• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-01-04 09:17:25    
நேயர்களின் கருத்துக்கள் 34

cri
சீனாவில் இன்ப பயணம் மற்றும் சீன பண்பாடு நிகழ்ச்சி, நேயர்களின் மனத்தை ஈர்க்கின்றன. இதைப் போன்ற நிகழ்ச்சிகள் மூலம், சீனாவை மேம்மேலும் புரிந்துகொள்ளலாம்.

--சீனாவில் இன்ப பயணம் நிகழ்ச்சி மூலம், சீன மக்களின் வாழ்க்கையை நானும் எனது நண்பர்களும் அறிந்துக்கொள்ள முடிந்தது. சீனாவுக்கு சுற்றுலா வரும் பயணிகளை கவரும் வகையால் ஒரு நாள் முழுவதும் சீன மக்களைப் போல் அவர்கள் வாழ்ந்து மகிழ்ச்சியுடன் கழிக்க ஏற்பாடு செய்தது இருப்பு மிகவும் வரவேற்கத்தக்கது என்கிறார், 30 பள்ளிப்பட்டி, O.துறைராஜ்.

--சீனாவின் தென் கிழக்கு பகுதியின் இயற்கை அமைப்பு பயணிகளை ஈர்க்கின்றது. இவ்விடத்தில் அமைந்துள்ள சியாமென் நல்ல விமான போக்குவரத்தும், அருகிலுள்ள அந்நிய தேசங்களும் சிறப்பாக இருந்தன. மலிவான கட்டணம் வசூலிக்கும் உணவு விடுதிகளில் தரமான உணவுகள் வழங்கப்படுவது, பாராட்டுக்குரியதாகும் என்கிறார், விழுந்தமாவடி R.மகேந்திரன்.

--சீன பண்பாடு நிகழ்ச்சியில் தீபதிருவிழா பற்றி கேட்டேன். கி.மு.206 முதல் இந்த விழா முதல் முதலில் கொண்டாடப்பட்டது பற்றியும் பழமையான இந்த விழா நமது கார்த்திகை தீபாமம் ஒத்த மதி உள்ளது மற்றும் இதை பற்றி கிளை கதையும் வழங்கியது மிக நன்று என்கிறார் சென்னை 44, பி.குமரேசன்.

அடுத்து, எமது ஒலிபரப்பு பற்றிய பல்வேறு கருத்துக்கள் இதோ.

--உறவுக்கு உலை வைத்த பத்திரம் என்ற கதையின் 5ம் பகுதி மிகவும் அருமை. இக்கதை கேட்க நீதி வெல்லும் என்பது தெளிவாகிவிட்டது. ஒவ்வொரு வாரமும் விறுவிறுப்பாக செல்கிறது இந்த சீன கதை நிகழ்ச்சி. கதையின் தூற நீதியை வெல்லும் வகையில் சுமைவது இக்கதையின் சிறப்பம் சமாகும் என்கிறார், 30 பள்ளிப்பட்டி P.R.சுப்ரமணியன்.

--சீன மகளிர் பகுதியில், ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை என்ற பகுதியில் ஒரு குழந்தை போதும் என்று சீன மக்கள் இப்போது கடைபிடிக்கிறார்கள் என்றும் குறிப்பாக நகரத்தை சேர்ந்த மக்கள் ஒரு குழந்தை போதும் என்று நினைக்கிறார்கள். நீங்கள் எடுத்து கூறிய கருத்து சிறப்பாக இருந்தது என்கிறார் கண்டமங்கலம், எ.முஜீபுர் ரஹ்மான்.

--மலர் சோலையில், ஐரோப்பியர்கள் மிகவும் விரும்பி உண்ணும் உணவு சீன உணவாகும் என்பதை கேட்டறிந்தேன். ஐரோப்பிய மக்கள் இதில் தொகுப்பு அதிகம் இல்லை என்பதே இதற்கு காரணம் என்கிறார்கள். இத்தாலியில் நவீன தொலைபேசி உள்ளது. இதில் மறு முனையில் பேசுபவர்களின் உருவம் நம்முடைய தொலைபேசி திரையில் தெரியும் என்ற செய்தி இடம்பெற்றுள்ளது என்கிறார் ராசிப்புரம், எஸ்.மணிகண்டன்.

