• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-12-16 14:52:16    
ஓராண்டு நேயர் பணி பற்றிய தொகுப்பு

cri
2004ம் ஆண்டு தமிழ்ப் பிரிவுக்கு வந்த கடித எண்ணிக்கை சீன வானொலிக்கு கிடைத்த கடித எண்ணிக்கை வரிசையில் தொடர்ந்து முன்னணியில் உள்ளது. ஏராளமான நேயர்கள் பங்கெடுப்பதை இந்தக் கடிதங்களின் எண்ணிக்கை எடுத்துக் காட்டுகின்றது. இந்த ஆண்டில் மூத்த நேயர்கள் மட்டுமல்ல பல புதிய நேயர்களும் கடந்த சில ஆண்டுகளில் தமிழ் ஒலிபரப்பின் முதுகெலும்பு போல செயல்பட்ட நேயர்கள் சிலரும் தமிழ்ப் பிரிவின் வளர்ச்சிக்கு தலைசிறந்த முறையில் பணி புரிந்துள்ளனர். அவர்கள் ஒழுங்கான முறையில் தமிழ்ப் பிரிவுக்கு தரமான கருத்து கடிதம் எழுதுவது, பேட்டி காண்பது, மன்ற கூட்டம் நடத்துவது, பொது அறிவுப் போட்டியில் கலந்து கொள்ளுமாறு மிக பல மன்ற உறுப்பினர்களையும் புதிய நேயர்களையும் அணிதிரட்டுவது, வானொலி சிறப்பு நிகழ்ச்சி ஒலிபரப்பில் பங்கெடுப்பது முதலிய நடவடிக்கைகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளனர். அவர்களின் முயற்சிக்கு மதிப்பு அளித்து மற்ற நேயர்களுக்கு சிறந்த மாதிரியாக எடுத்துக் காட்டும் வகையில் அவர்களிடமிருந்து 4 தலைசிறந்த நேயர்களையும் 18 சிறந்த நேயர்களையும் தேர்ந்தெதடுத்து அவர்களின் பெயரை மிக மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றோம். தவிர மன்றத்தின் செயல்களைப் பாராட்டும் வகையில் 4 நேயர் மன்றங்களைத் தேர்ந்தெடுத்து சிறந்த நேயர் மன்ற கௌரவத்தை அவற்றுக்கு அளித்துள்ளோம் சிறந்த நேயர் மன்றங்கள் யாவை என்பது பற்றி அறிமுகப்படுத்துகின்றோம். 2004ம் ஆண்டுக்கான சிறந்த நேயர் மன்றங்களின் பெயர் பட்டியல் பின் வருமாறு: ஆரணி கங்காயாயங்சி நேயர் மன்றம், புதுச் சேரி நேயர் மன்றம், பாண்டமங்கலம் நேயர் மன்றம், 30 பள்ளிப்பட்டி தமிழ் தென்றல் நேயர் மன்றம் ஆகியனவாகும். ஓராண்டில் மன்றங்கள் சிறப்பான முறையில் நடந்தது அவற்றின் பொது தனிச்சிறப்பியல்பாகும். தொடர்ந்து மேம்பாட்டை நிலைநிறுத்தி தமிழ் ஒலிபரப்புக்கு சிறந்த பங்கு ஆற்ற வேண்டும் என்று நாங்கள் இங்கே இதயப்பூர்வமாக வேண்டுகோள் விடுகின்றோம். இவ்வாண்டு சிறந்த நேயர் மன்றமாக தேர்ந்தெடுக்கப்படாத திருச்சிராப்ள்ளி நேயர் மன்றம் மேற்கூறிய 4 மன்றங்களை போல நன்றாக செயல்பட்டுள்ளது பல முறை கூட்டம் நடத்தியது. நிகழ்ச்சிகள் அடங்கிய ஒலி நாடாக்களை எங்கள் தமிழ் மன்றத்துக்கு அனுப்பியது. நல்ல கருத்துக்களை வெளிப்படையாக சொல்லுமாறு மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பேச ஊக்கமளிக்கப்பட்டனர். இதில் மன்ற தலைவர் மனமேடு எம் தேவராஜா பல முயற்சி செய்துள்ளார். அவரை பாராட்டுகின்றோம். விழுப்புரம் எஸ் பாண்டியராஜன் தலைமையிலான விழுப்புரம் நேயர் மன்றம் திருச்சிராபள்ளி நேயர் மன்றம் போல நன்றாக செயல்பட்டுள்ளது. பாராட்டுகள் என்று இங்கே மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறோம். ஓராண்டில் தமிழ் ஒலிபரப்பு