• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-12-24 10:04:22    
நேயர்களின் கருத்துக்கள் 33

cri
--கம்போடியாவில் எய்ட்ஸ் இறட்டி. உணவு பாதுகாப்பு, ஒரிஸ்ஸா ழறா மூலம் முதல் தபால் செய்தி அனுப்புதல், குழந்தை சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல உலகதுளிகளை செவிமடுக்க மலர்சோலை நிகழ்ச்சியில் அறிய செய்தீர்கள் என்கிறார் சென்னை-5, என்.ரேனுகாதேவி.

--சீன சமூக வாழ்வு நிகழ்ச்சியில், வெளிநாட்டு துணைவியர்களின் பெய்ஜிங் வாழ்க்கை குறித்து கேட்டறிந்தேன். சீன மக்களின் சகேத்திளான வாழ்வு நிலை குறித்து மட்டுமே, இடம்பெறும் இந்நிகழ்ச்சியில் இன்று சீன சகேத்தில் இணைந்து வாழும் பிற நாட்டவரின் வாழ்வு எங்கனம் அமைந்துள்ளது என்பதை அறிய முடிந்தது என்கிறார், திருச்சி அண்ணாநகர், V.T.ரவிச்சந்திரன்.

--சீனாவில் தொலை தூர கல்வி பயற்சி மையங்களை உலக வங்கியின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ளதை செய்தியின் மூலம் கேட்டறிகின்றேன். இந்த தொலை தூர படிப்பு மையங்கள் சீனாவின் மேற்குப் பகுதியில் வறிய மக்களுக்கு பயன்படும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது என அறிந்து அரசை பாராட்டுகிறேன் என்கிறார் முனுகப்பட்டு P.கண்ணன்சேகர்.

--தற்போது, இனிமையான செய்தித்தொகுப்பைக் கெவிமடுத்தேன். என்ன என்றால் சீனாவின் புதிய முதலீட்டு தொகை தான். இந்த முதலீட்டு தொகைகள் மூலம் தான், பல புதிய நடவடிக்கைகள் இனிமையாக நிறைவேறுவதன் மூலம் சீனாவில் அந்திய முதலீடு பெறாலோம் என அதிகாரப்பூர்வமாக கூறலாம் என்கிறார் செந்தலை, N.S.ராதரவி.

--சீனாவில் சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகை புரிந்து வருவதையும், திபெத் தன்னாட்சி பிரதேசத்தில் சுற்றுலா துறை வளர்ச்சிக்கு சீனா எடுத்துவரும் நடவடிக்கைகளையும் அறிந்தேன். திபெத் பகுதியில் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு பயணிகள் அதிக பேர் சுற்றுலா வந்து சென்று வருகின்றனர் என அறிந்தேன் என்கிறார், ஈரோடு, M.C.பூபதி.

நேருக்கு நேர், நேயர் நேரம், நேயர் விருப்பம் உட்பட நேயர்களுக்கு பிடிக்கும் நிகழ்ச்சிகள் பற்றிய கருத்துக்களைக் காண்போம்.

--இதில், வேலூர் மாவட்ட நேயர் மன்றத்தலைவர் புலவர் விரராசாமி வழங்கிய பேட்டி, நன்றாக இருந்தது. அவர், நேயர்களின் கருத்துக்களை நல்ல முறையில் பிரதிபலித்ததோடு, நேயர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக தாம் மேற்கொண்ட முயற்சிகளையும் விளக்கினார் என்கிறார் புதுவை, R.S.ஸ்ரீனிவாசன்.

--திருச்சி அண்ணா நகர் V.T.ரவிச்சந்திரன் தொலைப்பேசி மூலம் பேட்டி கண்ட போது, சில குறைகள் கூறினார். நேயர்களின் கருத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்துவந்த CRI பணியாளர் கவனிப்பார்களா? என்கிறார் பரசலூர் P.S.சேகர்.

--நேயர் நேரம் நிகழ்ச்சி கேட்டு மகிழ்ந்தேன். ஏனெனில் நீண்ட நாட்களுக்கு பிறகு எனது கடிதம் நேயர் நேரம் நிகழ்ச்சியில் வாசிக்கப்பட்டதை கேட்டு மன நிறைவு அடைந்தேன். சீன வானொலி தமிழ் பிரிவிற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்கிறார் செந்தலை, N.S.பாலமுரளி.

--புதிய நிகழ்ச்சியான நேயர் விருப்பம் நிகழ்ச்சியை வரவேற்கிறோம். நேயர்களின் ஆர்வத்தை ஈடு செய்யும் நிகழ்ச்சி இது. பாராட்டுக்கள். நிகழ்ச்சி மென்மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள் என்று, மீனாட்சிபாளையம் கே.அருண் தெரிவித்தார்.

--நேயர் நேரம் நிகழ்ச்சியை 12 நிமிடமாக அதிகரித்துள்ளதை அறிந்து மனம் பெரிதும் மகிழ்ச்சியடைந்தது. இதன் மூலம் புதிய நேயர்களின் கடித கருத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அது மட்டுமின்றி, நேயர்களின் கருத்துக்கள் இடம்பெற வாய்ப்பு உள்ளது. இது நேயர்களை ஊக்கப்படுத்துகின்ற நிகழ்ச்சி என்று தான் கூற வேண்டும் என்கிறார், பாண்டமங்கலம் எம்.தியாகராஜன்.

--நேயர் நேரம் நிகழ்ச்சி கேட்டேன். சீன வானொலி ஒலிபரப்பிய நிகழ்ச்சிகளை கேட்ட பின், அந்த நிகழ்ச்சி குறித்து பல தரமான கருத்துகளை தெரிவித்து நேயர்களின் பல விதமான கருத்துகள் இந்த நிகழ்ச்சியின் மூலம் வெளி வந்தது என்கிறார் 30 பள்ளிப்பட்டி, பி.கேசவன்.

தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சியைக் கேட்ட பின், நேயர்கள் அதிகமான கடிதம் அனுப்பியுள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு பாராட்டு தெரிவித்தனர்.

--தமிழ்ச்செல்வம் தொகுத்து வழங்கி தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சியை மூலம், சீன மொழியை தமிழ் மொழி வாயிலாய் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. என்னை போன்ற நேயர்களுக்கு சீன மொழி அகராதியை உருவாக்கி தரும் படி வழங்கும் படி கேட்டுக்கொள்கின்றேன் என்கிறார் 30 பள்ளிப்பட்டி N.கார்த்திகேயன்.

--ஒவ்வொரு முறையும் புதிய பாடத்தைத் துவக்கும் முன், முந்தைய பாடத்தில் இடம்பெற்ற வாக்கியங்களை மீட்டாய்வு செய்வது மிகச்சிறந்த முறை. இதை தொடர்ந்து செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். வாக்கியங்களை மட்டும் கூறாமல், வார்த்தைகளையும் தனித்தனியாக கூறப்படும் முறையை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்கிறார் வளவனூர் புதுப்பாளையம் எஸ்.செல்வம்.

--நீ ஹவொ என்பது எந்த நேரத்திலும் எவ்விடத்திலும் கூறும் வார்த்தை என்று அறிந்து கொண்டேன். மேலும் நான் கற்ற காலை வணக்கம். சாங் சாங் ஹாவ் என்றும் சாங் ஊ ஹாவ் முற்பகல் வணக்கம் என்பவைகளான இரு வார்த்தைகளுடன் மூன்று வார்த்தைகளை மிக எளிதாக கற்றுக்கொண்டேன் என்கிறார் ராமியம்பட்டி, எஸ்.பாரதி.