• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-01-13 16:46:05    
விளையாட்டு செய்திகள்

cri

சீனத் தேசிய விளையாட்டு நிர்வாகம் வழங்கிய புள்ளிவிபரங்களின் படி, 2004ஆம் ஆண்டு சீன விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, உலக சாம்பியன் பட்ட போட்டிகள், உலக கோப்பைப் போட்டி உள்ளிட்ட சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் 106 உலக சாம்பியன் பட்டம் பெற்றனர். அவற்றில், 17 ஒலிம்பிக் விளையாட்டு நிகழ்ச்சிகளில் பெறப்பட்ட 53 சாம்பியன் பட்டங்கள் இடம்பெறுகின்றன. இவை மொத்தம் 50 விழுக்காடு ஆகும்.

2005ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் முதல் நாள், சீனாவின் பல்வேறு இடங்களில், பொது மக்கள் பல்வடிவங்களில் புத்தாண்டை கொண்டாடினர். பெய்சிங்கில், மலை ஏற விரும்பும் 2005 பேர், பாடாலிங் மலையில் அமைந்துள்ள பெரும் சுவரில் ஏறும் நடவடிக்கையில் கலந்துகொண்டனர். சீனத் தேசிய விளையாட்டு நிர்வாகத்தின் தலைவர் லியூ பொங்கும் இதில் கலந்துகொண்டார். குவாங்சி ச்சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் குய்லின் நகராட்சி, குளிர்காலத்தில் நீச்சலடிக்க விரும்புவோருக்கு, லீச்சியாங் ஆற்றை நீந்தி கடக்கும் நீர் விளையாட்டுக்கு ஏற்பாடு செய்தது. 400க்கும் அதிகமானோர் இதில் கலந்துகொண்டனர்.

2005ஆம் ஆண்டு உலக இளைஞர்ஐஸ் ஹாக்கி சாம்பியன் பட்டப் போட்டியின் பீ பிரிவுப் போட்டி 9ஆம் நாள் ருமேனியாவின் தலைநகரான புகரேஸ்டில் நிறைவடைந்தது. சீன அணி 5 ஆட்டங்களில் 3 வெற்றி இரண்டு தோல்லி என்ற சாதனையுடன் இறுதியில் நான்காம் இடம் பெற்றது. ஏ பிரிவுப் போட்டி 4ஆம் நாள் ஏற்கனவே நிறைவடைந்தது. கனடா அணி சாம்பியன் பட்டம் பெற்றது.

உறைபனிச் சறுக்கல் சர்வதேச உறைப்பனிச் சறுக்கல் விழா 2ஆம் நாள் சீனாவின் கிலின் மாநிலத்தின் சாங்சுன் நகரின் சிங்யுயே தான் எனும் தேசிய காட்டுப் பூங்காவில் துவங்கியது. மொத்தம் 20க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த பல்லாயிரம் முழு நேர மற்றும் ஒய்வு நேர விளையாட்டு வீரர்களுகம் ரசிகர்களும் அதில் கலந்துகொள்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் 50 கிலோமீட்டர், மற்றும் 25 கிலோமீட்டர் என்ற பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும். மகளிருக்கான 7 கிலோமீட்டர் உறைபனிச் சறுக்கல் போட்டியில் சீன வீராங்கனை மன் தான் தானும், 14 கிலோமீட்டர் உறைப்பனிச் சறுக்கல் போட்டியில் சீன வீராங்கனை லியன் செங் சையும் சாம்பியன் பட்டம் பெற்றனர்.

4வது ச்சிங் ஹை ஏரி சர்வதேச நெடுஞ்சாலை சைக்கிள் ஓட்டப் போட்டி, ஆசியாவின் உச்ச நிலை போட்டி என்ற தகுதி பெற சர்வதேச சைக்கிள் விளையாட்டு ஒன்றியம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இப்போட்டியை 2005ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 16ஆம் நாள் முதல் 24ந் நாள் வரை நடத்துவதென ச்சிங் ஹை மாநில அரசும் இப்போட்டிக்கான அமைப்பு கமிட்டியும் முடிவு செய்துள்ளன.