• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-01-07 11:25:11    
நேயர்களின் கருத்துக்கள் 37

cri
இவ்வாண்டில் இலங்கை நேயர்களின் கடித எண்ணிக்கை அதிகரிக்கிறது. அவர்களின் கருத்து கேட்போமா?

--உங்களது நிகழ்ச்சியை தவறாமல் கேட்டுக்கொண்டு வருகின்றேன். அதில் உங்கள் குரல், நட்புப்பாலம், சீன பண்பாடு, செய்தித்தொகுப்பு என்பவற்றை மிகவும் ரசித்து கேட்டேன். உங்களது சீனத் தமிழ் வானொலி, தமிழ் பேசும் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது என்கிறார் இலங்கை M.I.F.IRFANA.

--எமது மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட நேயர் மன்றத்தை ஆரம்பித்து வைத்தோம். இந்த மன்றத்தை தொடர்ந்து நடத்த எமக்கு நல்ல பல ஆலோசனைகளை கடிதம் மூலம் அனுப்பிவையுங்கள் என்கிறார் காத்தான்குடி 2, M.M.M.நிப்றாஸ்.

--நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சியில், சர்க்கரை நோய் பற்றி கேட்டேன். சர்க்கரை நோய் ஏற்பட்ட காரணங்களையும் அந்நோயை குணமாக்கக் கூடிய வழிமுறைகளையும் தந்தீர்கள் என்கிறார் கினிகத்தேனை பி.மூர்த்தி.

--சீன உணவு அரங்கம் நிகழ்ச்சி மூலம், பல புதிய சீன உணவுகளை பற்றி அறிய முடிகிறது. நான் அந்த நிகழ்ச்சிகளில் குறிப்பிடப்படும் உணவுகளை நிகழ்ச்சி நடைபெறும் போதே செய்ய முயற்சி செய்கின்ரேன். ஆனால் நிகழ்ச்சி அறிவிப்பாளர்கள் தேவையான பொருட்கள் செய்முறை போன்றவற்றை சொல்லும் போது சற்று இடைவெளி விட்டு சொன்னால் அவற்றை தயாரிக்கும் எமக்கும் உதவியாக இருக்கும் என்கிறார் இலங்கை புதிய காத்தான் குடி 3, M.சஜாத்.

அடுத்து, எமது ஒலிபரப்பு பற்றிய பல்வேறு கருத்துக்கள் இதோ.

--தங்களது 42 வருடகால தமிழ் ஒலிபரப்பு, எங்கள் மொழி பற்றிய பெருமையையும், தங்களது மொழி ஆர்வத்தையும் காட்டுகின்றது. கடந்த ஒரு வருடகாலமாக தங்களது நிகழ்ச்சிகளை தொடர்ந்து கேட்டுவரும் நான் தங்களின் தூய தமிழ் உச்சரிப்பை கண்டு வியக்கிறேன். நிகழ்ச்சிகள் மிகவும் அருமை. நிகழ்ச்சிகளின் நேரத்தை அதிகரிக்க தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்கிறார் செங்காட்டுப்பட்டி, J.சரவணன்.

--நேருக்கு நேர் நிகழ்ச்சி கேட்டேன். இதில், தமிழ்பிரிவு தொடங்கிய 41ம் ஆண்டு நிறைவு முன்னிட்டு வேலூர் மாவட்ட நேயர் மன்ற தலைவர் ராமதாஸ் அவர்களின் பேட்டி கேட்டேன். ரத்தின சுருக்கமாக அவர் சீன வானொலி பற்றியும் நிகழ்ச்சிகள் பற்றியும் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை என்கிறார் பனப்பாக்கம், R.கிருஷ்ணமூர்த்தி.