--அறிவியல் உலகம் நிகழ்ச்சியில், வெளிச்சம், அசைவ உணவு மாரடைப்பு குறித்து கூறினீர்கள். அசைவ உணவு தவிர்த்து சைவ உணவு சாப்பிட்டால் எந்த நோயும் வராது என்று தான் நினைத்து இருந்தேன். வெளிச்சம் பற்றிய தகவல்களும் அருமை. மாரடைப்பு வராமலிருப்பதற்கான வழி முறைகளும் சிறப்பாக இருந்தன என்கிறார் திருச்சி காஜாமலை, ஜீ.பிரபாகரன்.

--இறைச்சி இடம்பெறாத உணவு உடலிலுள்ள கொகுப்பை குறைக்கும் வகையிலும் உடல் பருமனை குறைக்கும் வகையிலும் இறைச்சி உணவை கட்டுப்படுத்தும் படிப்படியான சைவ உணவு குறிப்புகள் பயன் மிக்கது என்கிறார், விழுப்புரம் எஸ்.பாண்டியராஜன்.

--மக்கள் சீனம் நிகழ்ச்சி மூலம், காரம் நிறைந்த உணவுகளை அதிக அளவில் பயன்படுத்தாத சீனாவின் தென்மேற்கு பகுதியில், மக்களுக்கு பெரும் தொகை வருவாயை ஈட்டித்தரும் மிறகாய் உற்பத்தி வளையம் இருப்பது, கேட்டு பெரும் வியப்படைந்தேன். பிரதேச மக்களுக்கு மிறகாய் விற்பனை மூலம் பணத்தை சம்பாதிக்கும் வழிமுறை மிகவும் பொருந்ததே என்கிறார் மணமேடு எம்.தேவராஜா.

--தங்களிடம் நேரடியாக உரையாடி எங்களது கருத்துக்களையும் ஆவலையும் மகிழ்ச்சியையும் தங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் எங்களில் பலருக்கு உண்டு. நாங்கள் சீனாவிற்க்கு நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு, போதுமான நிதி வசதி எங்களிடம் இல்லை என்கிறார் மின்னக்கல் இ.செல்வராஜ்.

--நமது புதவை மாநிலத்தில் புதிய நேயர்களை அறிமுகம் செய்யும் எண்ணத்தில் ஒவ்வொரு ஞாயிறு அன்றும் புதிய நேயர்களை சந்தித்து நமது சீன வானொலி தமிழ் நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்து வைத்து வருகின்றோம். என்னுடன் N.பாலகுமார் மிகுந்த ஒத்துழைப்புடன் தனது பங்கை செலுத்துகின்றார் என்கிறார் புதுவை ஜீ.ராஜகோபால்.

--நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சியில் சர்க்கரை நோயை தவிர்க்க செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள் பற்றி வழங்கக்கேட்டோம். வயது வரம்புகள் கொண்டு அதற்கு ஏற்ற உடற்பயிற்சிகள் வழங்கிய விதம் நல்ல பயன் உடையதாக இருந்தது என்கிறார் ஈரோடு, M.C.பூபதி.

--மலர்சோலை நிகழ்ச்சியில், இத்தாலி நாட்டின் நவீன தொலைபேசி உள்ளது இதில் மறுமுனையில் பேசுபவரின் உருவம் நம்முடைய தொலை பேசிதிரையில் பார்க்க முடியும் என்ற செய்தியைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தேன். இந்த நிகழ்ச்சி கேட்கும் போது நேரில் பார்க்கும் உணர்வு ஏற்பட்டது என்கிறார் ராசிப்புரம், R.M.மோகன்.