• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-01-11 10:29:36    
விளையாட்டுச் செய்திகள்

cri

கால் பந்து ஜனவரி 2ஆம் நாள் நடைபெற்ற 27ஆம் குவாங்துங் ஹாங்காங் கோப்பைக்கான கால்பந்து போட்டியின் முதலாவது சுற்றில், சீன ஹாங்காங் அணி 2-0 என்ற கோல் கணக்கில் குவாங்துங் அணியைத் தோற்கடித்தது. குவாங்துங்-ஹாங்காங் கோப்பைக் கால்பந்து போட்டி, இவ்விரு இடங்களுக்கிடையிலான பாரம்பரிய கால்பந்து போட்டியாகும். ஆண்டுக்கு ஒரு முறை அது நடைபெறுகின்றது. அவற்றுக்கிடையிலான இரண்டாம் சுற்றுப் போட்டி ஜனவரி திங்கள் 19ஆம் நாள் ஹாங்காங்கில் நடைபெறும். இந்த போட்டியில் பெறப்படும் அனைத்து வருமானத்தையும் கடல்கொந்தளிப்பால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு வழங்குவதாக ஹாங்காங் கால்பந்து தலைமை சங்கம் 2ஆம் நாள் அறிவித்தது.

WINTER TRI ATHLON எனும் போட்டி ஜனவரி திங்கள் முதல் நாள் பூஜியத்துக்குக் கீழ் 20 டிகிரிஎன்ற குளிர் நிலையில் சீனாவின் ஹெலிங்ஜியாங் மாநிலத்து ஹார்ப்பின் நகரில் நடைபெற்றது. அமெரிக்கா, செக், ரஷியா, உக்ரைன், துர்குமெனிஸ்தான், சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 300க்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டனர். இப்போட்டியை ஏற்பாடு தெய்தவர் கூறியப்படி, இந்த போட்டியின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இரண்டாம் முறையாக நடைபெறும் இப்போட்டியில் கலந்துகொண்டோர் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ளது. அவர்களில், மிகவும் வயது கூடுதலானவர் 74 வயது, மிகவும் வயது குறைந்தவருக்கு 12வயது தான்.

2005ஆம் ஆண்டு உலக இளைஞர் குறுகிய தூர பனிச்சறுக்கல் சாம்பியன் பட்டப் போட்டி 9ஆம் நாள் செல்விய குடியரசின் தலைநகரான பெல்கிரேட்டில் நிறைவடைந்தது. சீன வீரர்கள் ஒரு தங்கப் பதக்கத்தையும் மூன்று வெள்ளிப் பதக்கங்களையும் பெற்றனர். ஆடவருக்கான 500 மீட்டர் பனிச்சறுக்கல் போட்டியில் சீன வீரர் சுய் லியங் முதலிடத்தையும் சௌ சின் யு இரண்டாம் இடத்தையும் பெற்றனர். தவிர சீன அணி தொடர் பனிச்சறுக்கல் போட்டியிலும் இரண்டாம் இடம் பெற்றது.

2006ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டி துவங்கும் நாளுக்கு இன்னும் 700 நாட்கள் உள்ளன. இந்த விளையாட்டுப் போட்டிக்கான தோஹா அமைப்பு கமிட்டி 2004ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் நாள் இரவு, இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான மங்கள சின்னமான கத்தார் TAKIN மாடு என அறிவித்துள்ளது. அத்துடன் இந்த மங்கள சின்னத்துக்கு ஓரி எனும் பெயரை சூட்டியுள்ளது. 15வது ஆசிய விளையாட்டுப் போட்டி 2006ஆம் ஆண்டு டிசம்பர் முதல் நாள் தோஹாவில் நடைபெறும். ஆசிய விளையாட்டுப் போட்டி 1974ஆம் ஆண்டு தெஹ்ரானில் நடைபெற்ற பின், மேற்கு ஆசிய நாட்டில் நடைபெறுவது இது முதல் முறையாகும்.