தற்போது வளர்ச்சிக் கட்டத்திலேயே உள்ள சீனப் பொருளாதாரம், இவ்வாண்டு விரைவாக வளர்ச்சி அடையும் என்று சீன அரசவை வளர்ச்சி ஆய்வு மையத்தின் துணை தலைவர் Xie Fu Zhan கூறியுள்ளார். அண்மையில் செய்தியாளருக்குப் பேட்டி அளித்த அவர், சீனப் பொருளாதாரத்தில், தொழில் மயமாக்கமும் நகரமயமாக்கமும் சீராக வளர்ந்து, நுகர்வு கட்டமைப்பு விரைந்து வளரும் நிலையில் உள்ளது என்றார். தவிர, அரசு சார் தொழில் நிறுவனங்களின் சீர்திருத்தத்தின் அளவும், தனியார் பொருளாதாரத்தின் ஆற்றலும் வலுவடைவது, இவ்வாண்டு சீனப் பொருளாதாரத்தின் வேகமான வளர்ச்சியை விரைவுபடுத்தும் என்றும் அவர் கூறினார்.
|