• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-01-04 15:35:30    
கடந்த வாரத்தில் உலகில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகள்

cri

சீனாவின் சிந்குவா செய்தி நிறுவனம் அண்மையில் 2004ஆம் ஆண்டின் பத்து பெரிய விளையாட்டுச் செய்திகளை தேர்ந்தெடுத்துள்ளது. ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சீனப் பிரதிநிதிக் குழு 32 தங்கப் பதக்கங்களையும் 63 பதக்கங்களையும் பெற்று, தங்கப் பதக்க வரிசையில் ரஷியாவைத் தாண்டி இரண்டாம் இடம் வகித்தது பற்றிய செய்தி, ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியும் ஏதென்ஸ் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியும் வெற்றிகரமாக நடைபெற்றது பற்றிய செய்தி, 2004ஆம் ஆண்டு ஐரோப்பியக் கால்பந்து சாம்பியன் பட்டப் போட்டியில் கிரேக்க அணி சாம்பியன் பட்டம் பெற்றது பற்றிய செய்தி ஆகியன அவற்றில் இடம்பெறுகின்றன.

சிந்குவா செய்தி நிறுவனம் டிசம்பர் 27ந் நாள் 2004ஆம் ஆண்டுக்கான சீனாவின் தலைசிறந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளை தெர்ந்தெடுத்துள்ளது. ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான 110 மீட்டர் தடை ஓட்டப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற ஆடவர் லியூ சியாங் முதலிடம் வகிக்கின்றார். ஏனைய 9 பேர்களில் அமெரிக்காவின் NBA இல் சேவை புரியும் கூடைப் பந்து விளையாட்டு வீரர் யோமிங் தவிர அனைவரும் ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சாம்பியன் பெற்றவர்களாவர். அவர்களில் மேசை பந்து வீராங்கனை சாங் யீ நிங், இலக்கு சூட்டு வீராங்கனை தூ லி, நீச்சல் வீராங்கனை லோ சுய் சுவான் படகு ஓட்ட வீரர்கள் மெங் குவான்லியாங், யாங் வென் சுன், மகளிர் கைப்பந்து வீராங்கனை பெங் குன், நீர் குதிப்பு வீராங்கனை கோ ஜிங்ஜிங், பூப்பந்து வீராங்கனை சாங் நிங், பளுத்தூக்கல் வீராங்கனை தாங் குங் ஹோங் ஆகியோர் இடம்பெறுகின்றனர்.

சர்வதேச பூப்பந்து சம்மேளனம் அண்மையில் வெளியிட்ட உலக பூப்பந்து விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளின் புதிய பெயர் பட்டியலில் சீன வீரர் லிந்தான், சாங் நிங், முறையே ஆடவர் மற்றும் மகளிர் ஒற்றையர் போட்டிக்கான பட்டியல்களில் முதலிடம் வகிக்கின்றனர். யாங் வெய்-சாங் சியேவென் ஜோடி மகளிருக்கான இரட்டையர் போட்டிக்கான பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது.

2005ஆம் ஆண்டு LAUREUS உலக விளையாட்டு விருதுக்கான மிக சிறந்த புதிய விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளில் ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தட-களப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற லியூ சியாங்கும் சிங் ஹுய நாவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். தற்போது ஒரேஒரு உலகளாவிய விளையாட்டு விருது, LAUREUS விளையாட்டு விருதாகும். அமெரிக்காவின் NBA இல் சேவை புரியும் சீன வீரர் யோமிங் 2003ஆம் ஆண்டு இந்த விருதை பெற்றிருந்தார். ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் லியூ சியாங் ஆடவருக்கான 110 மீட்டர் தடை ஓட்டப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றார். மகளிருக்கான பத்தாயிரம் மீட்டர் ஓட்டப் போட்டியில் சீன வீராங்கனை சிங் ஹுய்நா முதலிடம் பெற்றார். 2004ஆம் ஆண்டு பிரேஞ்சு டென்னிஸ் ஒப்பன் போட்டியின் மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் பெற்ற ரஷிய வீராங்கனை ANASTASIA MYSKIN 2005ஆம் ஆண்டுக்கான இந்த விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

9வது தென் சீனக் கடல் பன்னாட்டு சைக்கிள் ஓட்டப் போட்டியின் முதல் சுற்று டிசம்பர் 26ந் நாள் சீனாவின் ஹாங்காங் நகரில் நடைபெற்றது. 98 கிலோமீட்டர் தூரமுடைய நெடுஞ்சாலை சுயேச்சைசைக்கிள் ஓட்டப் போட்டியில் சீன ஹாங்காங் வீரர் இரண்டாம் இடம் பெற்றார். ரஷிய வீரர் முதலிடம் பெற்றார்.

2004-2005 சீனத் தேசிய மகளிர் கைப் பந்து சம்மேளனப் போட்டியின் அரை இறுதிப் போட்டி டிசம்பர் 25ந் நாள் நடந்தது. பா யி அணி 3-2 என்ற செட் கணக்கில் செச்சியாங் அணியைத் தோற்கடித்தது. தியன் ஜின் அணி 3-0 என்ற செட் கணக்கில் சியாங் சு அணியைத் தோற்கடித்தது. இவ்வாறு பா யி அணியும் தியன்சின் அணியும் இறுதிப் போட்டியில் கலந்துகொள்ளத் தகுதி பெற்றுள்ளன.

5வது ஹாங்காங் சர்வதேச ஹெண்டு பால் அழைப்புப் போட்டி டிசம்பர் 24ந் நாள் துவங்கியது. முதலாவது ஆட்டத்தில் சீனாவின் பா யி அணி 52-12 என்ற புள்ளிக் கணக்கில் மங்கோலிய அணியைத் தோற்கடித்தது. சீனத் தைபெய் அணி 46-17 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய அணியைத் தோற்கடித்தது. சீன ஹாங்காங் அணி 33-21 என்ற புள்ளிக்கணக்கில் சீன மகௌ அணியைத் தோற்கடித்தது.

கால்பந்து டிசம்பர் 24ந் நாள் நடைபெற்ற GULF CUP கால்பந்து போட்டியில் கத்தார் ஆடவர் அணி ஓமன் அணியைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றது. 120 நிமிடம் நீடித்த போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டு சம நிலையில் இருந்தன. இறுதியில் பெனால்டி கோல் மூலம் 5-4 என்ற கோல் கணக்கில் கத்தார் அணி வெற்றி பெற்றது.