• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-12-27 16:03:24    
 ஹு சிந்தாவ்-முதிய அறிவியலாளர் சந்திப்பு

cri

2005ஆம் ஆண்டு வரவுள்ள இத்தருணத்தில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளரும் அரசு தலைவரும் மத்திய இராணுவ கமிஷனின் தலைவருமான ஹு சிந்தாவ் புகழ்பெற்ற இயல்பியல் அறிவியலாளர் சூ குவாங் யாவையும் புகழ்பெற்ற கணிதத் துறை அறிவியலாளர் யாங் லோவையும் சென்று பார்த்தார். சீனாவின் அறிவியல் தொழில் நுட்பத் துறையின் வளர்ச்சி பற்றிய அவர்களின் கருத்தையும் முன்மொழிவையும் அவர் கேட்டு அறிந்தார். அவர்களுக்கும், அனைத்து சீன அறிவியல் தொழில் நுட்ப பணியாளர்களுக்கும் அன்பான வணக்கம் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்து தெரிவித்தார்.

ஓரளவு வசதி படைத்த சமூகத்தை முழுமையாக கட்டியமைப்பது என்ற மாபெரும் இலக்கை நிறைவேற்ற வேண்டுமானால், அறிவியல் வளர்ச்சி கண்ணோட்டத்தை உறுதியாக நிலைநாட்டி, முழுமையாக செயல்படுத்த வேண்டும், வளர்ச்சி என்று முக்கிய பணியை உண்மையாக செவ்வனே புரிய வேண்டும், அறிவியல் மற்றும் கல்வி மூலம் நாட்டை வளர்ப்பது என்ற நெடுநோக்குத் தட்டத்தை பெரும் முயற்சியுடன் நடைமுறைப்படுத்தி, அறிவியல் தொழில் நுட்பம் என்ற முதலாவது உற்பத்தி சக்சின் முக்கிய பங்கினை வெளிப்படுத்த வேண்டும் என்று ஹு சிந்தாவ் சுட்டிக்காட்டினார். சூ குவாங் யாவும் யாங் லோவும் சீன அறிவியல் தொழில் நுட்பத் துறையின் வளர்ச்சிக்காக செய்த குறிப்பிடத்தக்க சாதனையை ஹு சிந்தாவ் உயர்வாக மதிப்பிட்டார்.

தலைவர் ஹு சிந்தாவ் வேலை அதிகமாக இருந்த போதிலும், தம்மை வந்து பார்ப்பதற்கு சூ குவாங் யாவும் யாங் லோவும் உளமார்ந்த நன்றி தெரிவித்தனர். தாம் பெற்ற சாதனைகள் அனைத்தும் கட்சிக்குரியது, மக்களுக்குரியது என்றும், நாட்டின் அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சிக்காக தாம் தொடர்ந்து பங்காற்ற விரும்புவாதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

அடிப்படை அறிவியல் ஆராய்ச்சியானது, அறிவியல் தொழில் நுட்ப முன்னேற்றத்துக்கும் மனிதகுல சமூகத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் உந்து ஆற்றலாகும். ஒரு அறிவியல் ஆராய்ச்சியின் கனியானது, மனிதகுலத்தின் சித்தாந்த முன்னேற்றத்தை அதிகமாக விரைவுப்படுத்தும், அத்துடன் தொழில் நுட்பப் புரட்சியையும் தொழிற் துறைப் புரட்சியையும் எழுப்பக்கூடும். அடிப்படை அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபடும் போது, நாட்டின் நீண்டகால வளர்ச்சித் தேவைக்கு இணங்க செயல்பட வேண்டும். செறிந்த ஆற்றலுடன் குறிப்பிட்ட சில துறைகளில் நீண்டகாலமாகவும் சிரம்பட்டும் ஆய்வு மேற்கொண்டு, முன்னேற்றம் அடைந்து, உலக அறிவியல் துறையின் உச்ச நிலையை எட்ட, பாடுபட வேண்டும் என்று ஹு சிந்தாவ் கூறினார்.

திறமைசாலியானது, அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கான அடிப்படையாகும். அறிவியல் தொழில் நுட்ப புத்தாக்கத்தின் திறவுக்கோலாகும். உழைப்பு, அறிவு, திறமைசாலி, புத்தாக்கம் ஆகியவற்றுக்கு மதிப்பு அளிப்பது, மனிதனின் பன்முக வளச்சியை விரைவுப்படுத்துவது என்ற அறிவியல் கருத்து கொள்கை மற்றும் சமூக சூழ்நிலையையும் சீனாவின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்குப் தேவையான உயர்தரமுடைய அறிவியல் தொழில் நுட்ப பணியாளர் அணியையும் உருவாக்க வேண்டும், பல்வேறு துறைத் திறமைசாலிகளின் பணி மற்றும் வாழ்க்கையில் கவனம் செலுத்தி, அவர்களின் இன்னல்களை தீர்க்க வேண்டும். வெளிநாடுகளில் படிப்பை முடித்துக் கொண்ட மாணவர்கள் மற்றும் அறிவியலாளர்கள் நாடு திரும்பி, பல்வேறு வடிவங்களில் நாட்டின் வளர்ச்சிக்கு சாதனை புரிவதை வரவேற்க வேண்டும் என்றும் ஹு சிந்தாவ் குறிப்பிட்டார்.

மிகப் பல அறிவியல் தொழில் நுட்ப பணியாளர்களும் நாட்டின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் அனைத்து தோழர்களும் முதிய அறிவியலாளர்களை போல், தாய்நாட்டுக்கும் மக்க்ளுக்கும் விசுவாசமாக இருந்து, அவர்களின் வேலை நடையை பின்பற்றி, தாய்நாட்டின் வளம், செழுமை, மக்களின் இன்ப வாழ்க்கை ஆகியவற்றுக்காக தமது ஆற்றலையும் விவேகத்தையும் அர்ப்பணிக்குமாறு ஹு சிந்தாவ் இறுதியில் கோரிக்கை முன்வைத்தார்.