--சீன தேசிய இனக்குடும்பம் என்ற நிகழ்ச்சியில் தேசிய சிறுபான்மை தேசிய இன மக்களுக்கு சீனா முக்கியத்துவம் கொடுத்து கல்வி, பொருளாதாரம், சமூக முன்னேர்றத்திற்காக சிறந்த பங்களித்து வருவது கண்டு மிகவும் சந்தோஷமடைகின்றேன் என்கிறார், மதுரை 20, T.ஈஸ்வரன்.

--சீனாவில் இன்ப பயணம் மூலம் மனிதர்கள் சென்று பார்க்க கூடிய இடங்கள், சென்று வரும் வழிகள் முதலியவை, ரசிக்கும் படி உள்ளன என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது என்கிறார் ஜம்புலியபட்டி, S.ஆரோக்கியசாமி.

--மூன்று பக்கங்களில் கடல் நீரினால் சூழ்ந்து காணப்படும் சீனாவின் தென் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஷாமென் நகரில் சுற்றுலா என்பது பற்றிய கருத்துத் தகவல்கள் மிகவும் அருமை. எங்களையும் மலர்விழி அவர்கள் ஷாமென் நகரத்துக்கு நேரில் அழைத்துச்சென்றது போன்று இருந்தது என்கிறார் புதுவை G.ராஜகோபால்.

அறிவியல் உலகம் நிகழ்ச்சியில், உயர் தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி நேயர்களைக் கவர்ந்துள்ளது.

--நமது உடலுக்கு தேவை வெளிச்சம் என்று வந்த நல்ல கருத்துக்களைக் கொண்ட அறிவியல் உலகம் நிகழ்ச்சி மிக நன்று. குளிர்காலங்களில் ஒளி பற்றாக்குறை வருவது இயல்பான ஒன்றாக இருந்தாலும், நமது உடலுக்கு வெளிச்சம் தேவைப்படுகிறது என்ற பயனுள்ள செய்தியை இதன் மூலம் அறிந்துகொண்டேன் என்கிறார் செந்தலை, N.S.பாலமுரளி.

--இதில், பாதுகாப்பான சூரிய ஒளி என்ற தகவல் பயனுள்ளதாக இருந்தது. சூரிய ஒளி உடம்பில் பட்டால் வைட்ட மின் D.சத்து கிடைக்கிறது எனவும் உடம்பில் உள்ள வைட்ட மின் D யில் 90 சதவிகிதம் சூரிய ஒளியின் மூலம் தான் கிடைப்பதாக அறிந்துகொண்டேன் என்கிறார் தார்வழி, P.முத்து.

--இதய நோய் என்னும் கட்டுரையைக் கேட்டேன். இதய நோய் என்பது மனித உயிரை அச்சுறுத்தம் மிகப்பெரிய நோயாக தற்போது மாறிவிட்டது. திடீரென வருவதால் இதை ஆபத்தான நோய் என்றும் கூறலாம். இதய நோய்க்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மிகவும் நல்லது அல்லவா? என்று வளவனூர் புதுப்பாளையம் S.செல்வம் கருத்து தெரிவித்தார்.

--மூளையில் ஏற்படும் கட்டியை அகற்றுவதில் மைக்ரோ சர்ஜரி பயன்படுத்தப்படுகிறது. உரிய இடத்தை கண்டறிந்து அறுவை சிகிச்சை செய்வது என்பதற்கு மைக்ரோ ஸ்கோப் பயன்படுத்தப்படுகிறது என்கிறார் துறையூர், G.ரமேஷ்.

--இந்த நிகழ்ச்சியில் அல்ஸ்வீமர் நோய் பற்றி கூறினீர்கள். இந்த வகையான நோய் கூட உள்ளனவா என்று வியந்துபோனேன். இந்த நோய் தாக்கும் இடம் வகை எப்படி? ஆரம்ப நிலையை கண்டறிவது என தற்காப்பு ஆலோசனை வழங்கியது அருமை என்கிறார் S.நாட்டாமங்கலம் V.ராமாகிருஷ்ணன்.