வட மேற்கு சீனாவின் சின் காய் மாநிலத்திலுள்ள Guo Luo Xue Shan கூட்டு நிறுவனம் இவ்வாண்டு நிறுவப்பட்டது. கால் நடை உற்பத்தி பொருட்களின் வளர்ச்சியிலும் பதனீட்டிலும் இது முக்கியமாக ஈடுபட்டு வருகின்றது. தற்போது, இக்கூட்டு நிறுவனத்தில் தயாராகும் முழு பாலாடை பால் மா, உலர் யாக் எருது இறைச்சி, குழந்தை பால் மா உள்ளிட்ட உற்பத்தி பொருட்கள், சீனாவின் மத்திய மற்றும் மேற்கு பகுதி, பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட வளர்ச்சியடைந்த பிரதேசங்கள் ஆகியவற்றில் விற்பனை செய்யப்படுகின்றன. இக்கூட்டு நிறுவனத்தின் விரைவான வளர்ச்சி வேகம் பற்றி, அதன் பொது இயக்குநர் திரு Han Gao Sheng கூறியதாவது:
"சின் காய் மாநிலத்தின் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த பசுமையான கால் நடை மூலவளத்தைச் சார்ந்திருப்பது என்பது எங்கள் மேம்பாடாகும். பசுமையான கால் நடை மூலவளத்துக்கு தூய்மைக் கேடு இல்லை. தயாராகும் போக்கில் எந்தக்கூட்டல் பொருளும் சேர்க்கப்பட வில்லை. இது, எங்கள் உற்பத்தி பொருட்களின் தனிச்சிறப்பியல்புகளில் ஒன்றாகும்" என்றார் அவர்.
தெற்கு சின் காய் மாநிலத்தில் அமைந்துள்ள Guoluo சராசரியாக கடல் மட்டத்திலிருந்து சுமார் 4200 மீட்டர் உயரத்தில் உள்ளது. அங்கு மனித நடமாட்டம் இல்லை. பெரிய ரக தொழிற்துறை தொழில் நிறுவனங்கள் இல்லை. இத்தனித்திறப்பியல்பு வாய்ந்த இயற்கை சூழல் மேம்பாட்டினால், இத்தொழில் நிறுவனத்தில் தயாராகும் கால் நடை உற்பத்தி பொருட்கள் முழுக்க முழுக்க துய்மையான பசுமையான உற்பத்தி பொருட்களாகும். இதனால், மிகப் பல நூகர்வோர் இதை வரவேற்கின்றனர். கிழக்கு சீனாவில் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்த பிரதேசங்களிலுள்ள நிதி மற்றும் விற்பனை வலைப்பின்னல் மேம்பாடுடைய தொழில் நிறுவனங்களுடன் ஒத்துழைப்பு மேற்கொண்டு, 3, 5 ஆண்டுகளுக்குள் இக்கூட்டு நிறுவனத்தின் விற்பனை வருமானத்தை தற்போதைய சுமார் 2 கோடி யுவானிலிருந்து 10 கோடி யுவானாக அதிகரிக்க தன்னால் இயன்றதனைத்தையும் செய்ய வேண்டும் என்று திரு Han விரும்புகின்றார்.
தற்போது, Guo Luo Xue Shan கூட்டு நிறுவனத்தின் வளர்ச்சி மாதிரி, பொருளாதாரத்தை சின் காய் மாநிலம் வளர்ச்சியுறச்செய்யும் பொதுவான மாதிரியாக மாறியுள்ளது. சின் காய் மாநிலத் தலைவரின் உதவியாளர் திரு Ma Jian Tang செய்தியாளரிடம் கூறியதாவது:
"பீடபூமியின் விலங்கு மற்றும் தாவர மூலவளத்தின் மேம்பாடானது, சின் காய் மாநிலத்தின் ஒரு முக்கிய மேம்பாடாகும். கடந்த சில ஆண்டுகளில், சின் காய் மாநிலத்தில் பீடபூமி சிறப்பு உயிரின வாழ்க்கை சூழல் வேளாண்மை மற்றும் கால் நடை வளர்ப்புத்துறை விரைவாக வளர்ச்சியுற்று வருகின்றது. தவிர, எங்கள் சிறப்பு வேளாண் உற்பத்தி பொருட்கள், பிரதேசமயமாக்கம், அளவுமயமாக்கம், சிறப்புமயமாக்கம் ஆகிய திசையை நோக்கி வளர்ச்சியுற்று வருகின்றது." என்றார் அவர்.
|