• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-01-06 20:16:51    
நேயர்களின் கருத்துக்கள் 36

cri

இனி, சீன பண்பாடு நிகழச்சி பற்றிய நேயர்களின் கருத்துக்களைக் கண்போம்.

--நாசி இனம் பற்றிய செய்தி அருமை. சிறுபான்மை இனம் என்றும் இவர்களின் வாழ்க்கை முறைகளிலுள்ள விழாக்கள் சிறப்பானவை ஆகும். கடவுள் ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் முத்திரையை பதிப்பது உண்மை இதனை நாசி இன மக்கள் போற்றுதல், அருமை என்கிறார் விழுந்தமாவடி, R.மகேந்திரன்.

--சீன உணவு பண்பாடு பற்றிய தகவல் அனைத்தும் பிரமிப்பாக இருந்தது. 20ம் நூற்றாண்டு துவக்கம் முதல் இந்த பண்பாடு புகழ்பெற தொடங்கியது. உணவின் தன்மை, உடல் நலத்துக்கான உணவு, எண்ணெயில் வதக்குதல், வறுத்தல், இறைச்சி வறுவல் என பல தகவலும், 100 உணவு 100 வகை 100 சுவை என அழகாக கூறியுள்ளீர்கள் என்கிறார், திருச்சி காஜாமலை, G.பிரபாகரன்.

--இந்நிகழ்ச்சியில் ஷாங்காயில் பழமை வாய்ந்த பண்பாட்டுச் சின்னமான பட்டின் மகத்துவத்தை உணர்ந்தோம். பட்டில் இருந்து தயாரிக்கப்படும் ஆடைகள் குறித்தும், அதன் சிறப்புக்கள் குறித்தும் தமிழ் பிரிவு மிகச் சிறப்பாக விளக்கியது என்று மீனாட்சிபாளையம் K.அருண் கருத்து தெரிவித்தார்.அடுத்து, பிற நிகழ்ச்சி பற்றிய கருத்துக்கள்.

--இன்றைய சீனாவுக்கு அப்பால் எனும் புதிய நிகழ்ச்சியில், S.செல்வம் தொகுத்து வழங்கிய மூன்று வயது முதல் 16 வயது சிறுவர் சிறுமிகளின் ஸ்கேட்டிங் திருச்சி முதல் புதுவை மாநிலம் வரை வந்த தகவல்களை எடுத்துக்கூறிய விதம் மிகவும் நன்றாக இருந்தது என்கிறார், புதுவை G.ராஜகோபால்.

--நேயர் விருப்பம் நிகழ்ச்சி, இனி வரும் ஞாயிறன்று தொடர்ந்து வழங்கவுள்ளது அறிந்து மிகுந்த மகிழ்ச்சி குமசம் பிறந்தார். திருமண நாள் வாழ்த்தும் வழங்கவுள்ளது அறிந்து மிகுந்த மகிழ்ச்சி நன்றி என்கிறார் சென்னை-44 P.குமரேசன்.

--நிகழ்ச்சி பற்றிய குறைகள், ஒலிபரப்பு பற்றிய கருத்துக்கள், ஒலிதிறன் பற்றிய நிலையினை, அந்த அந்த மன்றம் நேரிடையாக வாரம் ஒரு முறை இந்த வாரத்தின் வானொலி என்ற தலைப்பில் கருத்து அனுப்புதல் மேற்கொண்டு செயல்படும் என தெரிவிப்பது என்கிறார் பாலுர், P.S.சுந்தரராஜன்.

--அறிவியல் உலகம், நலவாழ்வு பாதுகாப்பு, மலர்ச்சோலை, சீனப்பண்பாடு முதலியவை அற்புதமான நிகழ்ச்சிகள். இந்த நிகழ்ச்சிகளை மேலும் விரிவாக சிறப்பாக எதிர்பார்க்கிறோம். நேயர்களின் கருத்திற்கு எப்போதும் மதிப்பளிக்கும். எங்கள் வீட்டிலுள்ள சிறியவர்கள் முதல், பெரியவர்கள் வரை அனைவருக்கும் அத்தனை நிகழ்ச்சிகளும் பிடிக்கும் என்கிறார் மேட்டுப்பாளையம் R.கிருஷ்ணமூர்த்தி.

--மலர்ச்சோலை நிகழ்ச்சியைக் கேட்டேன். அதில் இத்தாலியில் 36 விழுக்காடு குழந்தைகள் மட்டுமே தங்களின் பெற்றோருடன் இணைந்து உணவை உண்கிறார்கள் என்ற தகவல் வருத்தமளிக்கிறது. குழந்தைகளின் பெற்றோர்கள் பணம் பணம் என்று பணத்தை சம்பாதிப்பதிலேயே ஆர்வம் காட்டி தாய் தந்தை இருவரும் பணிக்கு சென்றுவிடுவதால் எப்போதும் மிகவும் குறைந்த நேரம் மட்டுமே. அவர்கள் பெற்ற குழந்தையுடன் இருக்க முடிகிறது என்கிறார் கைத்தறிநகர் J.D.மணிகண்டன்.

--நலம் விசாரிப்பது தொடர்பான சீன வாக்கியங்களை எவ்வாறு உச்சரிப்பு செய்வது என அறிந்தோம். தமிழ் மூலம் சீனம் அச்சடித்த புத்தகங்களை அனுப்பித் தருமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்கிறார் ஈரோடு, M.C.பூபதி.

--நமது சிறப்பு நேயர் நாச்சிமுத்து சீனாவில் இருந்த போது, பேட்டி கண்ட கருத்து, அவர் அளித்த பேட்டியும் என்னை மிகவும் கவர்ந்து இருந்தது. தவிர, புதுடில்லி ராஜகோபால் அளித்த பேட்டியும் என்னை கவர்ந்து இருந்தது என்கிறார், கண்டமங்கலம், A.முஜீபுர் ரஹமான்.

--நட்பு பாலம் என்று நிகழ்ச்சிக்காக விழுப்புரம் S.செல்வம் வழங்கிய பாண்டியராஜன் அவர்களின் மகள் திருமணத்திற்கு வருகை புரிந்தேன். பல நேயர்கள் குரல்கள் இதில் இடம்பெற்றன. வினாயகமூர்த்தி, ராமபத்திரன் இருவரின் உள்ளங்களையும் மனதில் உள்ளதை வார்த்தை வடிவில் எங்களுக்கு வழங்கப்பட்டது. இதுவே, ஒரு நல்ல சிறப்பான நிகழ்ச்சியாகும் என்பது என் கருத்து என்று, சேந்தமங்கலம், V.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

--நிகழ்ச்சிகள் அனைத்தும் சிறப்பாக அமைத்து வருகிறது. சீன சுகாதாரம் சுற்றுசூழல் பாதுகாப்பு விவசாயம் சீன பொருளாதாரம் முன்னேற்றம் மக்கள் நலம் போக்குவரத்து வசதி, சாலை அமைப்பு போனஅற அனைத்து நலத் தி்ட்டங்களும் சீன செயல்படுத்தி வருவது பாராட்டுக்குரியது. அது மட்டுமல்ல, அண்டை நாடுகளின் நட்புறவையும் சீனா வளர்த்துக் கொண்டுள்ளது என்கிறார் மூனநாடு, k.அடைக்கலம்.