• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-01-11 13:42:13    
தற்கொலைத் தடுப்பு ஆலோசனை சேவை

cri

இறைவன் கொடுத்த உயிரை எடுப்பதற்கு மனிதனுக்கு உரிமை இல்லை. அந்த உயிரை உடம்பில் சுமந்து வாழ்க்கையை இயல்பாக முடிப்பதே மனித வாழ்க்கையின் கடமை. இதுதான் உலகில் வாழ்க்கையின் இயற்கை நியதி. மனிதன் மற்றவர்களின் உயிரைப் பறிக்க முடியாது..அதே போல தன்னுடைய உயிரையும் தானே எடுத்துக்கொள்ளமுடியாது. அது தற்கொலை.

மனிதன் தற்கொலை செய்ய வேண்டிய நிலை எதனால் உண்டாகிறது வாழமுடியாமல் வாட்டும் வறுமை, சம்பாதிக்க முடியாமல் வேலைஇல்லாத் திண்டாட்டம், குடும்பத்திலே நெருக்கமான உறவினர் இறந்துவிட்டால் ஏறபடும் துக்கம், சண்டைசச்சரவுகலள், உறவிலே ஏறபடும் விரிசல், சட்டச்சிக்கல், வேலை செய்யும் இடததிலே உண்டாகக்கூடிய நெருக்கடி,போன்றவை மனிதன் தற்கொலை செய்வதற்கான காரணங்களாகக் கூறப்படுகின்றன.

சீனாவில் ஒவ்வொரு இரண்டு நிமிடமும் 9 பேர் தற்கொலைக்கு முயற்சிப்பதாகவும், அவர்களில் 8 பேர உயிர் இழந்து விடுவதாகவும் ஓர் ஆய்வில் மதிப்பிடப்பட்டுள்ளது. மக்களிடையே மிகுதியாகக் காணப்படும் இந்த தற்கொலைப் போக்கை தடுப்பது எப்படி என்ற வினா எழுந்தது. இதைத் தொடர்ந்து பெய்சிங் நகரில் கடந்த

ஆண்டு ஓர் உதவி மையம் திறக்கப்பட்டது. பெய்சிங் தற்கொலை ஆராய்ச்சி மற்றும் தடுப்பு மையத்தில் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறும் வசதிகள் உள்ளன. மனச்சோரவினால் துவண்டு போகும் மக்கள் உடனுக்குடன் 24 மணி நேரமும் தொலைபேசியில் தொட்ர்பு கொண்டு தங்களுடைய மனப்பாரத்தை இறக்கி வைக்கலாம். இதுவரை சுமார் ஒரு லட்சத்து 10,000 மக்கள் உதவிகோரி இந்த மையத்துடன் தொடரபி கொண்டுள்ளனர். இந்த மையத்தில் உள்ள மனவியல் நிபுணர்களுடன் பேசிய பிறகு பலருக்கு வாழ்க்கை மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்கிறார் இதன் அதிகாரி சாங் சியேயு.

அண்மையில் பெய்சிங் நகரில் நடந்த 5 நாள் பயிற்சிககூட்டத்தில் துவக்க உரையாற்றிய அவர், தற்கொலையைத் தடுப்பதில் மிக முக்கியமான அம்சம் உணர்வுகளை அடக்கி வைக்காமல் வெளியிட வைப்பதாகும் என்றார். கோபமோ மனச்சோர்வோ எதுவானாலும் மனவியல் நிபுணர்களோடு பேசும்போதுமனக்குமுறல்கள் யாவும் வெளிப்பட்டு மனம் லேசாகி விடுகிறது. இது தற்கொலை முயற்சிகளை தடுப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. என்றும் அவர் கூறினார்.

உதவி மையத்துடன் இதுவரை 5873 பேர் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு ஆலோசனை பெற்றுள்ளனர், இவர்களில் 83 விழுக்காடு மக்கள் பலவகைகளில் தங்களுக்கு நிவாரணம் கிடைத்திருப்பதாக கூறியுள்ளனர்.

இந்த மையம் சிறைச்சாலைகளுடன் இணைந்து செயலாற்றுகின்றது. இதன்மூலம் கைதிகளின் மனப்பிரச்சினைகளுக்கு தீரவு காணப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் மூன்று நாட்கள் காலையில் உடனடித் தொலைபேசி கைதிகளுக்கு தயாராக வைக்கப்படுகிறது. மூத்த மனவியல் ஆலோசகர் ஒருவர் கைதிகளின் பிரச்சினைகளைக கேட்டு தக்க தீர்வுகளை கூறுகிறார். இதற்கு காரணம் உண்டு. சிறைகளில்தான் தற்கொலை விகிதம் அதிகம் என்பது வெளிநாட்டு அனுபவங்களின் மூலம் தெரியவந்துள்ளன.

தற்கொலைத் தடுப்புப் பிரச்சினையில் தீர்வுகாண மனநலன் தொடர்பான விஷயங்களில் சீன அரசு அதிகக் கவனம் செலுத்திவருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் அரசுசபை வெளியிட்ட ஒரு ஆவணம் மனவியல் நெருக்கடியில் அரசு தலையிடவேண்டிய அவசிய்த்தை வலியுறுத்தியது.

சீனாவில் ஷாங்கை, நாஞ்சிங்,செங்டு போன்ற பல பெரிய நகரங்களில் சமீபத்தய ஆண்டுகளில் தற்கொலைத் தடுப்புக்காக ஆலோசனை வழங்கும் மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. தீயணைப்பு எச்சரிக்கைக்கு தனியாக ஒரு தொலைபேசி எண் இருப்பது போல தற்கொலைத்தடுப்பு மையங்களுக்கு பிரத்யேகமாக தொலைபேசிஎண் தரப்படுமானால் மனநெருக்கடிக்கு உள்ளாகும் ஒருவர்எங்கிருந்தாலும் தொடர்பு கொண்டு ஆலோசனைச் சேவைகளைப் பெறமுடியும் என்று பயிற்சிக்கூட்டத்திலே பேசிய மனக்கோளாறு சிகிச்சையில் சிறப்பிடம் பெற்ற பெய்சிங் மனநல மருத்துவமனையின் தலைவர் சாவ் லியன்யுவான் கூறினார்.