• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-01-11 13:56:33    
உடல் நோய்கறுக்கு உறுதுணை

cri
பருமன் என்பது மகளிருக்கு ஏற்படுத்தக் கூடிய துன்பம் பற்றி கூறினோம். இதனால் மனிதருக்கு வேறு தீங்கு விளைவியுமா? கண்டிப்பாக. இது பற்றி இன்றைய நிகழ்ச்சியில் தொடர்ந்து விஷத்துகின்றேம். வாழ்க்கையில் உடல் பருமன் ஏற்படாமல் விழிப்புடன் இருக்கும் படி நினைவூட்டுவது எங்கள் நோக்கமாகும். 7 லட்சத்து 50 ஆயிரம் பேர்களிடையே நடத்திய ஆராய்்ச்சியில் ஒரு உண்மை தெரிய வந்தது. அதாவது இயல்பான உடல் எடையை விட 40 விழுக்காடு அதிகம் எடை கொண்டவர்கள் மரணமடையும் விகிதம் 1.9 மடங்கு அதிகமாகிறது. சர்க்கரை நோய், இருதய நோய், ஈரல் நோய், ஹார்மோன் எதிர்க்கும் நோய் சீரணக் குழாயில் கழலை போன்ற நோய் ஏற்படும் ஆபத்து பரமனான உடல் உள்ளவர்களிடம் அதிகம். தவிர, அதனால் முதுகு வலி, மூட்டு வலி மலட்டுத் தன்மை, மன நோய் போன்ற நோய்களும் அதிகம் உண்டாகின்றன. மேலும் அளவுக்கு அதிகமாக உடம்பு எடை போடுவோருக்கு பி ரக சர்க்கரை நோய் ஏற்படுகின்றது. இது இயல்பான உடல் எடை உள்ளவர்களை விட 2.9 மடங்காகும் என்று ஆராய்ச்சி முடிவு கூறுகின்றது. இருதய ரத்த நாள நோய் உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றுக்கு பருமண் தனிப்பட்ட அபாயகரமான காரணியாகும். ரத்த கொழுப்பிலான இயல்பின்மை பருமன் கொண்டவரிடையில் அடிக்கடி காணப்பட்டதாகும். கொழுப்பு மாருபாடு சரியாக இயங்கவில்லை என்பது நாடி வன்மை நெஞ்சுப்பை நாடி நோய் நிகழ்வதற்கும் முக்கிய காரணியாகும். பருமன், சுவாசம், சீரணம் குழாய், இனப்பெருக்கம், எலும்பு முதலிய உறுப்புகளுக்கு தீ5ங்கு விளைவிக்க முடியும். தூங்கும் போது சுவாசம் தற்காலிகமாக நின்றமை என்பது பருமன் கொண்டவருக்கு அடிக்கடி ஏற்படும் அறிகுறியாகும். இதனால் கடுமையாக பாதிக்கப்படுவோர் திடீரென மரணமடைவர் கொழும்ப்பு, ஈரல், பித்தபை கட்டி ஆகியவை பருமன் கொண்டவரிடையில் அடிக்கடி காணப்படும் சீரண உறுப்பு நோயாகும். பருமன் கொண்ட ஆண்களிடையில் பெருங்குடல் மற்றும் மலக் குடல் புற்றுநோய் ஏற்படுவது இயல்பானவர் போல் 1.33 மடங்காகும். சமூகத்தில் பருமன் கொண்டவரின் மீதான தப்பெண்ணம், பாகுபாடு ஆகியவை நோயாளிகளுக்கு குறிப்பாக குழந்தைகளுக்கும் மகளிருக்கும் கூடாத உள தடையை உருவாக்கக் கூடும். ஆகவே எங்கள் வாழ்க்கையில் உண்ணும் அளவு, சத்துப் பொருட்களின் கட்டமைப்பு, பழம் உட்கொள்வது உடல் பயிற்சி ஆகியவற்றில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். உண்ணும் போது விரும்பிய பொருட்களை அளவுக்கு மீறி உட்கொள்ள கூடாது. அதேவேளையில் பருமணைக் குறைக்க வேண்டும் என்று விரும்பும் மகளிரிடையில் இயல்பான முறையில் உணவு பொருட்களை உட்கொள்ள வேண்டும். பழங்களை அதிகமாக உட்கொள்ள வேண்டும். குறிப்பிட்டநேரத்தில் தூங்க வேண்டும். இப்படிசெய்தால் உங்களுக்கு நலவாழ்வு பாதுகாப்பில் பயன் விளைவிக்கலாம். உங்கள் வாழ்க்கையில் பெற்ற அனுபவம் பற்றி ஒரு வரி எழுதி எங்களுக்குத் தெரிவிப்பதற்கு வரவேற்பு தெரிவிக்கின்றேன். நேயர்கள் இது வரை நோய்க்கு உதவியான பருமன் பற்றிய தகவலைக் கேட்டீர்கள். இத்துடன் நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி நிறைவடைகின்றது.