• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-12-15 10:17:17    
மூலவள மேம்பாடு பற்றி

cri

சின் காய் மாநிலத்தின் நிலப்பரப்பு, சீனாவில் மிகப் பெரியது. அதன் நிலப்பரப்பு சுமார் 7 லட்சத்து 20 ஆயிரம் சதுர கிலோமீட்டராகும். இவற்றில் பயன்படுத்தப்படக்கூடிய புல்வெளியின் நிலப்பரப்பு 3 லட்சத்து 30 ஆயிரம் சதுர கிலோமீட்டராகும். சின் காய் மாநிலத்தில் யாக் எருது, ஆடு உள்ளிட்ட விலங்குகளும் சீன மருந்து மூலிகைகளும் இடம்பெறுகின்றன. விலங்கு மற்றும் தாவர மூலவளம் மிக செழிப்பானது.

சின் காய் மாநிலத்திலுள்ள வளமிக்க விலங்கு மற்றும் தாவர மூலவளம், சீனத் தொழில் நிறுவனங்கள் பல அங்கு முதலீடு செய்வதை ஈர்த்துள்ளது. அது மட்டுமல்ல, சீனாவின் மேற்குப் பகுதிக்கான பெரும் வளர்ச்சி நெடுநோக்கு திட்டத்தின் நடைமுறையாகத்துடன், இங்கு நிலவும் வணிக வாய்ப்பையும் வெளிநாட்டு வணிகர்கள் பலர் கவனித்துள்ளனர். ஜெர்மனியிலிருந்து வந்த திரு Mario Angelucci இம்மாநிலத்தின் மரத்துண்டு மூலவளத்தை விரும்பி, அங்கு வீட்டு சாமான்களை உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனத்தை நிறுவுவதற்குத் தயார் செய்கின்றார். அவர் கூறியதாவது:

"சற்று காலத்துக்கு முன், சின் காய் மாநிலத்துக்கு நான் வந்தேன். இங்குள்ள முதலீட்டுச் சூழலை முழுமையாக மதிப்பீடு செய்வது சிரமம். ஆனால், தற்போதைய நிலைமையை பொறுத்த வரை, இப்பிரதேசத்தை நான் விரும்புகின்றேன்."என்றார் அவர்.

             

விலங்கு மற்றும் தாவர மூலவளம், பல வணிகர்கள் இங்கு வந்து முதலீடு செய்வதை ஈர்ப்பது மட்டுமல்ல, இம்மாநிலத்திலுள்ள வளமிக்க தாதுப்பொருட்கள், முதலீட்டாளர் பலரை ஈர்த்துள்ளன. இம்மாநிலத்தில், அஸ்பெஸ்டால், பெற்றாசிய உப்பு உள்ளிட்ட சுமார் 60 தாது பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.

Xi Ning சிற்ப்பு உருக்கு குழும லிமிடெட் கூட்டு நிறுவனமானது, பெரிய ரக அரசு தொழில் நிறுவனமாகும். ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் டன் உருக்கு சுருளை அது உற்பத்தி செய்ய முடிந்தது. இத்தொழில் நிறுவனத்தின் தலைமை கணக்கர் திரு Wang Dajun செய்தியாளரிடம் கூறியதாவது:

"சின் காய் மாநிலத்தில் இரும்பு தாது பொருட்கள், சுட்ட நிலக்கரி, இதர உலோகப் பொருட்கள் இருக்கின்றன. எதிர்காலத்தில் Xi Ning சிறப்பு உருக்கு குழுமம் இம்மூலவளத்தைப் பயன்படுத்தி, தன்னை மேம்படுத்தும்."என்றார் அவர்.

இத்தொழில் நிறுவனத்தில் தயாராகும் உற்பத்தி பொருட்கள், நன்கு விற்பனையாகின்றன. தற்போது, இத்தொழில் நிறுவனத்தின் விற்பனை இடங்கள் சீனாவின் பல்வேறு இடங்களில் பரவி வருகின்றன. ஆண்டு உற்பத்தி மதிப்பு 170 கோடி யுவானைத் தாண்டியுள்ளது. இக்கூட்டு நிறுவனம் வளர்ச்சியுறும் வேளையில், உள்ளூர் தொடர்புடைய தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியையும் குறிப்பிட்ட அளவில் முன்னேற்றுவித்துள்ளது. சின் காய் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் மேன்மேலும் முக்கிய பங்காற்றியுள்ளது என்றார் திரு Wang.

ஆனால், சின் காய் மாநிலத்தின் மூலவளத்தை வரம்பின்றி பயன்படுத்த முடியாது. அறிவியல் வளர்ச்சி கண்ணோட்டத்தை சீன அரசு முன்வைத்ததுடன், பொருளாதாரத்தின் தொடரவல்ல வளர்ச்சிக்கும் சின் காய் மாநிலம் மேன்மேலும் முக்கியத்துவம் அளிக்கின்றது. இம்மாநிலத் தலைவரின் உதவியாளர் Ma Jian Tang கூறியதாவது:

"சின் காய் மாநிலத்தில் தொடரவல்ல வளர்ச்சி பாதையை மேற்கொள்வதன் முக்கியத்துவத்தை நாங்கள் ஆழமாக அறிந்து கொண்டுள்ளோம். ஏனெனில், இம்மாநிலத்தில் அமைந்துள்ள சின் காய்-திபெத் பீடபூமியின் உயிரின வாழ்க்கை சூழல் பலவீனமானது. சின் காய் மாநிலத்தில் கட்டுமானப் பணியை மேற்கொள்ளும் போது, முதன்முதலாக மூலவளத்தைப் பாதுகாத்து, ஒட்டுமொத்த முறையில் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக உயரின வாழ்க்கை சூழலைப் பாதுகாக்க வேண்டும்." என்றார் அவர்.