• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-01-12 16:04:01    
நேயர்களின் கருத்துகள் 40

cri
முதலில், பல நேயர்கள் கடிதங்கள் மற்றும் ஈமேல் மூலம் சீன வானொலி நிலையத்தின் அனைத்தும் பணியாளர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்தனர். அவர்களுக்கு நாம் நன்றி தெரிவிக்க வேண்டும். ஒலிபரப்பில் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் பயன்படும் விதத்தில் புதிய நிகழ்ச்சி ஆரம்பிக்கலாம். மருத்துவ கேள்வி பதில் விமர்சனக் கடிதங்களுக்கென கூடுதல் நேரம் ஒதுக்குவது நலன். மாணவ மாணவியர் ஏழைகளுக்கென இயன்ற உதவிகளை செய்யலாம். இன்னும் பல தீர்மானங்கள் உண்டு செய்வீர்கள் என நம்புகிறேன் என்று கே, எம் இராஜூ தெரிவித்தார். சீன சமூக வாழ்வு நிகழ்ச்சியில் சீன கிராமத்திலுள்ள மக்களின் முன்னேற்றத்தையும் அந்த கிராம வளர்ச்சி பற்றியும் தெரிவாக எடுத்துறைக்க கேட்டு மகிழ்தோம். சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி காலத்தில் கிராமங்களில் உள்ள மக்கள் விவசாயம் மற்றும் தொழில் துறையில் அதிக முன்னேற்றம் அடைந்துள்ளது. ஒரு கிராமத்தின் வளர்ச்சியே அந்த நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. அதை சீன அரசு உணர்ந்து செயல்படுவது மிகவும் மகிழ்சி அளிக்கிறது. மலர்ச்சோலை நிகழ்ச்சியில் தொலைக்காட்சி பார்தால் ஏற்படும் தொல்லைகள் குறித்து அறிய கேட்டேன். எப்போதும் தொலைக்காட்சி பெட்டி முன் அமர்ந்து கொண்டிருப்பவர்கள் இந்த நிகழ்ச்சி கேட்ட பின் திருந்துவார்கள் என நம்புவோம். தொடர்ந்து வந்த அதே நிகழ்ச்சியில் அதிக நாள் வாழ ஏதாவது ஒரு புது மொழியை கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்ற தகவல் மிகவும் உபயோக மானதாக இருந்தது. அறஇய பல தகவல்களை அளித்து வரும் மலர்சோலை நிகழ்ச்சிக்கும் ஒலிபரப்பி வரும் சீன வானொலி நிலையத்திற்கும் எனது நன்றிகளும் பாரட்டுக்களும் என்று மோகன் குமார் குறிப்பிட்டார். சீன சமூக வாழ்வு நிகழ்ச்சியில் ஊரை செழுமையாக்கி வரும் விவசாயி ஊதௌன்கோ பற்றி கேட்டோம் அவர் மேற்கொண்டுள்ள விவசாய இயற்கை முறை பற்றி நன்கு அறிந்து அறிந்து கொள்ள முடிந்தது. அவர் மேற்கொண்டுள்ள பணிகளை ஒவ்வொரு விவசாயியும் மேற்கொண்டால் உலகமே செல்வச் செழிப்பு பெரும் என்ற எண்ணத்தை தோற்றுவிப்பதாக அமைந்தது இந்த நிகழ்ச்சி. தவிர, சுங்க வரியை சீனா பெருமளவில் குறைத்து சேவை சந்தையின் கதவுகளை திறந்திருப்பது வரவேற்கத்தக்கது.