வளர்ச்சியில் மிக கவனம் செலுத்தி வெளிப்படையான யோசனைகளையும் கோரிக்கைகளையும் முன்வைத்து தமிழ்ப் பிரிவுடன் அதிகமான தொடர்பு கொள்ளுமாறு மன்ற உறுப்பினர்களை ஊக்குவிப்பதில் தலைசிறந்த முயற்சி செய்துள்ள வளவனூர் புதுபாளையம் எஸ் செல்வம், மனமேடு எம் தேவராஜா, முனுகப்பட்டு பி, கண்ணன் சேகர், செல்லூர் என். சீனிவாசன் ஆகியோரை பாராட்டும் வகையில் தலை சிறந்த நேயர் என்ற பெருமையை அவர்களுக்கு வழங்குகிறோம். அவர்கள் நேயர்களிடையில் சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு பற்றி பிரசாரம் செய்வது மட்டுமல்ல, அவர்கள் தானே பேட்டி கண்டு, செய்திகளை சேகரித்து நிகழ்ச்சில் பங்கெடுத்துள்ளனர். தரமான கருத்துக்களை எழுதி தெரிவித்துள்ளனர். குறிப்பாக அவர்களிடையில் வளவனூர் புதுப்பாளையம் எஸ் செல்வம் உண்மையாக தலைவராக செயல்பட்டுள்ளார். ஒவ்வொரு முக்கிய தருணத்திலும் தமது நேர்மையான கருத்துக்களையும் ஆக்கப்பூர்வ யோசனைகளையும் முன்வைத்துள்ளார். நிகழ்ச்சிக்காக தகவல்களை தாராளமாக தமிழ்ப் பிரிவுக்கு வான் அஞ்சல் மூலம் அனுப்பியுள்ளார். எப்பொழுதும் நேயர் பணியில் அவர் கவனம் செலுத்திவருகின்றார். இந்த ஆண்டு தலைசிறந்த நேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட செல்லூர் என் சீனிவாசனுக்கு கடிதம் அதிகமாக அனுப்புவது தனிச்சிறபியல்பாகும்.  அடுத்து சிறந்த நேயர்களாக தேர்ந்தெடுத்துள்ள 18 நேயர்களின் பெயர் பட்டியலை அறிவிக்கின்றோம். பாண்டமங்கலம் எம்.தியாகராஜன், பாண்டிச்சேரி என்.பாலக்குமார், பெருந்துறை பல்லவி.கே.பரமசிவன், பேளுக்குறிச்சி கே.செந்தில், சேந்தமங்கலம் எஸ்.எம்.இரவிச்சந்திரன், விழுப்புரம் எஸ் பாண்டியராஜன், 30 பள்ளிப்பட்டி பி.ஆர்.சுப்ரமணியன், ஸ்ரீரங்கம் எம்.சின்னையன், ஆரணி ஜெ.அண்ணாமலை, ஆரணி பொன் தங்கவேலன், அல்லூர் பி.ராதாகிருஷ்ணன், நெய்வேலி ஏ.எம்.சுப்ரமணியன், திமிரி பி.எஸ்.சுந்தரராஜன், விழுந்தமாவடி ஆர்.மகேந்திரன், எஸ்.கே.பாப்பம்பாளையம் பி.தி.சுரேஷ்குமார், சேந்தலை என்.எஸ்.பாலமுரளி, பகளாயூர் பி.எ.நாச்சிமுத்து, திருச்சி அண்ணாநகர் வி.தி.இரவிச்சந்திரன் ஆகிய 18 நேயர்கள் சிறந்த நேயராக விளங்குகின்றனர். சாதாரண நாட்களில் அவர்கள் கடிதம் தொடர்ந்து எழுதி தரமான கருத்துக்களை வெளிப்படையாக சொல்லி நலவாழ்வு பாதுகாப்பு, நேருக்கு நேர், நட்பு பாலம், சீனாவுக்கு அப்பால் முதலிய நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வது அவர்களின் பொது தனிச்சிறப்பியல்பாகும். நேயர்களே இந்த 22 தலைசிறந்த மற்றும் சிறந்த நேயர்களை முன் மாதிரியாக கருதி தமிழ் ஒலிபரப்பு துறையில் உற்சாகத்துடன் ஈடுபடுமாறு வேண்டுகின்றோம். 2005ம் ஆண்டு சிறந்த நேயர் பெயர் பட்டியலில் மேலும் கூடுதலான புதிய நேயர் பெயர் காணப்பட வேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம். நன்றியுடன் இன்றைய கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியை நிறைவு செய்கின்றோம்.