற்கு முன்மாதிரியாக அமைந்து இருந்தது என்கிறார் பாண்டமங்கலம், எம்.தியாகராஜன்.

--நேயர் நேரம் நிகழ்ச்சி அதிக நேரம் வலம் வந்தது மனதிற்கு பெரும் மகிழ்ச்சியை தந்தன. பல கடிதங்கள் வாசிப்பதை கேட்கும் போது, நான் எழுதிய கருத்தே வருகிறது என்பதை கவனித்தால் வேறொரு நேயரின் பெயர் வந்து விடுகிறது என்கிறார் கைத்தறி நகர், J.D.மணிகண்டன்.

--நேயர் நேரத்தை வாரந்தோறும் 15 நிமிடம் வழங்குகின்றீர்கள். கடிதம் குறைவாக உள்ள வாரத்தில், சீனப்பாடல்கள் அல்லது தமிழ் பாடல்களை ஒலிபரப்பலாம். இதன் மூலம், நேயர்கள் தங்கள் கடிதம் வாசிக்கப்படுவதை கேட்டு, இன்றும் அதிகமாக கடிதம் எழுத வாய்ப்பு ஏற்படும் என்கிறார், பரசலூர் P.S.சேகர்.