தவிர, சுங்க வரியை சீனா பெருமளவில் குறைத்து சேவை சந்தையின் கதவுகளை திறந்திருப்பது வரவேற்கத்தக்கது. எதிர்க்காலத்தில் சீனா மற்றும் சார்பு நாடுகளின் வளர்ச்சிக்கு இந்த வாக்குறுதி செயல் மிகுந்த நன்மை பயக்கும் என்பதில் ஐயமில்லை என்று மின்னக்கல் இ செல்வராஜ் தமது கடிதத்தில் கூறினார்.
உலக சுற்றுலா அழகி பற்றிய நிகழ்ச்சியில் இந்தியாவின் அழகி இந்த போட்டியில் உலக சுற்றுலா அழகியாக தெரிவு செய்யப்பட்டு இருப்பது பற்றியும் சீன அழகி மூன்றாவது இடம் பெற்று இருப்பதையும் அறிந்து கொண்டேன். மேலும் இப்போட்டி சீனாவின் நடைபெற்றது பற்றியும் மேலும் பல அரிய நிகழ்வுகளை கருத்து தெனிவுடன் வழங்கியுள்ளீர்கள் மிக்க நன்றி என்று சீ பாரதி தமது செப்டெம்பர் திங்களின் கடிதத்தில் தெரிவித்தார்.
மாணவர்கள் சமுதாயத்தை கருத்திற்கொண்டு அதன் மேம்பாட்டிற்காக ஒலிபரப்பும் நிகழ்ச்சிகளான கேள்வியும் பதிலும் அறிவியல் உலகம் சீனக் கதைகள் பல தரப்பட்ட செய்திகள் போன்றவை மிகவும் பயனுள்ளதாகவும் மெச்சத்தக்கதாகவும் உள்ளது என்று இலங்கையிலிருந்து ஒரு மாணவர் பி எம் ஷியாம் கூறியுள்ளார்.
நட்பு பாலம் நிகழ்ச்சியில் முன்னாள் தமிழ்நாடு சட்ட மன்ற தலைவர் திரு தமிழ் குடி மகன் மறைவக்கு அஞ்சலி அனைத்து நேயர்களும் அஞ்சலி செலுத்தியஎழுதியதும் அதை வாசித்த விதமும் கேட்பதற்கு அஞ்சலி செலுத்தியது போல் இருந்தது
சீனாவில் இன்பபயணம் நிகழ்ச்சியில் அங்க்தான் பிரதேசத்தை பற்றி கூறியது கேட்டு ரசித்தோம். இங்குள்ள கடற்கரையில் பயணிகள் நீச்சலடிப்பதும் காதலர்கள் ஊர் சுற்றுலாவும் இன்ப சுற்றுலாவை நேரில் சுவைப்பது போல் உள்ளது என்று கி கி பொன்ஜா தமது கடிதங்களில் தெரிவித்தார்.
நேயர் நேரம் நிகழ்ச்சியில் முனைவர் தமிழ்குடி மகன் அவர்களின் இழப்பு எங்களுக்கு மட்டுமல்ல சீன வானொலி பணியாளர்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். சீன வானொலி பணியாளர்களின் சார்பில் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் பணியையும் அவரது உறவினர்களுக்கும் ஆறுதல் கூறும் பொறுப்பையும் எங்களுக்கு வழங்கிய வளவனூர் புதுப்பாளையம். எஸ் செல்வம் அவர்களுக்கு நாங்கள் நன்றி சொல்ல கடமைபட்டு உள்ளோம்
அறிவியல் குழந்தைகளின் மனதை தொலைகாட்சி அலை வரிசைகள் எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதை தெளிவாக உணர்ந்து கொண்டோம். ரெக்ஸிங், ரேப்பிங், கில்லிங், பாக்ஸிங் போன்ற காட்சிகளை குழந்தைகளின் பார்வைக்கு கொண்டு வரும் தொல்லை காட்சி பெட்டிகளை இனி தவிர்ப்போம். தரமான நிகழ்ச்சிகளை தரும் சீன வானொலி ஒலிபரப்பின் வழி நடப்போம்.
DNA வின் கட்டமைப்பை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்த மாமேதை பிரான்ஸிஸ் சீரிக்கை பற்றிய வரலாற்று தொகுப்பை கேட்டோம். அவரின் ஆராய்ச்சி முடிவுகளை பற்றிய குறிப்புகளில் DNA வின் மாற்றங்களால் ஒரு மனிதனுக்கு உடல் ரீதியாக உண்டாகும் பாதிப்புகள் பற்றியும் அதை தவிர்க்கும் சிகிச்சை முறைகளை பற்றியும் தகவல்கள் எதுவுமே இடம் பெறாதது நெஞ்சை நெருடியது என்று மதுரையிலிருந்து வருகின்ற அனுப்புநர் தமது கடந்த ஜனவரி திங்களின் கடிதத்தில் கூறினார்.
|