நல வாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சியில், பயன் மிக்க தகவல்களைப் பெறலாம் என்று பல நேயர்கள் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சி பற்றி நேயர்களின் கருத்துக்களை கேளுங்கள்.
--இந்த நிகழ்ச்சியில், சர்க்கரை நோய் பற்றிய தகவல்களை வழங்கியது மிக சரியான தகவல்களாகும். உலகில் நிறைய பேருக்கு இந்நோய் உள்ளது என்கிறார 30 பள்ளிப்பட்டி N.வேல்முருகன்.
--நல வாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சியில், பசும் பால் பயன் பற்றி நிறைய அறிந்து கொண்டேன். சீனாவில் பசும் பால் பயன் படுத்தப்படுவது ஆடம்பரமாக கருதப்பட்டது என்ற செய்தி வியப்பை அளித்தது. அதுவும் 20 வருடங்களுக்கு முன் என்ற செய்தி குறிப்பிடத்தக்கது என்கிறார் செந்தலை N.S.பாலமுரளி.
--மனச்சோர்வு பற்றியக் கட்டுரையைக் கேட்டேன். மனச்சோர்வு வந்துவிட்டால் ஒருவரால் எந்த வேலையையும் செய்ய இயலாது. கடுகு கூட அப்போது மலை போல் தோன்றும். நலவாழ்வு பாதுக்காப்பு நிகழ்ச்சியில் பல்வேறு தலைப்புக்களில் நீங்கள் கட்டுரை வழங்குவது மிகவும் பயனுள்ளதாக உள்ளது என்கிறார், வளவனூர் புதுப்பாளையம் எஸ்.செல்வம்.
--பூண்டின் மருத்துவ குணம் குறித்து, தகவல்களை இன்று அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எடுத்துரைத்தீர்கள். பூண்டினை உணவுடன் பொரித்துவருவது இந்திய மக்களின் தொன்று தொட்ட உணவு பழக்கங்களில் ஒன்று என்கிறார் திருச்சி அண்ணாநகர், V.T.ரவிச்சந்திரன்.
--நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி மூலம், அணியும் காலணியின் அடிப்பகுதியில் வெளியே தெரியும் வகையில் அமைக்கப்பட்டதை அறிந்தேன். அவ்வாறு பார்க்கும் வசதி இருப்பதால் அளவு சரியாக உள்ளதா என் அறிய முடிகிறது. அளவை தெரிந்துகொள்ளும் வகையில் அமைந்துள்ள ஓர் அற்புதமான கண்டுபிடிப்பு இது என்கிறார் அல்லூர் P.இராதாகிருஷ்ணன்.
--இதில், சர்க்கரை நோயுள்ளோர், இதிலிருந்து மீறி உடற்பயிற்சி செய்யும் முறைகளை வயது வாரியாக எடுத்தியம்பியதற்கு நன்றி. இது போன்ற நிகழ்ச்சி நேரம் கூடுதலாக்கப்பட வேண்டும் என்று பரசலூர் P.S.சேகர் தெரிவித்தார்.
--தேவராஜ், பால்ராஜ் நேயர்களின் கருத்துக்கள், சீன வானொலி ஒலிபரப்பியது. அவர்கள் கூறிய கருத்துக்கள், என்னைப் போன்ற நேயரின் கருத்துகளும் ஒன்றே. ஏனென்றால் நலவாழ்வு நிகழ்ச்சியில் கூறிய மருத்துவம் நோயாரிகளின் நோயைக் குணமாக்குவது போன்று அமைகிறது. இந்நிகழ்ச்சி கூறுகின்ற தகவல், என்னை நேயர்களுக்கு மிகவும் பயனுள்ள நிகழ்ச்சிகளாக இருக்கிறது என்கிறார், கண்மனியப்புரம் M.ராமச்சந்திரன்.
--கலையரசி வழங்கிய நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சியில், கடவுள் எனும் சொல்லுக்கு தன்னைக் கடந்து மனதின் உள்ளே செல்லுதல் என்று, நேயர் ஒருவர் வழங்கிய விளக்கம் புதுமையாகவும் வித்தியாசமாகவும் இருந்தது. இந்நிகழ்ச்சியில் நேயர்களின் சொந்தக்குரலில் தகவல்கள் இடம்பெறுவது பாராட்டத்தக்கது என்கிறார் பாண்டிச்சேரி R.S.ஸ்ரீனிவாசன்.
--இதில், புகைப்படித்தல் பற்றிய கட்டுரையைக் கேட்டேன். மேலை நாட்டினர் கீழை நாடுகளுக்கு விட்டுச்சென்ற மாபெரும் தொற்று நோய்களில் ஒன்று, புகைப்பிடிக்கும் ஒழுக்கம். புகைப்பிடிப்பதால் பல்வேறு நோய்கள் ஏற்படுவதையும், ஆண்டுதோறும் ஏராளமான மக்கள் உயிரிழப்பதையும் நமது அரசுகள் நன்கு உணர்த்திருக்கின்றன என்கிறார் மணமேடு M.தேவராஜா.
சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியில் இடம்பெற்ற, சுவையான சீன வறுவல், நேயர்களுக்கு மிகவும் பிடிக்கிறது. நிகழ்ச்சியைக் கேட்ட பிறகு, பல நேயர்கள் சீன உணவைத் தயாரிக்கப் பழகி வருகின்றனர்.
--இதில் வேர்கடலை அவியல் பற்றிய நிகழ்ச்சியை கேட்கமுடிந்தது. தமிழ்நாட்டில் எனது வீட்டில் வேர்கடலை அவியல் மற்றும் வேர்கடலை வறுத்தல் போன்றவற்றை செய்வோம் என்கிறார் 30 பள்ளிப்பட்டி, N.கார்த்திகேயன்.
--முட்டை இறைச்சி தூள் சூப் தயாரிப்பது எப்படி? என்பதை அறிவித்து இருந்தீர்கள். அதையே இன்று மறு ஒலிபரப்பாக வழங்கியது அருமை என்கிறார் செல்லூர் N.சீனிவாசன்.
--சீன உணவு அரங்கில் இன்று இறைச்சி முட்டை வறுவல் தயாரிப்பு பற்றி கேட்டேன். நிலைக்கும் போது நாக்கில் எச்சில் ஊறுகிறது. எளிய முறையாகத்தான் உள்ளது என்கிறார், விழுப்புரம், S.பாண்டியராஜன்.
--இந்நிகழ்ச்சியில் வழங்கலுக்கு மாறாக புதுமையான பழங்கலைக்கொண்டு சத்தான உணவாக இடம்பெற்றுள்ளது. இது எல்லோருக்கும் ஏற்றவகையில் சூப் உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் பழரசமாகும் என்கிறார், 30 பள்ளிப்பட்டி A.காமாட்சி சுந்தரம்.
|