• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-01-05 12:13:38    
நேயர்களின் கருத்துக்கள் 35

cri
எமது ஒலிபரப்பில், மக்கள் சீனம் நிகழ்ச்சி நீண்டகாலமாக இடம்பெறுகிறது. பல நேயர்கள் இந்த நிகழ்ச்சியை, பாராட்டுகின்றனர். முதலில், அவர்களின் கருத்துக்களைக் கேட்டு மகிழுங்கள்.

--இந்தந் நிகழ்ச்சியில் சீனாவில் காடு வளர்ப்பு பற்றி அறிவிப்பாளர் வான்மதி விரிவாக கூறக்கேட்டேன். சீனாவில் பசுமை மயமாக்கமும் வன பாதுகாப்பும் தீவிரமாக உள்ளது என்ற செய்தியைக் கூறக் கேட்டதில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் காடு வளர்ப்புக்காக சீனா தீவிர நடவடிக்கை எடுத்து வருவதை நன்கு புரிந்துகொண்டேன் என்கிறார் எஸ்.நாட்டாமங்கலம், A.மாதுராஜ்.

--சீன அரசு, காடு வளர்ப்புக்கு அளித்துள்ள முக்கியத்துவம் குறித்தும். சீனாவிலுள்ள காடுகளின் விவரங்கள் குறித்தும் விரிவாக அறியதந்தீர்கள், சிறப்பாக இருந்தது. நாங்களும் மரம் வளர்க்க முயற்சி செய்கிறோம் என்கிறார், மீனாட்சிபாளையம் K.அருண்.

--சீன மகளிரின் உடல் நல பாதுகாப்பு வளர்ச்சி விகிதம் கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ந்து வருவதையும். அதற்கு உதவிடும் பொருட்டு, பல எளிய வகை காப்பீட்டு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதையும் கேட்டு ரசித்தோம். சீன அரசின் முயற்சிகளை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும் என்கிறார் செல்லூர் N.சீனிவாசன்.

--இந்த நிகழ்ச்சியை வாயலாக சீன மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுவரும் பெரும் மாற்றங்களை அறிய முடிகிறது. தற்போது சீனாவில் காப்பீடு துறையானது பெரும் வரவேற்பு கண்டு வருகிறது. சீன மக்களின் உணவு, உடை பிரச்சினைகளைத் தீர்த்து, சீன மக்களின் தங்கள் வாழ்க்கைத்தரத்தினை சீன அரசு உயர்த்தி வருவதை இன்றைய இந்நிகழ்ச்சியின் வாயலாக அறிய வைத்தீர்கள் என்கிறார் திருச்சி அண்ணாநகர், V.T.ரவிச்சந்திரன்.

--சிவப்பு மிளகாய் பயன்பாடு பற்றியும் அது சிவப்பு நிற வங்கிகள் என்று கூறியதும். இந்த மிளகாய் சீன விவசாயிகளின் பணப் பயிர் என்பது தெரிகிறது. இந்த மிளகாய் உற்பத்தி பற்றி நான் CHINA TODAY இதழில் படித்துள்ளேன் என்கிறார் விழுப்புரம், S.பாண்டியராஜன்.

--சீனாவில் காப்பீட்டு பற்றி கேட்டவற்றில் இந்த காப்புறுதி பற்றி சீன மக்களின் நிலையைப் பற்றியும் காப்பீடு முறைமைகள் பற்றியும் ஒரு ஆண்டுக்கு 60க்கும் அதிகமானக் காப்புறுதி நிறுவனங்கள் உள்ளது என்றும் இந்தக் காப்புறுதி நிறுவனங்களின் நிலையும் அவை மக்களுக்கு செய்யும் உதவிகள் பற்றியும் இன்றைய நிலையில் காப்பீட்டு நிறுவனங்கள் நடுவண் அரசினால் பெறப்படும் பாதுகாப்பு பற்றி கேட்டேன் என்கிறார் ராமியம்பட்டி S.பாரதி.

--குவாங் சு பொருட்காட்சி பற்றிய தகவல்களை அறிந்து கொண்டேன். மைக்ரோ ஒவன் எனும் மின் சமையல் பொருட்களை உலகளவில் சீனாவின் உற்பத்தி 33 விழுக்காடு வகித்துள்ளது என்பதை இந்த நிகழ்ச்சியின் மூலம் அறிந்து கொண்டேன் என்கிறார் சேந்தமங்கலம், D.சரவணக்குமார்.

இனி, உங்கள் குரல் நிகழ்ச்சி பற்றிய கருத்து கேளுங்கள்.

--இப்பகுதியில், அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்ற தலைவர் எஸ்.செல்வம் அவர்கள், விழுப்புரம் எஸ்.பாண்டியராஜன் மகள் திருமண விழாவில் கலந்துகொண்டு நேயர்களின் கருத்தை ஒலி பதிவு செய்து அனுப்பிய ஒலிநாடாவின் கருத்து அருமை என்கிறார், கண்டமங்கலம், A.முஜீபுர் ரஹமான்.

--இதில், 30 பள்ளிப்பட்டி தமிழ்செல்வன் என்ற நேயர், செயலாளர் பல்லவி கே.பரமசிவனை நேரில் கண்டு வழங்கியதை கேட்டோம். இணையத்தள வசதிகள் எல்லா நேயர்களுக்கும் கிட்டுவதில்லை என்கிறார் ஈரோடு M.C.பூபதி.

--இதில் எங்கள் சகோதர்களான ஆதிராஜ், சன்முகம் முதலியோர் பேச்சுமொழி ஒலிபரப்பாயிற்று மேலும் ஆரணி நகர நேயர் மன்ற உறுப்பினர் சங்கர் அவர்கள் பட்டுதொழியை பற்றி விளக்கினார். முன்னால் நேயரான கோவிந்தராஜ் சிறப்பாக பேசினார். இவ்வற்றை ஆரணி கங்கா யான்சி தமிழ் நேயர் மன்றம் ஒலிப்பதிவு செய்துள்ளன என்கிறார் ஆரணி மெய்யூர், சி.பிரகாஷ்.